Tuesday, 13 March 2018

வீரம்

வீரம்
-----------
அடுப்பூதும் பெண்ணுக்கு கல்வி வேண்டும்
சேவை செய்யும் சேவகிக்கு
வேலை வேண்டும்
குடும்பத்தை காக்க ஒரு பெண் வேண்டும்
நாட்டை காக்க பல பெண்கள் வேண்டும்

லாரி ஓட்டும் மானாக
விமானம் ஓட்டு விமானியாக
துப்பாக்கி ஏந்திய வீரச்சியாக
அறிவுகள் கொட்டும் களஞ்சியமாக
பெண்ணே நீ வளர வேண்டும்

வீரத்தில் ஜான்சிராணியாக
சேவையில் அன்னை தெரசாவாக
அர்ப்பணிப்பில் கல்பனா சாவ்லாவாக
விளையாட்டில் மிதாலி வீராங்கனையாக
வளர்ந்திட வேண்டும்
வீரமான பெண் என
உலகம் உன்னை  போற்றிட வேண்டும்
- - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment