Tuesday, 13 March 2018

காட்சியும் கானமும்

காட்சியும் கானமும்
-----------------------------
ராமனுக்கே முடிசூட்டும் படலம்
மகிழ்ச்சியில் ஓடினான்
மன்னன் தசரதன், மனைவியை நாடி
கைகேயி அந்தபுரம் வந்தான்

பொருட்கள் சிதறிக் கிடக்க
மாளிகை வெறுமையாக காட்சியளிக்க
பார்த்தான் தசரதன்,
சாந்த மனைவியை புகழ்ந்தே வந்தான்

தலைவிரிக்கோலத்தில் மனைவியைக்
கண்டான்
கைகேயி சரிந்துக் கிடக்க
நெஞ்சம் பதைக்க,
கைகேயியை கையில் ஏந்த
மேல் பட்ட கையை
தட்டி விடாமல் பட்டும் படாமல்
நகர்ந்தாள்

நீண்ட கெஞ்சல் ,
மனைவிக்கு என்ன ஆனதோ
படபடக்க தசரதன் கேட்டான்
தனக்கு இரண்டு வரம் கேட்டாள்
பரதன் நாடாள, ராமன் காடாள
வரம் கொடு என்றாள்

சரிந்து விழுந்தான் தசரதன்
பாம்பிற்கு பால் வார்த்தோம்
என்ற அச்சம்,
அன்பான மனைவியின்
திடீர் விசும்பல்,
காட்டேரியான கைகேயி
பரதனே நாடாள
வரத்தை கேட்டாள்

மனைவி காலில் விழுந்தான் கணவன்
மண்டியிட்டான், கதறினான்
கல் நெஞ்சம் கொண்டாள் கைகேயி
பிடிவாதத்தில் உறுதி கொண்டாள்

பரதன் ஆளட்டும் நாட்டை
ராமன் ஆளட்டும் காட்டை
நான் ஆள்கிறேன் சுடுகாட்டை
உன்னை மகிழ்ச்சி ஆளட்டும்

சாபம் கொடுத்தே
விடைப் பெற்றான் தசரதன்
எண்ணம் ஈடேறியதில்
தசரதனை வென்றாள் கைகேயி
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment