எந்தன் நெஞ்சில்
நீங்காத தென்றல் நீதானா
______________________________
நாட்களை எண்ணியிருந்தேன்
மணம் முடிப்பது எப்பொழுதென
ஆசைகளை அடுக்கி வைத்தேன்
அடுக்கடுக்காய் ஆவாரம் பூவென
அந்தி சாயும் மாலையிலே
மாலையிட காத்திருந்தேன்
அருகம்புல் சாராக
உனை அருந்திட ஆவல் கொண்டேன்
கரும்புச் சாராய் உனை நான் நினைக்கவில்லை
இனிப்பாய் நீ இருந்திட்டால்
என் காதல் நோய் தீர்ந்திடாது
அருகாய் அருந்தியே
இளமையுடன் காத்திருப்பேன்
இமைகள் மூடாமல் இருப்பது ஏனோ
விழியில் நீ குடியேறினாய்
இமயமாய் நான் இருந்திடுவேன்
அருவியாய் நீ ஊர்ந்து வா
ஆலமரமாய் நானிருக்க
பச்சைக்கிளியாய் வந்து குடியேறிட வா
உடலாய் நானிருக்க
உயிராய் நீ வருவாய்
தசையாக நான் மாறிடவே
அதில் நரம்பாய் நீ பதிந்திடுவாய்
இதயம் நான்
அதில் ஊரும் ரத்தம் நீதானே
நெஞ்சம் என்னுடையது
அதில் தென்றலாய் வந்தமர்ந்திட வா
- - - - - - - - - - - - - - - - -
No comments:
Post a Comment