பெண்மையை போற்றுவோம்
-------------------------------------------- --
தாயாக பாசம் தந்தவள்
தங்கையாக போட்டித் தந்தவள்
அக்காவாக அரவணைத்தவள்
அத்தையாக அன்பை தந்தவள்
பாட்டியாக அறிவை வளர்த்தவள்,
அண்ணியாக வந்து அம்மா ஆனவள்
பெரியன்னையாய் பேணிக் காத்தவள்
சிற்றன்னையாய் நம் சிறகை விரித்தவள்,
தோழியாய் தோள் கொடுப்பவள்
மனைவியாய் வந்து மொத்தமும் தந்தவள்
பெண்மையாய் பெருமை சேர்ப்பவள்
அவள் பெண்மையைப் போற்றுவோம்
பெண்ணியம் காப்போம்
-----------------------------------
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment