Tuesday, 13 March 2018

மறந்து விடு உயிரே

மறந்து விடு உயிரே
- - - - - - - - - - - - - - - -
மறந்து விடு உயிரே
மறக்க நினைத்தும் தோற்றுப் போகிறேன்
உயிரை துறக்க எண்ணியும்
உறவாட நினைக்கின்றேன்

என்னுள் என்ன மாயம் செய்தாய்
ஏன் என்னை ஏற்க மறுக்கின்றாய்
நினைவலைகள் முழுவதும்  நீதானே
கலந்துள்ளாய்
ஏன் என்னை விட்டு விலகி செல்கிறாய்

மறந்து விடு உயிரே
அவளை உன்னில் இருந்து பிரித்து விடு
அன்பை ஊட்டி கண்ணீரை பரிசளித்தாய்
என் கண்ணீரால் சாபமிடுகிறேன்
அவள் எனக்கே வேண்டுமென்று,

எங்கு சென்றாலும்
உடன் வருவதாய் நினைக்கின்றேன்,
நினைவுகளே என்னை கொல்லும்
ஆயுதமாக மாற்றியதன் ரகசியமென்ன
உயிரே என்னை கொன்று விடு
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment