பூந்தளிர்
- - - - - - - - - - - - - -
நேற்று மொட்டானாய்
இன்று மலர்ந்தாய்
நாளைய பூந்தளிர் நீ
காயாகி, பழமாகி
விதையாகி விருட்சமாய் வளர்ந்திட
நல்லதை அனுபவித்து அறிந்திட
கெட்டதை அறிந்து தவிர்த்திட
நல்சொல் கேட்டு வளர்ந்திட
தீயவை கண்டால் குருடாகி
தீச்சொல் கேட்டால் செவிடாகி
நல்லதை கேட்டிட வேண்டும்
நல்லதை பார்த்திட வேண்டும்
இன்முகம் மலர்ந்திட வேண்டும்
என்றும் விழிப்பாய் வாழ்ந்திட வேண்டும்
பூவுக்கு வண்ணமுண்டு
வாழ்க்கை வண்ண மயமாகட்டும்
மலருக்கு வாசம் உண்டு
உன் எதிர்காலம் சிறப்பாகட்டும்
நல்லறிவுப் பெற்று
ஆயிரம் குழிகளை கடந்து
எதிரிகளை வெற்றிக் கொண்டு
துரோகத்தை அழித்து விட்டு
சாதனைகள் செய்திட வேண்டும்
அவதூறுகளை தவிடு பொடியாக்கி
ஆணிற்கு சமமாய் திரிந்திட வேண்டும்
மங்கையற் குலத்திற்கு
பெருமை செய்திட வேண்டும்
உன் கண்களை
ஆயிரம் கண்கள் நோக்கிட வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment