ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
_______________________________________
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு
கிணற்றில் போட்டாலும்
எண்ணிப் போடு
அகத்தில் போட்டாலும்
கணக்கிட்டுப் போடு
வரவு எட்டனா
செலவு பத்தனா
வரவை பெருக்குவோம்
செலவை குறைப்போம்
சேமிப்பை பெருக்குவோம்
மிதமிஞ்சிப் போனதா
தானங்கள் செய்திடு
கணக்கில் சேர்த்திடு
குடலில் போட்டாலும்
வேண்டியதை போடு
வேண்டாதவையின் சேர்க்கையே
நோயின் ஆரம்பம்
உணவுக் கட்டுப்பாடு
அவசியம் தேவை
உள்ளம் நலம் பெற
உடல் நன்றாக வேண்டும்
அளக்காமல் போட்டால்
நோய்கள் அண்டிடும்
உடலும் குன்றிடும்
உள்ளமும் வாடிவிடும்
ஆரோக்கியம் முக்கியம்
உயிர் வாழ அவசியம்
ஆற்றில் போட்டால்
செல்வம் குறைந்திடும்
அகத்தில் போட்டால்
ஆயுள் குறைந்திடும்
அளவாய் போட்டு
ஆரோக்கியமாய் வாழ்வோம்
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
Tuesday, 13 March 2018
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment