Tuesday, 13 March 2018

திருடிய இதயத்தை

திருடிய இதயத்தை
- - - - - - - - - - - - - - - - - - -
திருடிய இதயத்தை திருப்பித் தருவாயா
நீ திருடிய மனதில் காதலை வடிப்பாயா
வாங்கிய முத்தம் நினைவுச் சின்னமாய்
மனதில் பதித்த வைரக் கல்லாய்

உன் சுவடுகள் என்னில் ஆயிரம் இருக்க
கடலலையாய் அழித்து சென்றாயோ
கல்லில் செதுக்கிய ஓவியம் நானோ
நீ அழித்தும் உயிர் பெற்றேனே!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment