Sunday, 8 September 2019

விருத்தாசலம் பகுதியில் ஜப்பான் காடை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்

































விருத்தாசலம் பகுதியில்
ஜப்பான் காடை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்

விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ளது விஜயமாநகரம் கிராமம். மணல் கலந்த வண்டல் மண் செறிந்துள்ள பகுதியாகையால் இக்கிராமத்தில் நெல், கரும்பு, மணிலா போன்ற பயிர்களையே விவசாயிகள் பிரதான பயிராக பயிர் செய்து வருகின்றனர். எனினும் வருண பகவான் கருணை காட்டாததால் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் விவசாயிகள் விவசாய பயிர்களை பயிரிட முடியாமல் கடும் சிரமத்தை அடைந்து வருகின்றனர். அப்படியே சில பெரும் விவசாயிகள் தங்களிடம் உள்ள ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி ஒரு சில ஏக்கர்களில் மட்டுமே நெல் போன்ற பயிர்களை பயிரிட்டாலும் சில நேரங்களில் அதற்கும் அறிவிக்கபடாத மின்வெட்டினால் நீர் பாசனம் செய்வது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தற்போது இப்பகுதி விவசாயிகள் தோட்டக்கலை துறையை சார்ந்த பயிர்களை பயிரிடுவதிலும் விவசாய துணை தொழிலான கோழிவளர்ப்பு, ஆடு,மாடுகள், காடை வளர்ப்பு வளர்ப்பிலும்  உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். விஜயமாநகரத்தில் இதுவரை யாரும் செய்யாத தொழிலாகிய ஜப்பான் காடை வளர்ப்புக்கு முன்னோடியாக மணிமாறன் என்ற விவசாயி ஜப்பான் காடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். காடை  வளர்ப்பு முறைகள் பற்றி விவசாயி மணிமாறன் கூறும்போது நான் கடந்த ஒருவருடமாகதான் காடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றேன். காடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கிறது. விவசாய பயிர்கள் பயிரிடுவதை விட இந்த தொழில் எனக்கு லாபகரமாக தெரிகிறது, ஒரு காடை குஞ்சி ரூபாய் 7 க்கு வாங்கி 30 நாட்கள் வளர்த்து விற்பனை செய்தால் ரூபாய் 30 லிருந்து 50 வரை விற்பனை செய்யமுடியும்.  காடை  வளர்ப்பில்  தீவன பராமறிப்பு என்பது முக்கியமானது. காடை வளர்ப்பு செலவில் 70 சதவீதம் வரை தீவனத்திற்காக செலவிடப்படுவதால் தீவனம் வீணாகமால் காடைகளால் செலவிடப்பட்டால் மட்டுமே முழுமையான லாபத்தை பெற முடியும். இதனால் 40 க்கும் மேற்பட்ட சத்துக்கள் தேவை படுவதனால் நீர், கொழுப்பு,  கார்போஹைட்ரேட், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவாசிய சத்துகளை இடுவது எள்பது முக்கியமாகும். அடுத்து வளர்ப்பில் அதிக பராமறிப்புகள் தேவை. ஆனால் பராமறிப்பு மிகவும் குறைவான தொழிலாகும். கொட்டகை அமைத்தல் என்பது பாதுகாப்பானதாகவும் நீண்டநாள் தாக்குபிடிக்கக்கூடிய வகையில் கொட்டகை அமைத்தல் வேண்டும், 100 சதவீதம் லாபகரமான தொழில் என தெரிவித்தார். இந்த காடை பண்ணையை விவசாயிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதேபோல விஜயமாநகரத்தைச் சுற்றிலும் தற்போது காடை வளர்ப்பு தொழில் சூடுபிடித்துள்ளது.

No comments:

Post a Comment