Sunday, 8 September 2019

கொளஞ்சியப்பர்








குடும்ப ஒற்றுமையை தழைக்க செய்யும்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர்

தமிழகத்தில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன, அந்த வரிசையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மணவாளநல்லூர்  கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் பரவலாக பக்தர்கள் திரளாக வந்து செல்கின்றனர். ªளிமாநில பக்தர்களும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பக்தர்களும் கொளஞ்சியப்பரை தரிசிக்காமல் சென்றது கிடையாது.  கோவிலில் பங்குணி மாதம் உத்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இந்த கோவில் அமைந்துள்ள இடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடுகளாக காட்சியளித்தது. அப்போது அந்த காட்டில் கொளஞ்சி செடியின் நடுவே பலி பீடத்தின மேல் பசு மாடு ஒன்று தானாக பால்சொரிந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின் அந்த பலி பீடம் புனித தெய்வம் என்று கருதி பக்தர்கள் வழிபட¢தொடங்கினர்.

இந்நிலையில் சாமி உருவமின்றி இருந்ததால் எந்த தெய்வம் என கண்டறிவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஆன்மிக வாதிகள் ஆராய்ந்த போது திருமுதுகுன்றத்து ஈசனாகிய பரம்பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம்
சுந்தரர், தம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்க செய், என்ற கூற்று வரலாற்றில் இருந்தது கண்டறியப்பட்டது.

அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் முருகன் தான் பலி பீட உருவில் அமர்ந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பலி பீடமாக உருவாகியுள்ள அவருக்கு கொளசியப்பர் என பெயர் சூட்டி பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

இக்கோவிலில் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குரு அகபேய் சித்தர் இந்த திருத்தளத்தில் ஜீவசித்தி பெற்றுள்ளார், என செவி வழி செய்தி ஒன்று உண்டு. இந்த கோவிலில் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறக்கப்படுகிறது. இங்கு
காலசந்தி, உச்சிகாலம், சாய ரட்சை, அர்த்த சாமம் என 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்களில் வேண்டுதல் நிறைவேறினால் சேவல் கோழி, கால்நடைகளை காணிக்கை செலுத்-துவது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றவர்கள் இந்த கோவில் வந்து தரிசித்த பின்பு அவர்களின் கருத்து வேறுபாடு மறைந்து அன்யோன்யமாக ஒருவர் இல்லையேல் மற்றொருவர் இல்லை என்ற அளவிற்கு அன்பு மலரச்செய்வதுதான் இந்த கொளஞ்சியப்பரின் அருள் பணியாகும் என சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். குடும்ப பிரச்சினையா, சொத்து பிரச்சினையால் குடும்பத்தில் பிரிவு ஏற்படுகிறதா? கவலையே படாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து கொளஞ்சியப்பரையும் அவரது அண்ணன் கணேச மூத்தியையும் ஒருசேர மனதில் பயபக்தியுடன் நினைத்து வழிபட்டால் போதும். அவர்களின் பிரச்சினை சூரியனை கண்ட பனித்துளி போல விலகுமாம். குடும்ப ஒற்றுமையை மலரச்செய்வதில் கொளஞ்சியப்பருக்கு நிகர் கொளஞ்சியப்பர்தான் என பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலின் பல்வேறு சிறப்புகளை சொல்லிக்கொண்டு செல்லும் வேலையில் -தீராத நோயுள்ளவர்கள் இக்கோவிலில் ஒரு மண்டலம் தங்கி கொளஞ்சியப்பருக்கு பூஜை செய்து வந்தால் நோய் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அதன்படி இந்த திருத்தளத்தில் தீராத
நோயுள்ளவர்கள் ஒரு மண்டலம், அரை மண்டலம் என தங்கி கொளஞ்சியப்பரை தினமும் பூஜை செய்து வேப்ப எண்ணெயினை உடம்பில் பூசியும், அருந்தியும் வருவார்கள். இதில் அனைத்து நோய்களும் பூரண குணமடைந்து நோயாளிகள் வீடு திரும்புகின்றார்கள். மேலும் கை, கால் கழுத்துவலி ஏற்பட்டவர்கள் கொளஞ்சியப்பரை வழிபாடு நடத்தி வேப்ப எண்ணெய் எடுத்து மருந்தாக உடலில் பூசிக்கொள்கின்றனர்.

விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது(கோரிக்கை மனு) கட்டுவது தனி சிறப்பு. ஒரு பக்தரின் நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் கொளசியப்பருக்கு ஒரு
கோரிக்கை மனு எழுதி கோவிலில் உள்ள முனியப்பர் சன்னதியில் அமைந்துள்ள வேலில் பிராதை கட்ட வேண்டும். பிராது கட்டிய நாளில் இருந்து 90 நாளுக்குள் அந்த கோரிக்கை முழுவதுமாக நிறைவேறும் என்பது ஐதீகம். அவ்வாறு கோரிக்கை நிறைவேறினால் மனுகொடுத்த பக்தர் கோவிலில் கட்டிய பிராதுவை வாபஸ் பெற ஒரு பிராது கட்ட வேண்டும் என்ற முறை உள்ளது. அதன்படி விருத்தாசலம், கடலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து பிராது கட்டி வருகின்றனர். பிராது கட்டணமாக பக்தரின் வீட்டிலிருந்து கோவிலுக்கு உள்ள தூரத்தினை மையப்படுத்தி ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 பைசா வீதம் பணம் வசுலிக்கப்படுகிறது.

கோவிலில் வெள்ளித்தேர் புறப்பாடு உள்ளது. பொதுவாக கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் தினத்தன்று இந்த வெள்ளித்தேர் புறப்பாடு நடைபெறும்.

கோவில் வாளகத்தில் மான், மயில்கள் போன்ற உயிரினங்கள் வளரக்கப்பட்டு வருகின்றனர்.
வளாகத்தில் விற்கப்படும் காய்கறிகள், பொறிகளை பக்தர்கள் வாங்கி மான், மயிலுக்கு உணவாக தருகின்றனர். அவைகள் சாப்பிடும் அழகை பார்க்கும் பக்தர்களுக்கு மணமகிழ்ச்சி ஏற்படுவதுடன் மன அழத்தங்கள் குறைவதாகவும் தெரிவிக்கின்றனர். மயில்கள் தோகை விரித்தாடும் காட்சியை பார்க்கும் போது நேரம் செல்வதே தெரியாது.

உங்களுக்கு நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? மனமகிழ்ச்சி தேவைபடுகிறதா? ஒரு முறை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து விட்டு செல்லுங்களேன்.

No comments:

Post a Comment