Sunday, 8 September 2019

5 ன் சிறப்புகளால் ஆன விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்

5 ன் சிறப்புகளால் ஆன விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்
விருத்தாசலம்,
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வரும் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிஸீஸ்வரர் கோவிலில்  பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால் நினைத்தால், இறந்தால் என இந்த 5 ல் ஏதேனும் ஒன்று நடந்தாலும் முக்தி நிச்சயம்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் விருத்தாசலம் விருத்தகிறீஸ்வரர் கோவில் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் விருத்தாசலம் என்ற வடமொழிச்சொல்லால் அழைக்கப்பட்டது. விருத்தம் என்றால் பழமை என்றும் அசலம் என்றால் மலை என்றும் அழைக்கப்படுகிறது. காலத்தால் மிகவும் முற்பட்ட மலையாகும். சிவபெருமான் முதன்முதலில் இங்கு மலை வடிவில்தான் தோன்றினார் என்றும் இந்த மலை தோன்றிய பின்புதான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியுள்ளது, என்றும் கூறப்படுகிறது. திருவண்ணாமலைக்கு முந்திய மலை பழமலை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த தளம் முன்பொரு காலத்தில் குன்று வடிவில் இருந்ததாம்.

விபசித்து முனிவர் முக்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோவிலில் தங்கியதால் அவருக்கு  திருப்பணி செய்யும் அருள் கிடைத்தது. இத்திருக்கோவிலில் தல மரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோவிலின் திருப்பணிகளின் போது விபசித்து முனிவர் தொழிலாளர்களுக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபு வழியாக பேசப்பட்டு வருகிறது. இந்த வன்னி மரம் 1700 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  இந்த கோவிலுக்கு விருத்தகாசி என்ற பெயரும் உண்டு. காசியை போன்று இத்தள தீர்த்தமான மணிமுக்தாநதியும் புண்ணிய நதியாகும். மணிமுக்தாநதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால் காசியில் நீராடி விஸ்வநாரை வழிபட்ட பலன் கிடைக்கும், அதனால் விருத்தகாசி என்ற பெயர் உண்டாயிற்று என்று வரலாறு தெரிவிக்கின்றன. மேலும் மணிமுக்தாநதியில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் அது கல்லாக மாறிவிடும் என்பது ஐதீகம்.இந்த தளத்திற்கு வந்து இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் கிடத்தி தன் புடவையால் விசிறி விடும் போது அந்த உயிர்களின் பாவங்கள் நீங்கிவிடுகிறது. சிவபெருமான் அருகில் விருத்தாம்பிகை அமர்ந்துக்கொண்டு உயிர்கள் மோட்சம் அடைவதற்காக நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலப்புராணம் கூறுகிறது.

ஒரு முறை திருவண்ணாமலைக்கு செல்ல வந்த குருநமச்சிவாயர் என்ற சித்தர் இந்ததளத்தில் தங்கிய போது கடும் பசி ஏற்பட்டது. பசியை போக்க பெரியநாயகியிடம் சோறு வேண்டி கிழத்தி என்று தொடங்கும் ஒரு பாடலை பாடினார். இதனை கேட்ட பெரிய நாயகி கிழத்தி வேடத்தில் வந்து கிழவி சோறு எப்படி கொண்டு வர முடியும் என கேட்டுவிட்டு மறைந்துவிட்டார். பின் குருநமச்சிவாயர் அம்மனை புகழ்ந்து பாடியதும், அந்த பாடலில் மயங்கிய பெரியநாயகி இளம் பெண் வேடத்தில் வந்து காட்சி கொடுத்ததுடன் அவர் உண்பதற்கு உணவு கொடுத்தார். அன்று முதல் பெரிய நாயகி பாலாம்பிகை என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

இத்தலத்து ஈசனான முதுகுன்ற பெருமானை பாட மருத்துச்சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாடவைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்தார். அதனை சுந்தரரால் எடுத்துச்செல்லும் போது களவு போய்விடும் என்பதால் மணிமுக்தாநதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள் என்று ஈசன் அருள் கொடுத்ததாக தல வரலாற்றுச்செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மன்னன் ஒருவர் இந்த கோவிலுக்கு வந்த போது பசியால் வாடியதாகவும், அப்போது விருத்தாம்பிகை இளமை வடிவம் எடுத்து பாலூட்டி குமார தேவர் என பெயர் சூட்டினாள் என்பது வரலாறு.
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவை 288 லிங்கங்களாக இத்தளத்தில் முருகபெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன.

முருகபெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போன்று விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. இதில் இரண்டாம் படை வீடாக இத்தளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆழத்து விநாயகர் அமைந்துள்ளார். ராஜகோபுரத்தை அடுத்து இடதுபக்கமாக ஆழத்து விநாயகர் கோவில் 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. காளகஸ்தியில் உள்ளது போல 18 படி இறங்கி சென்று தரிசினம் செய்வது போல பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஒரு முறை உலகம் அழிந்த போது இந்த தளம் மட்டும் அழியாமல் இருந்தது, என்ற புராண சிறப்பையும் இக்கோவில் பெற்றுள்ளது. சிவ தளங்களில் 1008 தளங்கள் சிறப்பானதாக கூறப்படுகிறது. இதில் நான்கு தளங்கள் முக்கியமானது. அதில் விருத்தாசலமும் ஒன்றாகும். சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத் திருத்தளமாகும்.

இந்த கோவிலில் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், அம்பாள் விசேஷம், வசந்த உற்சவம், ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசினம், கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி, அமாவசை, பிரதோஷ தினங்களில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று சாமி தரிசினம் செய்வார்கள். காலை 6 முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

 பெரியநாயகி அன்னை பதிகம், சேக்ஷாத்திர கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன நவமணி மாலை, கருதரிசின பதிகம், பிள்ளை தமிழ் ஆகிய நூல்கள் இத்தளத்தை பற்றி பாடப்பட்டுள்ள நூல்களாகும்.

ஈசனை வழிபடுவோர்க்கு மன அமைதியும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் தீர்ந்து விடுகிறது, திருமணம் தடைபட்டு வருபவர்கள் இங்குள்ள துர்கையம்மனை வழிபட்டால் திருமணம் கூடி வரும். குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். ஞாயிறு அன்று ராகு கால பூஜையில் வடை மாலை சாத்தி பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்கி விடும். இத்தளத்து பெருமானை வழிபட்டால் இம்மை மருமை பயன்கள் கிடைக்கும் என்று சம்பந்தர் பாடியுள்ளார். மணிமுக்தாநதியில் நீராடினால் சித்தி பெருவதுடன் முக்தி கிடைக்கும் என புராண நூல்கள் குறிப்பிடுகின்றன.

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு எல்லாமே ஐந்து ஐந்தாக உள்ளது.
5 மூர்த்தங்கள்; விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்
5 இறைவனின் திருநாமங்கள்; விருத்தகிறீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.
5 விநாயகர்; ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜகணபதி, வல்லப கணபதி
இறைவனை தரிசினம் கண்ட 5 பேர்; உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமாரதேவர், நாதஸ்சர்மா, அனவர்த்தினி
5 கோபுரங்கள்; கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.
5 பிரகாரங்கள்; தோரோடும் திருச்சுற்று, கைலாயதிருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்தி மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.
5 நந்திகள்; இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடை நந்தி, தர்மநந்தி
5தீர்த்தங்கள்& மணிமு'தாறு தீர்த்தம், அ'னி தீர்த்தம், ச'கர தீர்த்தம், குபேர தீர்த்தம், நித்யானந்த கூபம் ஆகிய 5 தீர்த்தங்கள் உள்ளன.
 இதுதவிர இ'கோவிலில் பஞ்சலிங்கங்கங்கள், ஒரே மாதத்தில் 5 சிறப்பு வழிபாடுகள், ஒரே ஆண்டில் 5 சிறப்பு விழா'கள், மாசி மக விழாவில் சிவனில் படைத்தல், காத்தல், அழித்தல், அருள்புரிதல், மறைத்தல் உள்ளிட்ட 5 தொழில்கள், பஞ்ச தீப வழிபாடுகள், 5 நித்ய வழிபாடுகள், 5 பழமலை நாதர் திரு'கோவில்கள், பழமலைநாதர் காட்சி அருளிய திருத்தலங்கள் 5, 5 விநாயகர், 5 சொ'கப்பணை, திருமால், பிரம்மா, குபேரன், குபேரன் தங்கை ஆகிய 5 தேவர்கள் வழிப்பட்ட இடம், பழமலை நாதரை வழிப்பட்ட முனிவர்கள் 5 பேர், உள்மண்டபங்கள் 5, வெளிமண்டபங்கள் 5, எந்த காலத்திலும் எந்த தலத்தில் இல்லாத 5 சிறப்புகளான 63 நயன்மார்களு'கும் பெரியநாயகர், பெரியநாயகி காட்சியளித்தது, 28 ஆகம திரு'கோவில்கள், நாதசர்மாக அனவர்த்தினி, அருளாளரின் பதிகம் முப்பிள்ளையார் அருகத்தில் பலி பீடத்தில் உள்ளது, ஆழத்து விநாயகர் ஆகியவையாகும். ௶ழமலைநாதரின் திருநாமங்கள் 5, ஊரின் 5 திருநாமங்கள், 5 பூஜை கால நேரங்கள் உள்ளிட்ட அனைத்தும் 5ன் சிறப்புகளாக அமைந்துள்ளது.

இந்த கோவிலில் 5 தீர்த்தங்களில் குபேர தீர்த்தமும் ஒன்றாகும். இந்த தீர்த்தம் விருத்தாம்பிகை அம்மன் சன்னதி நேர் எதிரில் மடப்பள்ளி முன்பு அமைந்துள்ளது. விருத்தகிரீஸ்வரர் கோவிலை தரிசினம் செய்த 5 தேவர்களில் குபேரனும் ஒருவர். அவர் இந்த தீர்த்ததை உருவா'கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து சிவனை தரிசித்ததாக ஐதீகம். அம்மனு'கு அபிஷேக ஆராதணைகள் செய்யவும், பிரசாதங்கள் தயார் செய்யவும் இந்த தீர்த்தத்தில் இருந்துதான் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வந்தது.  இந்த தீர்த்தத்தில் நீராடினால் செல்வசெழிப்பு ஏற்படும். ஏழ்மையில் வாடுபவர்கள், இந்த தலத்து சிவனை தரிசினம் செய்து தீர்த்ததை அருந்தினால் அவர்களின் கொடிய வறுமை அகன்று 16 செல்வங்களும் பெருகும் என்பது பெரியவர்களின் கூற்றாகும்.

இப்படி பல சிறப்புகளை உடைய விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வந்து தரிசினம் செய்து வருகின்றனர். கடலூர் மாவட்ட சுற்றுலா தளங்களில் இந்த கோவிலும் ஒன்றாகும். அதனால் சுற்றுலா செல்ல ஆசைபடுபவர்கள் இந்த கோவிலுக்கு ஒரு விசிட் அடிக்கலாமே.....

No comments:

Post a Comment