காந்தி கோவில்
விருத்தாசலம் அருகே முதனை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முதுகுன்றீஸ்வரர் என்ற சிவன் கோவிலும், செம்புலிங்க அய்யனார் என்ற 2 கோவில்களும் பிரசித்திப்பெற்ற கோவில்களாகும். முந்தரி காடுகள் சூழ நடுவே அமைந்துள்ள இந்த கிராமம். ஈசன் தலம் இருப்பதாலோ என்னவோ எப்பொழுது பார்த்தாலும் இந்த கிராமத்தில் அமைதி நிலவும். மேலும் இந்த ஊரின் நடுவில் அமைந்துள்ள குளக்கரையும், குளத்தில் மலர்ந்துள்ள தாமரை மலர்களும் எழில் கொஞ்சும். குளக்கரையில் அப்பகுதியில் பெருசுகள் அமர்ந்து தங்கள் பழைய கதைகளையும் அசைப்போட்டு கொண்டிருப்பார்கள்.
அந்த அழகான குளக்கரையில்தான் அமைந்துள்ளது, காந்தி கோவில். ஆம் மகாத்மா காந்திக்கே கோவில் கட்டி வழிப்பட்ட முதல் கிராமம் முதனை கிராமம் தான். காந்தியடிகள் இறந்தவுடன், இந்த கிராமத்தைச் சேர்ந்த செம்புலிங்க படையாட்சி என்பவர் காந்தியின் அஸ்தியை எடுத்து வந்து அதனை பாதுகாக்கும் வகையில் சிறிய கோவில் அமைத்து அந்த அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் காந்திக்கு உருவ சிலை வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலிலும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தியடிகள் பிறந்த தினம், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய தினங்கள் அன்று இந்த கோவிலில் காந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுடன், கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள தேசிய கொடியும் வானுயர பறக்கும். தற்போது இந்த கோவிலை செம்புலிங்க படையாட்சியாரின் பேரன் பாரதிதாசன் என்பவர் பராமரித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 2ந் தேதி அன்று காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அப்போது மகாத்மாவின் வாழ்வை போற்றும் வகையில் எழுத்தாளர் ரத்தின புகழேந்தி, தலைமை ஆசிரியர் வீரபாண்டியன், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி காந்தியை வழிப்பட்டதுடன், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். மகாத்மாகவே இருந்தாலும் அவரையும் ஒரு கூட்டம் வசைபாடிகொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு கோவில் கட்டி வழிபடும் முதனை கிராம மக்களை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

No comments:
Post a Comment