செல்போன் டவர் கதிர் வீச்சினால்
அழிந்து வரும் தூக்கனாங்குருவிகள்
பல்வேறு சுற்றுசூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் அழிந்தும், குறைந்தும் வருகின்றன. இதனால் சுற்றுசூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. உதாரணமாக பருவமழை பொய்த்து வெய்யல் அதிகம் கொலுத்துகிறது. தீடிர் சூறாவளிகள், தானே, நீளம் போன்ற புயல்கள், பேரழிவை .ஏற்படுத்திய சுனாமிகள், இமயமலையை புரட்டிபோட்ட இமாலய சுனாமி என்று அடுக்கிகொண்டே செல்லலாம். தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ள பறவைகளில் தூங்கனாங்குருவி என்ற ஊர் குருவி முதலிடத்தில் உள்ளது. அழிந்து வரும் தூக்கனாங்குருவிகள் உயரமான பனை, தென்னை போன்ற மரங்களிலும், மின்கம்பிகளிலும் கூடுகட்டி வாழக்கூடியவை. தூக்கனாங்குருவிகளின் கூடுகள் வளைந்த நிலையிலும் உயர்ந்த மரங்களிலும் தொங்கும் என சங்க பாடல்களாகிய சிலபதிகாரம், சீவக சிந்தாமணி, குறிச்சிபாட்டு, நற்றினை, குறுந்தொகை போன்ற பாடல்களில் புகழ் பெற்ற செய்யுள் பாக்கள் உள்ளன. குருவி சேர் வரை போன்ற குஞ்சரம் என்ற சீவக சிந்தாமணி பாடலில் யானை மேல் பல அம்புகள் உள்ளதை மலை மேல் குருவிகள் உள்ளதற்கு உவமையாக காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சங்க காலத்திலேயே கவிஞர்கள் தூக்கனாங்குருவிகளை உவமையாக எடுத்து கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 13 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இவ்வளவு பகழ் பெற்ற குருவிகள் இன்று நாம் அதிகளவில் பயன்படுத்தி வரும் செல்போன்கள், செல்போன் டவர்களில் இருந்து வெளியேறக்கூடிய மின் காந்த அலைகள்(கதிர் வீச்சி) இவற்றின் அழிவுக்கு காரணமாகிவிட்டன. இந்த கதிர் வீச்சு இவற்றின் இனப்பெருக்க மண்டலத்தை அழித்து இனப்பெருக்க திறனை குறைப்பது மட்டுமின்றி மலடாகவும் மாற்றி வருகிறது. இதனால் படிப்படியாக இந்த இனம் மறைந்து வருவதும் மட்டும் இன்றி வரும் காலத்தில் டைனோசர் போன்ற வார்த்தையை மட்டுமே கேட்டும் இன்றைய மனிதர்கள் போல நாளை தூக்கனாங்குருவி எனற பறவை இனம் ஒன்று இருந்ததாக நாளைய குழந்தைகள் படங்களையும் தமிழ்செய்யுள்கள் மூலம் மட்டுமே அறியக்குடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குருவிகளை பார்ப்பதே அரிதாக இன்று கடலுர் மாவட்ட விவசாய நிலங்கள் மீது செல்லக்கூடிய மின்கம்பிகள் மீது கூடுகட்டி வாழ்ந்து வரும் காட்சி அப்பகுதி மக்களை திகைப்படைய செய்துள்ளது. இதேபோல சிட்டுக்குருவிகளும் ஆண்டு தோறும் இனப்பெருக்கம் செய்வதே, இன்று அதற்கு எதிரியாக மாறியுள்ளது. சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் ஆன்மை தன்மை அதிகரிக்கும் என்ற கட்டுகதையால் இன்று சிட்டுகுருவிகளுக்கு பேராபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் கூரை வீடுகள், பனை ஓலை வீடுகள் என்று வாழ்ந்தபோது அவற்றில் கூடுகட்டிக்கொண்டு மனிதர்களோடு வாழும். ஆனால் அவர்களோடு பழகாது. ஆனால் இன்று மனிதர்களின் வாழ்க்கை அடுக்குமாடி வீடுகள் பக்கம் திரும்பியதால் இது போன்ற குருவிகளை பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் டி.டி.டி போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்த தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகளின் முட்டை தோலின் கடின தன்மை நீங்கி உடைந்து விடுகிறது. இதனால் இனவிருத்தி குறைகிறது. அணில்கள் இவற்றின் கூடுகளை தனதாக்கி கொள்கின்றன.இயற்கை பேராபத்துக்கள் தோன்றினால் ஒரு இனம் .மீண்டும் இயற்கையாகவே இனவிருத்தியாகும். ஆனால் செயற்கை முறையினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களால் ஒரு இனம் அழிய நேரிட்டால் அந்த இனம் முற்றிலும் அழிந்து விடும் என பறவையியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவற்றை பாதுகாப்பது என்பது மணிதர்களாகிய நம் கையில்தான் உள்ளது. இயந்திர தனமான வாழ்க்கையை விட்டொழித்து நாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது சிட்டுக்குருவிகளும், தூக்கனாங்குருவிகளும் மனிதர்கள் வாழம் பகுதிக்கு திரும்பி மீண்டும் இவற்றின் இனம் மீண்டும் இனவிருத்தியடையும் வாய்ப்பு ஏற்படலாம்.

No comments:
Post a Comment