Sunday, 8 September 2019

கோரக்கர் சித்தர்








நம்பியோரை கைவிடாத கோரக்கர் சித்தர்
எண்ணி வந்தது நடப்பதாக பக்தர்கள் நம்பிக்கை
விருத்தாசலம்,

கோவிலின் அமைப்பு:
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விருத்தாசலம் ஒரு ஆன்மிக நகரமாகம். ஆன்மிக சுற்றுலா செல்வபர்கள் விருத்தாசலத்தை என்றும் விட்டதில்லை. பக்தர்கள் அனைத்து கோவில்களுக்கும் சென்று அடையும் அனைத்து நற்பலன்களையும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை தரிசினம் செய்தலே கிடைத்து விடும். மேலும் முன்னாள் எதிர்கட்சி சட்டமன்ற தலைவர் நடிகர் விஜயகாந்த் வெற்றிப்பெற்ற தொகுதி என்பதும் அனைவருக்கும் தெரிந்தது. உலக பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலும் விருத்தாசலம் பகுதியில் தான் அமைந்துள்ளது. மேலும் பிரசித்திப்பெற்ற தலம் என்றால் கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ள மு.பரூர் அன்னபூரணி உடனுரை காசி விஸ்வநாதர் ஆலயம் தான். விருத்தாசலம் அருகில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது, மு.பரூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை தலைமையிடமாக கொண்டு ஜமின்தார்கள் இப்பகுதி கிராமங்களை ஆட்சி செய்துள்ளனர். அதற்கு சான்றாக இந்த கிராமத்தில் இன்று வரை ஜமீன்தார் குடும்பம் உள்ளது. அப்படிப்பட்ட இந்த கிராமத்தின் நுழைவு வாயிலிலேயே அழகிய வடிவிலே கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் அன்னபூரணி உடனுரை காசி விஸ்வநாதர்.

இந்த கோவிலை அடைந்தாலே ஒருவித பக்தி உணர்வு தானேகவே வந்து விடுகிறது. கோவிலை சுற்றிலும் மரங்களும், கோவிலின் வளாகத்தில் காணப்படும் மூலிகைச்செடிகளும், குளிர்ந்த காற்றினையும், இதமான நறுமணத்தையும் அள்ளி வீசி கோவிலுக்குள் நம்மை வரவேற்கும். கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம் கண்ணில் படும். இடது புறமும், வலது புறமும் மேற்கு நோக்கிய முகமாக சூரியனும், சந்திரனும் உள்ளனர். கொடிமரத்தை கடந்து சென்றால் நந்தியும், அவரை கடக்க கோவிலுக்குள்ளே காசி விஸ்வநாதர் ௐ நமச்சிவாய ஒலியுடன், அழகிய சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அவரை தரிசினம் செய்யும் போதே எண்ணி வந்த காரியங்கள் சித்தியாகும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு பிறந்து விடுகிறது. அவரை தரிசினம் செய்த பின்பு தாயார் அன்னப்பூரணியை தனி சன்னதியில் சென்று தரிசினம் செய்யலாம். இந்த சன்னதியின் முன் பகுதியில் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் பல்லவர் காலத்து கல்வெட்டு அமைந்துள்ளது. இதனை வைத்து பார்க்கு போது இந்த கோவில் 2 ஆயிரத்தி 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில் என கூறுகின்றனர்.

அடுத்து காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்புறம் உள்ள கோரக்கர் சித்தர் ஜிவ சமாதிக்கு செல்ல வேண்டும். தரிசினம் செய்யும் போது அமைதியும், ஆற்றலும், நம்பிக்கையும் கிடைத்து விடுகிறது. அவரை குருவாக ஏற்றுகொண்டவர்கள் பலர். அவரை நேரங் கிடைக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேரில் வந்து தரிசித்து விட்டு செல்வார். அவரை போலவே யாருக்கும் தெரியால் பல வி.ஐ.பி க்கள் வந்து செல்கின்றார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கோரக்கர் சித்தரை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்யலாம்.

எண்ணி வந்த காரியங்களை அவரிடம் தெரிவித்து விட்டு அவர் சமாதி முன்பு  எழுதியுள்ள
ௐ, பசு, பரபதி, பஷீராஜ, நிரதிசயசித்ரூப, ஞானமூர்தேய, தீர்க்க நேத்ராய, கணகண் கம்கங் கெங்லங் லிங், லங், லாலீலம், ஆவ், பாங்ஆம், ஊம், பார்கவ்விய ஜோதி மய, வரப்பிரசன்ன, பாததெரிஸ்ய கோரக்க சரணாயநமஸ்து
என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தால் அவர் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருள்வார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அவருடைய தரிசினம் முடிந்த பிறகு தெற்கு பார்த்த விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கேஸ்பவர், கன்னீமூல கணபதி, வள்ளி, தெய்வானை உடனுரை முருகன், ஐஸ்வர்ய லட்சுமி, வேப்பிலை மாரியம்மன், துர்கை, சண்டிகேஸ்வரரை தரிசினம் செய்யலாம். சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் கோர'கர் சித்தர் காவி விஸ்வநாதருக்கு பூஜைகள் செய்யும் புடை சிற்பத்தால் ஆன தத்ரூபமான காட்சியை காணலாம். அதனை தொடர்ந்து பைரவர், நவக்கிரகங்கள், என ஒவ்வொரு தெய்வத்தையும் தரிசினம் செய்யலாம். இந்த கோவிலிலும், இந்த கிராமத்தில் பல்வேறு மூலிகைகள் உள்ளதாகவும், கோரக்கர் சித்தரை நம்பி வருபவர்களுக்கு அவருடைய  ஆத்மா மனித உருவம் எடுத்து அவர்கள் பிணிகள் நீங்குவதற்கான மூலிகைகளை காண்பிக்கின்றார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 மேலும் இந்த கோவிலில் தினந்தோறும் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணி, இரவு 8 மணி, மற்றும் பவுர்ணமி தினங்களில் காலை 7 மணியில் இருந்து பூஜைகள் ஆரம்பித்து யாகம், ஹோமம், உள்ளிட்டவைகளும், கோரக்க சித்தருக்கு 16 வகையான பூஜைகளும், நள்ளிரவு 12.45 மணிக்கு நிலவு பூஜையும் நடக்கும்.

பூசை பொருட்கள்:
கோரக்கருக்கு நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய் தீர்த்தம், அரிசிப்பெறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுசர்க்கரை கலவை, இவற்றுடன், கார்த்திகை நட்சத்திர நாள் மற்றும் சனிக்கிழமை கருநீல நிற வஸ்திரம் வைத்து வழிபாடு நடத்தினால் சிறப்பு என கூறுகின்றார்கள்.

கிடைக்கும் பலன்கள்:
 சனி கிரகத்தை பிரதிப்பலிப்பவர் ஆகையால் ஜாதக சனி தோஷங்கள் விலகி நன்மை பயக்கும், விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும், காரியங்களில் வெற்றி கிடைக்கும். படிப்பில் மந்த நிலை இருந்தால் மாறும். நன்மக்கட்பேறு கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும், பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும், வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும்.

5 வியாழக்கிழமைகள், மற்றும் 5 பவுர்ணமி பூஜைகளில் கலந்து  கொண்டு வேண்டுதல் வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும். குடும்ப பிரச்சினைகளும், தீராத நோய்களும் தீர்ந்து விடும் என பலன் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள்.

 இந்த கோவிலுக்கு விருத்தாசலத்தில் இருந்தும், மங்கலம்பேட்டையில் இருந்தும் பஸ், ஆட்டோக்கள் மூலம் செல்லலாம், விருத்தாசலத்தில் இருந்து டவுன் பஸ் 23, 38, 2 ஆகிய பஸ்களும், நவீன் என்ற தனியார் பஸ்சும் செல்கிறது. மங்கலம்பேட்டையில் இருந்து 23ம் எண் டவுன் பஸ்சும், நவீன், வானவில் என்ற தனியார் பஸ்களும் சென்று வருகின்றன.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கோரக்கர் சித்தரின் வரலாறு:
சித்தர்கள் 18 பேர். அதில் பெண்ணின் கருவில் இருந்து தோன்றாமல் குப்பையில் கிடந்த சாம்பல் கலந்த திருநீரில் கோரை புற்களில் இருந்து தோன்றியவ-ர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கோரக்கர். டெல்லி அருகே உள்ள கோரக்பூரைச்சேர்ந்த கோரக்க சித்தர் தமிழ்நாட்டில் சதுரகிரியை அடைந்து போகரை தோழராக கொண்டவர். Êசட்டை முனி கோரக்கருக்கு நெருக்கமானவர்கள். முன்னொரு காலத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்த போது தேவி கண் அயர்ந்த போது மீன் குஞ்சி ஒன்று அதை கேட்டு மீன் மனித வடிவமாகியது. சிவன் அதை மச்சேந்திரன் என பெயரிட்டு ஞானத்தை அருள்புரிய அனுப்பி வைத்தார்.

அப்போது மச்சேந்திரர் டெல்லி அருகே உள்ள  கோரக்பூர் என்ற இடத்திற்கு சென்று ஒரு பெண்ணிடம் பிச்சை கேட்டார். அப்போது அந்த பிச்சை போட்ட பெண் மகப்பேறு இல்லாமல் வருந்துவதை கேட்டார். மச்சேந்திரர் அந்த பெண்ணிடம் சிறிது திருநீர் கொடுத்து அதனை நீ உட்கொண்டால் மகப்பேறு அடைவாய் என்றார். அவள் திருநீர் பெற்றதை அறிந்த அக்கம் பக்கத்து பெண்கள் அது போலியானது என கூறவே அந்த திருநீரை அந்த பெண் அடுப்பில் போட்டு விட்டார். பின்பு அடுப்பு சாம்பலுடன் சேர்த்து குப்பையில் போட்டு விட்டாள். 10 வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு வந்த மச்சேந்திரர் அந்த பெண்ணை அழைத்து உன் மகனை கூப்பிடு என்றார். அப்போது அந்த பெண் பக்கத்து வீட்டு பெண் பேச்சைக்கேட்டு அதை குப்பையில் போட்டுவிட்டதாக கூறிவிட்டார். அந்த இடத்திற்கு சென்று பார்த்த மச்சேந்திரர் அந்த இடத்தில் கோரைப்புல் முளைத்திருப்பதை அறிந்து கோரக்கா என்று அழைத்தார். அப்போது மச்சேந்திரர் திருநீர் கொடுத்த 10 ஆண்டு கால பாலகனாக ஒரு சிறுவன் தோன்றினான். அவனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார்.

 ஒரு நாள் கோரக்கர் பிச்சையெடுக்கும் போது ஒரு பெண்மணி வடை ஒன்றை அளிக்க அதனை தன்குருநாதரிடம் அளித்தார். அடுத்த நாளும் அதனை போல வடைவேண்டும் என கோரக்கரின் குருநாதரான மச்சேந்திரர் கேட்க வடை தந்த வீட்டிற்கு சென்று கோரக்கர் மீண்டும் வடை கேட்டார். அந்த பெண் வடை இல்லை. தினமும் வடை செய்ய முடியுமா? இன்று தயிர் சாதம் தான் உள்ளது என கூற கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார்-. அப்போது அந்த பெண் வடைகேட்டால் பரவாயில்லை. இதுவே அவர் உன் கண்ணை கேட்டாள் கொடுத்திருப்பாயா?- என்றார். அதற்கு கோரக்கர் என் குருநாதர் எதனை கேட்டாலும் தருவேன் என கூறி தன் கண்ணை பெயர்த்து அந்த பெண்ணிடம் கொடுத்து அதற்கு பதிலாக வடைக்கேட்டார். அவரின் உணர்ச்சிகளை கண்ட அந்த பெண் உடன் வடைகளை சுட்டுகொடுத்தார். வடையை சுவைத்த மச்சேந்திரர் கோரக்கரின் கண் குறித்து விசாரித்தார். கோரக்கர் நடந்ததை கூறினார். கோரக்கரின் அன்பை அறிந்த மச்சேந்திரர் அவருக்கு மீண்டும் கண் வரச்செய்தார்.

மச்சேந்திரர் மலையாள நாட்டிற்கு சென்று அந்த நாட்டு அரசி பிரேமலா என்பவளை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனை அறிந்த கோரக்கர் அங்கிருந்து தன் குருவை எப்படியும் கூப்பிட்டு வரவேண்டும் என அறிந்து மலையாள நாட்டை அடைந்தார். குருவை பார்த்து குருவே புறப்படுங்கள், நம்இருப்பிடம் செல்லலாம் என்றார். வழிச்செலவிற்கு என்று பிரேமலா ஒரு தங்க கட்டியை மச்சேந்திரரிடம் கோரக்கருக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பி வைத்தாள். வழியில் தென்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயம் உண்டோ? எனக்கேட்டு கொண்டே சென்றார். இதனை கவனித்த கோரக்கர் தன் குருவுக்கு தெரியாமல் தங்ககட்டியை எடுத்து வீசி விட்டார். அதற்கு பதில் செங்கல் ஒன்றை வைத்தார். ஒரு நாள் பையை திறந்த மச்சேந்திரர் செங்கல்லை கண்டு கோரக்கர் மீது கோபமடைந்தார். தன்னுடைய பொருளை கைப்பற்றிய நீ என்னுடைய சீடனல்ல. இனி என்னுடன் சேராதே? என்றார்.குருவை நல்வழிப்படுத்த எண்ணிய கோரக்கர் ஒரு சிறிய மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். அப்போது அந்த மலை தங்க மலையானது. கோரக்கர் குருவை பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அறியாமையில் உழன்ற மச்சேந்திரரை பிடித்த மாயை விலக மனம் தெனிந்த மச்சேந்திரர் தன் சீடனை பாராட்டினார். எனினும் கோரக்கர் தனியே பிரிந்து சென்று தவம் புரிந்து அதிர்ஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.

கோரக்கர் திருகயிலை சென்றார். அங்கு எதிர்பட்ட  அல்லாமாதேவர் என்பவரை நீங்கள் யார் என்றார். அவர் இறந்து போகும் உடலில் பற்று கொண்டுள்ளவர்களை மதித்து சொல்லத்க்கது ஒன்றும் இல்லை என்றார். அதற்கு கோரக்கர் நான் குருவின் அருளினால் காய சித்தி பெற்றவன் என்றார். அல்லாமா தேவர் காயசித்தி வாழும் நாளை தான் அதிகமாக்கும். அன்று நிலைத்திருக்க உதவாது. இதனை அழியா உடல் என கூறுவது வீண் என்றார். வீண் தர்க்கம் வேண்டாம். இதோ நிருப்பித்து காட்டுகின்றேன் என்று கூறி அல்லாமாதேவரிடம் ஒரு வாளினை கொடுத்து உன் தோல் வலிமையானால் என்னை வெட்டு என்றார். அதேபோல வெட்ட உடலின் மீது பட்ட வாள் இரும்பில் பட்ட வாளை போல தெறித்தது, உடலில் காயம் அடையவில்லை. அப்போது அல்லாமாதேவர் நல்லது என் திறமையை நிருபித்தாய். இதோ இந்த வாளால் நீ என்னை வெட்டு என்றார். கோரக்கர் வெட்ட வாள் அல்லாமரின் உடலில் புகுந்து வந்தது. வெட்டும்போது காற்றை வெற்றுவது போலிருந்தது. கோரக்கர் உண்மையை உணர்ந்து தன்னை விட சக்தி மிகுந்த அல்லமா தேவரை வணங்கி தன் தவறை ஒப்புகொண்டார். உடம்பில் உள்ள பற்றினை நீக்கி உன் உண்மை நிலையை அறிவாய் என்றார்.

 வரதமேடு எனும் காட்டில் தவம் செய்ய சென்ற போது பிரம்ம முனியை சந்தித்து அவருடன் கோரக்கர் நண்பராகினார். இருவரும் தவம் செய்து அரிய சித்திக்களை அடைந்து 5 தொழில்களையும் இயக்கும் ஆற்றல் பெற யாகம் செய்ய தொடங்கினார்கள். யாகத்தில் இருந்து 2 அழகான பெண்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த அக்கினியும், வாயு பகவானும் அந்த பெண்களை மோகித்து நின்றனர். யாகத்தை தடை செய்த அந்த 2 பெண்கள் மேல் கமண்டல தண்ணீரை தெளிக்க கோபங்கொண்டு ஒரு பெண்ணை புகையிலையாகவும், ஒரு பெண்ணை கஞ்சா மூலிகையாகவும் மாற்றினார். அந்த பெண்களை மோகித்த வாயுவும், அக்கினியும், நீரும், நெருப்புமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தனர். அப்போது சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும் எனவும், நீங்கள் உண்டாக்கிய இந்த செடிகள் மூலிகைகளாக திகழும் என்றார்.

 கோரக்கர் தான் அறிந்த ஞானங்களை பாடல்களாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்திட கூடாது என்று நினைத்த சித்தர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். இதனை அறிந்த கோரக்கர் அரிசியுடன் கஞ்சாவை சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும் படியாக வைத்தார். இதனை உண்ட சித்தர்கள் மயங்கினார்கள். அப்போது முக்கியமான நூல்களை கோரக்கர் மறைத்து வைத்துகொண்டார். சித்தர்கள் எழுந்து பார்த்த போது அங்கு கிடைத்த நூல்களை எடுத்துச்சென்றனர். கோரக்கர் சந்திரரேகை, நமநாமச திறவுகோல், ரஷமேகலை, முத்தாரம், மலைவாக்கம், கற்பம், முத்திநெறி, அட்டகர்மம், சூத்திரம், வசார சூத்திரம், மூலிகை, தண்டகம், கற்ப  சூத்திரம், பிரம்ம ஞானம், உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அகத்தியர் முதற்கொண்டு கோரக்கரை 18 சித்தர்களும் தொடர்பு கொண்டுள்ளனர்.

 பல ஆயிரம் ஆண்டுகள் பல தவம் செய்து பல அரிய சித்துக்களை பெற்ற கோரக்கர் கொல்லிமலை வந்தார். அங்கு பாம்பாட்டி சித்தரும், போக சித்தரும் முருகன் சிலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுடன் நட்பு பாராட்டிய கோரக்கர் சிலைகள் செய்ய உதவினார். தொடர்ந்து அங்கிருந்து பிரிந்து மு.பரூருக்கு கோரக்கர் வந்தார்.
மு.பரூர் வந்தடைந்த கோரக்கர் அங்கு அன்னப்பூரணி காசிவிஸ்வநாதர், தெற்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்பவர், துர்கையம்மன், நந்திகளையும் பிரதிஷ்டை செய்து சுமார் 500 வருடங்கள் பூஜைகள் செய்தும், தன்னை தேடி வரும் மக்களுக்கு மூலிகை வைத்தியம் பார்த்து வந்தார். மேலும் ஒரு நாள் தன்னுடைய சீடர்களிடம் தான் ஜீவ சமாதியடைவதாக கூறிவிட்டு தற்போது ஜீவ சமாதி உள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்தவர் திடீர் என அங்கிருந்து மாயமானார். அப்போது அவ்விடத்தில் தீபம் மட்டுமே காட்சி தந்தது. கடந்த 2014ம் ஆண்டு ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருளியுள்ளார். இதனை பக்தர்கள் செல்போனில் படமாக எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது அவர் ஜீவ சமாதி  முன்பு வைக்கப்பட்டுள்ளது.

அதனை  தொடர்ந்து  வேளாங்கண்ணிக்கு சென்று மாதாகுளத்தில் இருந்த மூத்த சித்தரான காகபுசண்டாரை தன் குருவாக ஏற்று கொண்டார். பின்பு நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கையில் ஆசிரமம் அமைத்து  தங்கியிருந்தார். அங்கு கோரக்கர் தன்னை தேடி வரும் சாதுக்களுக்கு உணவு படைப்பதற்காக அன்னக்காவடி எடுத்து யாசகம் வாங்கி வந்து படைத்தருளினார் என்றும் நம்பப்படுகிறது. அங்கும் கோரக்கருக்கு ஜீவசமாதி உள்ளது. இன்று வரை அங்கு இந்த யாசகம் வாங்கும் பழக்கம் உள்ளது. 

No comments:

Post a Comment