Sunday, 8 September 2019

அதிக வேலைவாய்ப்பை வழக்கும் செராமிக் பட்டயபடிப்பு

அதிக வேலைவாய்ப்பை வழக்கும் செராமிக் பட்டயபடிப்பு

விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை தொடங்குவதற்கு முன்பாகவே 1964 ம் ஆண்டில் செராமிக் கல்லூரி விருத்தாசலத்தில் நிருவப்பட்டது. இந்த கல்லூரி தமிழகத்தின் ஒரே செராமிக் கல்லூரி என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதில் பயில்பவர்கள் குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் சென்று வேலை பெற்று வருகின்றனர். இக்கல்லூரியில் பயிற்சி பெற்று செராமிக் தொழிற்சாலையில் பணிபுரிவதுடன் இதற்கான தொழில்நுட்பங்கள் இக்கல்லூரின் வாயிலாக அளிக்கப்பட்டு தற்போது பெருமளவில் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விருத்தாசலம் செராமிக் கல்லூரியில் அளிக்கப்படும் கல்வி குறித்து அந்தக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறியதாவது- இக்கல்லூரியில் டிப்ளமோ இன் செராமிக் டெக்னாலஜி என்ற 3 அரை வருட பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. தற்போது இக்கல்லூரியில் 180 மாணவர்கள் வரை தமிழகத்தின் பலப் பகுதிகளில் இருந்து வந்து கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் வசதிகளுக்காக ஆய்வகம், நூலகம், செய்முறை, செயல்விளக்க முறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கல்வி அளிக்கப்பட்டு  வருகிறது. மேலும் மாணவர்கள் கல்வி பயின்று முடித்தவுடன் இங்குள்ள தொழிற்பேட்டைகளில் மேற்பார்வையாளர்களாகவும் பணிபுரியலாம். அல்லது சுயமாகக்கூட தொழில் தொடங்கலாம். இக்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு எளிதாக வங்கிக் கடன்கள் கிடைத்து வருகிறது. தற்போது செராமிக் உற்பத்தி தொழிலில் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. அந்நத நுட்பங்களை இந்த கல்லூரியின் வாயிலாக படித்துச் செல்பவர்கள் எளிதாக புகுத்தி பீங்கான் பொம்மைகளை உற்பத்தி செய்தால் அதிக வருமானம் பெறமுடியும். மேலும் வெளிநாடுகளிலும் செராமிக் தொழிலுக்கு நல்ல வரவேற்புள்ளது. இங்கு படித்துவிட்டு செல்லும் மாணவர்கள் வெளிநாடுகளில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

No comments:

Post a Comment