Sunday, 8 September 2019

விருத்தாசலம் செராமிக்தொழிற்சாலையில் நவராத்திரிக்கான பீங்கான் மொம்மைகள் உற்பத்தி தீவிரம்





விருத்தாசலம் செராமிக்தொழிற்சாலையில்
நவராத்திரிக்கான பீங்கான் மொம்மைகள் உற்பத்தி தீவிரம்

பீங்கான் அலங்காரப்பொருட்களுக்கும் வீட்டு உபயோகப்பொருட்களுக்கும் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தியும், வீட்டை அலங்காரப்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்து வருவதாலும்  பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்டு பீங்கான் மொம்மைகள்
சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில் பீங்கான் மொம்மைகள் தற்போது விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் அதிகளவு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் அதிகளவு வெள்ளை மண் கிடைப்பதால் விருத்தாசலத்தில் செராமிக் தொழிற்ச்சாலை அமைக்க 1965 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜ் உத்தரவிட்டிருந்தார். 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட செராமிக் தொழிற்பேட்டறையை அப்போதைய தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன்  தொடங்கி வைத்தார். இதில் 44 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் செராமிக் தொழிற்சாலை லிமிடெட் நிர்வாகத்தின் கீழ் கற்குழாய் தொழிற்சாலை,செராமிக் கலைபொருட்கள் தயாரிப்புக்கூடம, செராமிக் மூலப்பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பிரிவுகளும், 56 ஏக்கரில் 61 செராமிக் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டன.

இத்தொழிலில் வருவாய் பெருக தொடங்கியதால் பலர் செராமிக் தொழிலுக்கு மாறிய வண்ணம் இருந்தனர். இந்த தொழிற் பேட்டையில் டீ கப், வாட்டர் பில்டர், எலக்ரிக் ஹீட்டர், சுவாமி, தலைவர்களின் உருவங்கள், பறவைகள், தாவரங்கள், அகல் விளக்குகள், பீஸ் கேரியர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பொருட்கள் பல்வேறு வடிவங்களில் பல வண்ணங்களில் உற்பத்திச் செய்யப்படுகிறது. இதன் மூலமாக இப்பகுதியைச்சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தற்போது இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருவதால் திருவிழாவிற்கு தேவைப்படக்கூடிய  பீங்கான் மொம்மைகள் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையிலிருந்து தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  நவராத்திரி, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும், கார்த்திகை தீப திருவிழா நடைபெற இருப்பதாலும் பீங்காள் பொம்மைகள் அதிகளவு உற்பத்திச்செய்யப்பட்டு  விருத்தாசலத்திலிருந்து உள்நாட்டின் பல்வேறு மா£நிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகிறது.

No comments:

Post a Comment