Sunday, 8 September 2019

வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் விருத்தாசலம் அகல்விளக்குகள்




வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் விருத்தாசலம் அகல்விளக்குகள்

கார்த்திகை, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அடுத்தடுத்து தமிழத்தில் விழாக்காலங்கல் வரிசையாக அணிவகுத்து வருகின்றனர். வடமாநிலங்களிலிலும் பல்வேறு விழாக்காலங்கள்  நெருங்கிக்கொண்டிருக்கிறது. கார்த்திகை தினங்களில் அனைவரின் வீடுகளையும் அலங்கரிப்பது அகல் விளக்குகள். அந்த வகையில் விருத்தாசலம் செராமிக் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகள்தான் உலகம் முழுவதும் ஒளிவீசிக் வீடுகளை அலங்கரித்து வருகிறது. 
விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளர் கூறிம்போது விருத்தாசலத்தில் ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு தொழிற்பேட்டை என இருந்த நிலைமை மாறி இன்று 500 தொழிற்பேட்டைகள் வரை அகல் விளக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. செம்மண்ணை மட்டுமே மூலப்பொருட்களாக கொண்டு இந்த தொழில் நடக்கிறது. சேலம் பகுதியில் கிடைக்கும் பெல்ஸ்பார், குவார்ட்ஸ் ஆகிய மண்ணுடன் செம்மண்ணை கலந்து கூழ்மை நிலைக்கு கொண்டுச் செல்ல வேண்டும். பிறகு அச்சுகளில் வார்த்து அதனை நன்கு உலர வைக்க வேண்டும். பதமாக உலர்ந்த பிறகு அதற்கென உருவாக்கப்பட்ட சூலையில் வைக்க வேண்டும். சூலையில் உள்ள இயந்திரங்கள் அகல் விளக்குகளை 12 மணி நேரம் வரை 50 டிகிரி செல்சியசிலிருந்து 1160 டிகிரி செல்சியசுக்கு சிறிது சிறிதாக கொண்டு சென்று வேக வைக்கும். பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் அதில் இருக்கும் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வெளியில் வரும். அதனை கொண்டு வந்து தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்புவோம். இத்தொழிலை நம்பி ஆயிரகணக்கானவர்கள் உள்ளனர். சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரும். இன்று தொழிற்பேட்டைகள் மட்டுமின்றி வீடுகளிலும் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட வகைகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காய், மாம்பழம், தாமரை, துளசி மாடம்,  இலை வடிவம், ஸ்டார் வடிவம், விநாயகர் கைகளில் ஏந்திய அகல் வடிவம், மூன்று முகம், நான்மகம், ஐந்து முகம், பண்முகம் என பல்வேறு வகைகளில் பல்வேறு அளவுகளில் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முகம் அகல் விளக்குகள் என தேவைக்கு ஏற்ப விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கலாம். 40 பைசாவில் இருந்து ரூபாய் 40 வரை விற்பனையாகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலைக்கு  பல்வேறு வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து கொள்கின்றனர் என்று கூறினார்.
ஒரு காலத்தில் குயவர்களின் பாரம்பறிய தொழிலாக இருந்து வந்த இந்த தொழில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல வண்ணங்களில் பல வடிவங்களில் பீங்கான் அகல் விளக்குகளாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக  பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் மும்பை, கொல்கத்தா பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து வியாபாரிகள் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர். இந்த வியாபாரிகள் விருத்தாசலத்தில் வாங்கப்படும் அகல்விளக்குகளை ரெயில்கள் மூலம் தங்கள் மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு அகல் விளக்குகள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன. என கூறினார்

No comments:

Post a Comment