Saturday, 11 September 2021

மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் எனது இனிய இதயத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பாலைவனமாய் 
இருந்த எனது வாழ்க்கை 
சோலை வனமாய் 
மாற காரணமானவள்!

தாய்க்கு பின் தாரம் என்பார்கள்
எனக்கு தாய்க்கும் மேலானவள்,
ஒவ்வொரு படிக்கட்டாய் 
கவனமாய் தாங்கி 
ஏற்றி விடும் வெற்றி தேவதைக்கு இன்று பிறந்த நாள்!

கடல் போல வந்து கவலைகளை மூழ்கடித்தவள்,
வானமாய் விரிந்து 
அன்பை பொழிவதில்
அவளுக்கு நிகர் அவளே!

பொறுமையில் 
பூமாதேவியும் 
என் தேவியை பார்த்து பூரிப்படைவாள்,
எனக்குள் சங்கீதமாய் ஒலித்திடும் சங்கீதத்திற்கு இனிய பிறந்த நாள்!

நான் தவறுகள் செய்திடும் போது நெருப்பாய் கொதிப்பவள்!
சிறகொடிந்த எனக்கு
சிறகாய் அமைந்தவளுக்கு இன்று உதயமான நாள்!

ஐம்பூதங்களாய் என்னை காக்கும்
என் இளம் வயது ஏக்கங்களை ஏந்தி 
எல்லாம் வல்ல இறைவன் அருளால் கிடைத்த சக்தி அவளுக்கான நாள்!

என்னுள் இதயமாய் குடிகொண்டு,
என்னை அவளின் இதயம் எனும்
கருவறையில் சுமக்கும் பேராற்றல்
இவ்வுலகில் உதித்த நாள்!

தனது ஆசை, எண்ணம் 
அனைத்தையும் துறந்து
எனது ஆசை எண்ணங்களை ஏற்று
என்னை ஆளும் என் மணவாட்டிக்கு
இன்று மகிழ்ச்சி திருநாள்!

ஒரு ஆண் பால் 
வாழ்வதும் வீழ்வதும்
பெண் பாலை சாரும்,
என்னை வீழ்த்தாமல்,
மற்றவர் வாழ்த்த 
தன்னையே வருத்திக் கொள்ளும் 
என் தங்கம் 
இந்த உலகத்தில் தோன்றிய 
பொன் நாள்!

நான் பிரகாசிக்க
என்னுள் கல்லாய் பதிந்து,
ஜொலிக்க வைக்கும் 
என் வைரத்தை 
நான் வாழ்த்தும் நாள்!

என்னில் சரிபாதியான 
என் அன்புக்கு, காதலுக்கு, அறிவுக்கு, புகழுக்கு
உகந்த நாள்! 
இன்று போல என்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!
- - - - - - -
வீரா

Wednesday, 8 September 2021

த்ருஷா

ரோசாப் பூ பூத்தால் தான் அழகு,
திருஷா சிரிச்சாலே பேரழகு!

ஒவ்வொரு காட்சியிலும்
திருவிழா காட்சியாய்
கொள்ளை கொள்ளும்
இயற்கை அழகு அவள்!

சீன் போடும் தத்ரூபம்
அவளை விஞ்சிட
சினிமா உலகில்
நாயகிகள் யார் இருக்கா!

உலக அழகியை தேடி 
போட்டி வைக்கிறார்களாம்,
திருஷாவை காணா
நயவஞ்சகர்கள்!

மேக்கப் போட்டு அழகை கூட்டும் கன்னிமார்களே,
மேக்கப் இல்லா அழகியை,
காண கண் கோடி வேண்டும்!

திருஷாவை கண்டு
கண்வைக்காமல்
அவள் போடும் சீனை கண்டு
ரசித்து செல்லுங்கள்!

அவள் சிரித்தாள்
குத்தாளத்து அருவி ஆர்பரிக்கும்!

பேசினால் ஆலங்கட்டி மழை கொட்டும்!

நடந்தால் வாத்துகள்
தெரித்து ஓடும்!

வெட்கப்பட்டால் மொட்டுகள் கூட  சிவந்து மலரும்!

அவள் பேரழகை காண
ஒரு பூ கொடுத்தால் போதும்,
மயக்கிவிடலாம்,

மழை வரும் போது மட்டும்
தோகையை விரிக்கும் மயில் போல
பூ கொடுக்கும் போது மட்டுமே மயங்கும் பூங்குயில் அவள்!
😁😁😁😁💐💐💐

Saturday, 28 August 2021

காமத்தில் கண்ட காதல்

செக்க செவந்த வானத்துல
சிங்காரி நீ செவந்துப்புட்ட
என்ன சிக்க வச்சி
சொக்க வச்சிப்புட்ட
சீவலேறி பாண்டியன நீ
சொக்காக்குள்ள போட்டுப்புட்ட

சுகமா நீ மொனவுற
பதமா  சூடேத்துற
போதைய ஊட்டுற
தேனா உருகுற
பாலா சொறியுற
மொத்தமா அள்ளி தின்னுற

உரலிலே குத்தும் உலக்கையாய்
நான் படும் பாட்டிலே
நீ படும் இன்பத்திலே
நான் காணும் சந்தோஷம்

மதுவிலும், கள்ளிலும்
காணா போதையை 
சிற்றின்பம் ஆயினும்
மாது உன்னில்  மூழ்கி முத்துதிர்த்தேன்

பூவிலே தேனெடுத்த வண்டாய்
நான் உன்னிலே கலந்து
மகரந்தம் தூவி 
பெட்டி பாம்பாய் அடங்கி கண்டேனடி காதலை!



Friday, 23 July 2021

மினி டிராக்டர் தயாரித்த கிராமத்து மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரனூர் கிராமத்தை சேர்ந்த ராசவன்னியன் மகன்கள் ராஜசிம்மன், நீதிராஜன். பன்னிரண்டாம், ஆறாம் வகுப்பு படிக்கும் இம்மாணவனர்கள் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் அறிவிக்கப்பட்ட, ஊரடங்கால், ஆன்லைன் மூலம் நடக்கும் வகுப்பு முடிந்த பின்பு, மீதமுள்ள நேரத்தை வீணாக செலவழிக்காமல், மரம், பிளாஸ்டிக் பொருட்கள், மினி மோட்டார் கொண்டு 360 டிகிரி சூழலும் திறன் கொண்ட மினி டிராக்டரை தயாரித்துள்ளார். கடைகளில் விற்கப்படும், ரிமோட் மூலம் இயங்கும் விளையாட்டு பொம்மைகள் முன்னும் பின்னும் நகரும் தன்மை கொண்டதாக மட்டும் உள்ளதாகவும், தற்போது குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட மினி டிராக்டர்,  ப்ளூடூத் வழியாக செல்போன் மூலம் இயங்கக் கூடிய தன்மை கொண்டதாக கிராமத்து மாணவன் தெரிவிக்கிறார். இம்மினி டிராக்டரில் செல்போன், லேப்டாப் பேட்டரிகள், ஒவ்வொரு சக்கரத்திற்கும் சிறியரக மோட்டார்கள், LED விளக்குகள், மரம் மற்றும் நாற்றங்காலுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக மாணவன் தெரிவிக்கிறார். மேலும் மினி டிராக்டர் 360 டிகிரி சுற்றுவதற்கும், 30 மீட்டர் தூரம் வரை செல்வதற்கும், கட்டளைகள் இடுவதற்கும், Codeing மூலம் மினி  டிராக்டரில் program பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் மினி டிராக்டர் தயாரித்த பின்பு, அதன் மூலம் பயன்பெறும் வகையில், வீடுகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கும், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கும், தரைகளில் துடைப்பதற்கும், மரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலால் கொண்டு தனித்தனியாக பல்வேறு இயந்திரங்களையும் கண்டுபிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில் பலூன் மற்றும் மரத்தை கொண்டு வயல்வெளியில் உள்ள, களைகளை அகற்றுவதற்காக மருந்து தெளிக்கும் தெளிப்பான் இயந்திரத்தையும் தயாரித்துள்ளார். இதனால் ஆட்கள் செலவு, நேரக் குறைவு, உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாணவன் தெரிவிக்கிறார். தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் ஆன்லைன், ஆஃப்லைன் மூலம் பப்ஜி, ஃப்ரீ பையர் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு நேரத்தை, வீணாக கழித்து வரும் சூழ்நிலையில், கிராமத்து பகுதியை சேர்ந்த மாணவன் ராஜசிம்மன், ஆன்லைன் வகுப்பை தவிர்த்து மீதமுள்ள நேரத்தை, வீணாக செலவழிக்காமல், தன்னால் முடிந்தவரை மினி டிராக்டர் தயாரித்து, அதன்மூலம் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வரும் இம்மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து,  வெகுவாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விருத்தாசலம் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவன் நவீன ஏடிஎம் இயந்திரம் கண்டுபிடித்து சாதனை

விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவன்னியன். வயது 40. விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு நரசிம்மன், வயது 14 என்ற மகன் உள்ளான். இவர் பெரியவடவாடி  தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் படுசுட்டியாக விளங்கும் இந்த மாணவன் தற்போது மினி நவீன ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். தனக்கு கிடைத்த எளிய பொருட்களான தர்மாகோல், ஐஸ் குச்சி, பேட்டரிகள், வயர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு மினி ஏடிஎம் இயந்திரம் வடிவமைத்துள்ளார். ஒரு சின்ன மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருப்பது போலவே Oவி  இருந்து 9வரை எண்கள் உள்ளன. பணத்தை உள்ளே வைத்துவிட்டு ரகசிய எண் குறியீடு பதிவு செய்தால் அந்த இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பணம் வெளியே வந்துவிடுகிறது. மேலும் இதே போல ஏடிஎம் எந்திரத்தில் கூட இல்லாத வசதியான சில்லரை காசுகள் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரகசிய எண்ணை குறியீடு செய்து தொகையை பதிவு செய்தவுடன் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களும் வெளியே வந்துவிடுகிறது. இந்த மாணவன் தான் கண்டுபிடித்த இந்த டெமோ இயந்திரத்தை தன்னுடைய பள்ளியில் கொண்டு சென்று இயக்கி காட்டியுள்ளான். அப்போது இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த அவரது ஆசிரியர்களும், சக மாணவர்களும் ராஜசிம்மனை பாராட்டினர். மேலும் இது குறித்து அறிந்த அவருடைய சொந்த ஊர் மக்களும் இந்த இயந்திரத்தையும், அவர் இயந்திரத்தை செயல்படுத்தும் விதத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அவரது தந்தை ராஜவன்னியன் கூறும்போது என்னுடைய மகன் ராஜசிம்மன் சிறுவயதிலிருந்து விளையாடுவதிலும் ஆர்வமாக இருப்பான். மேலும் விளையாட்டு பொருட்கள் நிறைய வாங்கி அதிலுள்ள பொருட்களை பிரித்து விட்டு மீண்டும் பொருத்தி அதனை இயக்குவான். அடிக்கடி ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும்  என கூறி வந்தான். அதுபோலவே இந்த இயந்திரத்தையும் அவன் கண்டுபிடித்துள்ளான். அவனது ஆர்வத்தை அறிந்து கொண்ட  என் மனைவி பழனியம்மாள் இந்த ஏடிஎம் எந்திரம் உருவாக என் மகனை ஊக்குவித்துள்ளார் எனக் கூறினார். இந்த கண்டுபிடிப்பு குறித்து மாணவன் ராஜசிம்மன் கூறும்போது தற்போது மினி ஏடிஎம் இயந்திரம் பரிசோதனை முயற்சிக்காக இயக்கி காட்டியுள்ளேன். இந்த இயந்திரத்தில் சில்லரை காசுகள் வரும் வசதி உள்ளது. தற்போது உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இந்த வசதி கிடையாத.  இந்த இயந்திரத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். மேலும் நிலநடுக்கம்  புயல் சூறாவளி மழை வெள்ளம்  போன்ற ஆபத்து காலத்தில் உதவும் ரோபோவை அடுத்ததாக உருவாக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளேன்.  ஏரோநாட்டிக்கல்  படிப்பு படிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும். எனக் கூறினான். இது போன்ற மாணவர்களை தமிழகஅரசு கண்டறிந்து அவர்களுக்கென்று சிறப்பான பயிற்சி அளித்து அவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும், என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

Friday, 21 May 2021

துரியன் பழம்

துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்புச் சுவை உடையது. பழம் மட்டுமின்றி, இதன் இலைகளும், பல மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளன. மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பழம், நல்ல மருந்து.

இவர்கள், வாரம் இருமுறை, துரியன் பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும். கொழுப்பு சத்தை கரைத்து, கலோரிகளாக மாற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால், நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்த குறையை போக்க, துரியன் பழம் பயன்படுகிறது.

மலச்சிக்கலை நீக்கும் குணம் இந்த பழத்துக்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை ஏற்படுத்தும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது. இந்த பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிகமான இரும்புச்சத்து, பாஸ்பரஸ் இந்த பழத்தில் நிறைந்துள்ளன.

வைட்டமின்கள் பி, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை, மூட்டுகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றன. நகங்களில் பிரச்சினை இருக்கும் போது, இந்த பழத்தின் வேர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். இரும்பு, போலிக் ஆசிட் அதிக அளவு இருப்பதால் ரத்தச் சோகையை குணமாக்கலாம்.

இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில், இதில் பைரிடாக்ஸின் எனும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.

Friday, 30 April 2021

மனம்

*மனம்*
ஒரு மனம் வேண்டும் என்கிறது, மற்றொரு மனம் மறுக்கிறது.
இரண்டும் சமநிலை அடைகிறது,
தேவைகளின் எண்ணிக்கை
எல்லையை கடக்கிறது!
அங்கே ஆசைகளுக்கு அணை போட முடியாமல் தவிக்கிறது மனம்!

Wednesday, 28 April 2021

மனிதர்கள் மூன்று ரகம்



அமைதியானவர்,
அன்பானவர்,
அடங்காதவர்,

சொல் என்ற அம்பு

சொல் என்ற அம்பு நமக்குள் இருக்கும் வரை தான் நாம் அதற்கு எஜமான், 

சொல் என்ற அம்பு நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டால் சொல் தான் நமக்கு எஜமான்

புரிஞ்சவர் புரிஞ்சுக்கோ, புரியாதவர் புரிஞ்சவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கோ
😁😁😁

Sunday, 18 April 2021

கன்னி ராசி

கன்னி ராசி காரகத்துவம்  கன்னி ராசி உருவம் கன்னிப் பெண்  பெண் ராசி இரட்டை ராசி  உபய ராசி  குணம் அமைதி  தத்துவம் நிலம்  திசை தெற்கு கன்னி ராசியின் தன்மைகள்
1. பூமி ராசி  2. நிலையில்லாத் தன்மை 3. வயிற்றுப் பகுதி 4. அமைதியான 5. பாசமுடையது 6. பாதி பயனளிக்கும் ராசி  7- மலட்டு ராசி 8 .மனித குணம் 9. குறுகியது 10. இரவு பொழுது 11.வைத்தியசாலை 12. மருந்து கலக்குமிடம் 13. துணிகள் 14. உணவு வகைகள் 15. கிழங்கு வகைகள் 16. நிபுணத்தன்மை 17. முதலுதவிப் பெட்டி 18. நூல் நிலையங்கள் 19. புரட்டாசி மாதம் 20 நகரம்
சுபர் புதன் சுக்கிரன்  பாவி செவ்வாய், சந்திரன், குரு பாதகாதிபதி குரு
கன்னிராசியின் அதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான  காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.
கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வருவது அரிது. வந்தாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும் விலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும், பத்திரங்கள் வாங்கவும், அவற்றைதமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு  தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது  ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய சதயம், பூரட்டாதி, ஆயில்யம், பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும்  விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும்.  வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
பிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய, வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து விண்ணப்பம் செய்ய, அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க,
திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண்/மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த திருவோணம், அவிட்டம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க வேண்டியு நட்சத்திரங்கள் அசுவனி, மகம், பரணி, பூரம் ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, பரணி, பூரம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும், உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் தொடங்க,தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும் தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவிலியிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும் தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும். சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
கன்னியின் மனநிலை (Mental Tencies )
1 சுறுசுறுப்பான மனநிலை உடையவர்கள்
2 கலைகள் இசையை விரும்புவர்கள்
3. எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்
4 நிலையற்ற தன்மையுடையவர்
5. தன்னம்பிக்கை குறைவு
6. கணக்கில் புலி, மேதைகளாக இருப்பார்கள்
குணாதிசயங்கள்
1 எப்போதும் மாறத் தன்மை
2 வியாபாரத்துக்குள்ள இயற்கையான ஆற்றல்
3. மிக ஊக்கமுடைமை
4. மிக விரைவு
5. நேர்மை
6 பகுத்தறிவு
7. யோசனையுடைமை
8. மிதமிஞ்சிய எச்சரிக்கை
9. சுகாதார அறிவு
10. தோட்டம் போட விருப்பம்
கன்னி ராசி காட்டும் நிலப்பகுதி
1 தானிய நிலங்கள்
2. தோட்டம்
3 நகரப் பகுதி..
4.பெருநகரங்கள்
5.வியாபர சந்தைகள் 
6 கல்வி கூடங்கள் 
7. இயற்கை காட்சிகள் நிறைந்த இடம்
8 பூங்காவனம்
9. நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள்
10. விளையாட்டு மைதானம்
கன்னி ராசி தொழில்கள்
1 கணக்கர் 
2. தணிக்கையாளர்
3 பலவிதமான வியாபாரம் செய்தல்
4. ஆசிரியர் 
5. சில்லறை வியாபாரம்
1.வாழ்க்கை வாழ்வதற்கே என நம்புகிறவர்கள்
2. உன்னதமான மனிதர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு மகிழ்வுடன் ஊழியம் செய்வார்கள்
3. பொதுவாக பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள்
4 பிறரைக் கவரும் வண்ணம் ஆடை அணிந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பர்கள்
5. இவர்களுடைய மதக் கோட்பாடுகள் தெளிவாக இருக்கும்
6. தர்மம் செய்தலில் விருப்பம் உள்ளவர்கள்
7 ஒரே நேரத்தில் பல வேலைகளை திறம்பட செய்தல்
8. கவிபாடும் வல்லமை கொண்டவர்கள்
9 தெய்வீக வழியில் நடப்பதில் விருப்பம் உள்ளவர்கள்
10. பிறரை இவர்கள் விரும்புவர்கள். எல்லோரும் இவரை விரும்புவர்கள்
11. சங்கீதத்திலும் நடன கலையிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள்
12. பிறந்த இடத்தை விட்டு மற்ற இடங்களில் வசிக்க விரும்புவார்கள் பொதுவாக மண வாழ்க்கையில் முரண்பாடுகள் உண்டு
கன்னி ராசி - பூந்தோட்டம், கல்விக்கூடங்கள், வியாபார இடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை ராசி வசிப்பிடம்.
புதன் தகவல் தொடர்பு என்பதாலோ என்னவோ மிக வேகமாக பதிவு வருகிறது
தொழில்கள் - கணிதம், பச்சை நிறப்பொருட்கள், ஆலோசகர், கமிஷன், தொலைத் தொடர்பு
தங்களை பகட்டாக காட்டிக் கொள்வர். கன்னி வாழை. தோப்பு வீடு. கன்னி நஞ்சை குஞ்சை வீடு, கன்னி  நாய், வீடு கன்னி புத்திர தாமதம் கன்னி, வியாபார அறிவு கன்னி,  காதல் வீடு கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். கன்னிப்பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக,இளமையாக,கவர்ச்சியாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக,கவர்ச்சியாக,இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனக்கூறப்படுகிறது.கன்னிப்பெண்கள் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இதனால் கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். எனவே கன்னிப்பெண்கள் கூடுமிடங்களை கன்னி ராசி குறிக்கும். அலங்கார அறை,ஆற்றங்கரை,குளக்கரை,கிணற்றடி போன்றவை கன்னிப்பெண்கள் கூடுமிடங்களாகும். இவ்விடங்களே கன்னி ராசியின் வசிப்பிடங்களாகும்.(கிராமம்)
கன்னி ராசியில் புதன் ஆட்சி உச்சம் அடைகிறது
சுக்கிரன் கன்னி ராசியில் நீசம் அடைகிறது
கன்னி ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
உத்திரம் 2,3,4
அஸ்தம் 1,2,3,4
சித்திரை 1,2
புதன்
கிரகங்களில் உருவத்தில் மிகவும் சிறிய கிரகமாகவும், சந்திரனைப்போல் மிகவும் வேகமாக நகரக்கூடியதாகவும் அறியப்படும் கிரகம் புதனாகும். புதனின் நிறம் பச்சையாகும். புதன் ராசி சக்கரத்தில் நகர்ந்து செல்லும்போது சூரியனுக்கு முன்னும் பின்னும் 28 பாகைகளுக்கு மேல் விலகிச்செல்லாது. இதனால் இந்த கிரகத்திற்கு அடிக்கடி வக்கிர கதி மற்றும் அஸ்தங்க கதி ஏற்படுகிறது. ஜோதிடத்தில் கிரக காரகங்கள் அனைத்தும் வானத்தில் உள்ள கிரகங்களையும் பூமியில் உள்ள பொருட்களையும் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளன. 
கிரகங்களில் புதன் வேகமாக நகர்வதைப்போல் மனிதர்களில் இளைஞர்கள் மிகவும் வேகமாக செயல்படுவார்கள். கிரகங்களில் மிகச்சிறிய கிரகம் புதன் , இது முழுமையாக வளர்ச்ச்சி பெறாததை குறிக்கிறது. இது போல் மனிதர்களில் சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் முழுமையாக வளர்ச்சி பெறாதவர்களாகும். எனவே சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்களை குறிக்கும் கிரகம் புதனாகும்.
புதன் எப்பொழுதும் சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பதால், இதை துணை தேடும் கிரகம் எங்கிறார்கள். தனித்திருப்பது என்பது புதனுக்கு சாத்தியமில்லை. மனிதர்களில் இரண்டு பேர் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள் அல்லது காதலர்களாக இருப்பார்கள். எனவே புதனை நட்பு கிரகம், காதல் கிரகம் என அழைக்கிறார்கள். இரண்டு பேர் சேர்ந்தால் அவர்களிடையே ஒரு கருத்துப்பரிமாற்றம் நிகழும். இதன் அடிப்படையில் புதனை பேச்சுக்காரகன், தகவல் பரிமாற்றக்காரகன், தூதன், விவகாரகாரகன் என அழைக்கிறார்கள். 
கல்வி கண் போன்றது என்பார்கள், கண்ணுக்கு பார்வை என்பது சூரிய வெளிச்சத்தால் கிடைக்கிறது. வெளிச்சம் இல்லை என்றால் கண்ணுக்கு பார்வை கிடையாது. சூரியனுக்கு மிக அருகாமையில் இருந்து சூரிய வெளிச்சத்தை அதிக அளவில் நேரடியாக பெறும் கிரகம் புதனாகும். எனவே புதனை கல்விக்காரகன் என்கிறார்கள். வெளிச்சத்தில்தான் எதையும் தெளிவாக பார்க்கமுடியும். புத்தியால்தான் எதையும் தெளிவாக உணரமுடியும், இந்த அடிப்படையில் புதனை புத்திக்காரகன் எனவும் அழைக்கிறார்கள். 
புதன் எப்பொழுதும் சூரியனுடன் இணைந்தே இருக்கும் என்று பார்த்தோம். எனவே இணைப்பைக்குறிக்கும் கிரகம் புதனாகும். மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இணைப்பின் அடையாளமாக ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொள்வர். உடல் உறுப்புகளில் இணைந்தே இருப்பவை விரல்களாகும்,  எனவே கைகள் மற்றும் கை விரல்களைக்குறிப்பது புதனாகும். உடலில் தலைப்பகுதியையும் உடல் பகுதியையையும் இணைப்பது கழுத்தாகும் எனவே கழுத்தை குறிப்பது புதனாகும். 
வாக்கு என்பது நாக்கில் பிறக்கிறது என்றாலும்,நாக்கானது வாய்க்குள் பிற உறுப்புகளுடன் இணைந்தே செயல்படுவதாலேயே வார்த்தைகள் பிறக்கின்றன. பிறருடன் இணைந்தே செயல்படுவது புதனின் குணமாகும். எனவே புதன் வாக்குக்காரகன் எனப்படுகிறான். நாக்கை குறிக்கும் கிரகம் புதனாகும். கிரகங்களில் அடிக்கடி வக்கிர கதி, அஸ்தங்க கதி அடைவது புதனாகும். நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பார்கள். எனவே நாக்கு புதனுக்கு ஒப்பிடப்படுகிறது. 
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் சூரிய ஒளியை நேரடியாக முதலில் பெறும் கிரகம் புதனாகும். இது போல் மனித உடம்பில் சூரிய ஒளி தோல் மீது நேரடியாக படுகிறது. எனவே புதன் தோலுக்கு அதிபதியாகும். மனித உடம்பில் உடல் முழுவதும் சூரிய ஒளி விழுந்தாலும் , அதிகப்படியான சூரிய ஒளி நெற்றியின் மீதுதான் விழுகிறது. எனவே நெற்றியைக்குறிக்கும் கிரகம் புதனாலும்.  
புதன் இணைப்பை குறிக்கும் கிரகம் என்று பார்த்தோம். இதன்படி மனிதர் எங்கெல்லாம் இணைகிறார்களோ அல்லது கூடி இருக்கிறார்களோ அந்த இடங்கள் அனைத்தும் புதனுக்குரிய இடங்களாகும். பள்ளிக்கூடம், கல்லூரி, விளையாட்டு மைதானம், திருமண மண்டபம், பூங்கா, நூலகம் போன்றவை மனிதர்கள் கூடும் இடங்களாகும். இந்த இடங்கள் அனைத்தும் புதனின் ஆதிக்கத்தில் வருபவையாகும். 
புதன் ஒரு தகவல் பறிமாற்றக்கிரகம் என்பதால் தகவல் தொடர்பு சார்ந்த பொருட்கள் அனைத்தும் புதனின் ஆதிக்கத்தில் வந்துவிடும். புத்தகம், பத்திரிக்கை, பிற ஊடகங்கள், எழுது பொருட்கள், கணணி, இணையம், தபால், தந்தி, தொலை பேசி, அலை பேசி, தொலைக்காட்சி, வானொலி போன்றவை புதனின் அதிக்கத்தில் இருப்பவையாகும். வியாபாரம் என்பது இரண்டு பேர்களுக்கு நடுவே நடப்பதாகும். எனவே வியாபாரத்தை குறிப்பது புதனாகும். 
புதனின் நிறம் பச்சை என்பதால் பூமியில் பச்சை நிறத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் புதனுக்குரியவையாகும். மரகதக்கல் பச்சை நிறமுடையது என்பதால் ,அது புதனின் ரத்தினக்கல்லாக கூறப்படுகிறது. பச்சைக்கீரை வகைகள் மற்றும் பசுமையான தோட்டங்களை குறிப்பது புதனாகும்.
புதன் கிரகத்தின் ஒரு பகுதி எப்பொழுதும் வெளிச்சமாகவும், மற்றொரு பகுதி இருட்டாகவும் இருக்கும். இதனால் இந்த கிரகத்தை இரட்டைத்தன்மையுடைய கிரகமாக பாவிக்கிறார்கள். புதனின் வெளிச்சப்பாகத்தை ஆணாகவும், இருண்ட பாகத்தை பெண்ணாகவும்                     பாவிக்கிறார்கள். இதனால் புதனை அலிக்கிரகம் என்கிறார்கள். மேலும் இரட்டைத்தன்மை உள்ளவைகள் அனைத்தும் புதனாக பாவிக்கப்படுகிறது. இதன் படி திருநங்கைகளை குறிப்பது புதனாகும். தெய்வங்களில் அம்சங்களில் சங்கர நாராயணர், ஹரிஹரன், ஐயப்பன் போன்றவை புதன் அம்சமாகும். 
புதனை ஏன் அலிக்கிரகம் என்கிறார்கள் என்றால், புதன் உருவத்தில் மிக சிறிய கிரகம், எனவே மனிதர்களில் முழுமையாக வளர்ச்சியடையாதவர்களை குறிக்கிறது. இதன் படி வயதிற்கு வராத ,பருவமடையாத ஆண்,பெண்களை புதன் குறிக்கிறான். பருவமடையாத ஆண், பெண்கள் கலவியில் ஈடுபட முடியாது. இதன் அடிப்படையிலேயே புதனை அலிக்கிரகம் என்கிறார்கள். 
பறவைகளில் பச்சை நிறமுடைய கிளி மனிதர்களைப்போல் பேசும் ஆற்றல் உடையது. மேலும் கிளி ஜோதிடம் பார்ப்பவர்கள் கிளியை பயன்படுத்துகிறார்கள். எனவே பறவைகளில் கிளியை குறிப்பது புதனாகும்.

புதன் ஆட்சி வீடு
மிதுனம் கன்னி
உச்சம் பெறும் வீடு கன்னி
நீசம் பெறும் வீடு மீனம்
புதன்
 புதன் தன்னுடைய சொந்த வீடான கன்னியில் 15வது பாகையில் உச்சமடைகிறான். கன்னி ராசியில் 15வது பாகை அஸ்தம் நட்சத்திரத்தைக் குறிக்கும். அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆகும். புத்திக்கு காரகன் புதனாகும். மனதில் தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசாபாசங்களையும் குறிப்பவன் சந்திரனாகும். பொதுவாக புத்தி என்னும் அறிவு, உணர்ச்சிகளோடு இணைந்து செயல்படுவதில்லை. உணர்ச்சிகளோடு இணைந்து அறிவு செயல்படுமானால், அதைவிட உயர்ந்த நிலை வேறு எதுவுமில்லை என்று கூறலாம். புத்தியை நல்ல வழியிலும் செலுத்தலாம், தீய வழயிலும் செலுத்தலாம். ஆனால் புத்தியை நல்ல வழியில் செலுத்தும்போதுதான மிகப்பெரிய நன்மைகளை அடைய முடியும். உதாரணமாக அணசக்தியை அழிவு காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். ஆக்க காரியங்களுக்கு பயன்படும் போதுதான் அது சிறப்படைகிறது. புதன் தன் சொந்த ராசியில் உச்சமடைவதால் புத்தி கூர்மை சிறந்து விறங்கும். அதே சமயத்தில் உணர்ச்சிகளோடும் ஒத்துப்போகும். ஆகவே புதன் தன் சொந்த வீடான கன்னியில் சந்திரனின் நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தில் உச்சமடைவதே சிறப்பாகும்.
கன்னி தானிய கிடங்கு கன்னி தாய் வழியில் மனைவி  உள்ளூரில் மனைவி கன்னி ராசி  வறண்ட ராசி  புத்திர தாமதம்  தொழிலுக்காக, ஜீவனத்திற்காக வெளியூர், வெளிநாடு சென்றால் முன்னேற்றம்  ஆடு, மாட்டு பண்ணை,  நூலகம், உணவு கிடங்கு  கன்னிக்கு 4ல் செவ்வாய் வீட்டிற்கு அருகில் ரேஷன் கடை  ஜோதிட அறிவு  நாய், முயல் வீடு  நஞ்சை, புஞ்சை நிலம்  4க்கு உடையவன் காம திரிகோணமான 3, 7, 11 குரு பார்த்தாலும் தொடர்பு கொண்டாலும்  காமதேனுவை வணங்கலாம்,  இவர்களின் பெயரில் காம என்ற வார்த்தை சேர்க்கலாம்,  அஸ்தம் காதல் திருமணம் இரு தார யோகம் புத்திர தோஷம் சித்திரை சொத்து உண்டு கோவில் அருகில் வீடு பிரிந்து சேரக்கூடிய நட்சத்திரம் இயற்கையிலேயே வாக்கு பலம் ஆன்மீக பேச்சு
ஒருவனின் கல்வி, தாய்மாமன், இரண்டாவது மனைவி, வியாபாரம், நண்பர்களின் கூட்டு, வாக்கு சாதுர்யம் ஆகியவைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வித்யா காண்டம் பார்க்க வேண்டும்.
இது புதன் இருக்குமிடத்தையும் இதனோடு சேரும் மற்ற கிரகங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது ஆகும்.
ஒரு ஜாதகன் கௌரவம், அவனுக்குக் கிடைக்கின்ற இறையருள், அவனால் செய்யப்படும் நற்காரியங்கள், உத்தியோகம் மற்றும் தொழீல் அமைப்புகள், திருமணம், மனநிம்மதி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜீவகாண்டம் பார்க்கவேண்டும்
இது குருவையும் அதைச் சார்ந்துள்ள கிரகங்களையும் அடிப்படையகாக் கொண்டு கணிப்பது ஆகும்..
ஒரு ஜாதகனின் மனைவி மற்றும் கணவனைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், சொந்த வாழ்க்கையில் ஏற்படும் சுகதுக்கங்கள் மனை மற்றும் நிலங்கள், ஆடை ஆபரணங்கள், செல்வ வளம், வாகன யோகம் ஆகியவைகளை அறிய இல்லற (களஸ்திர) காண்டம் பார்க்க வேண்டும்.
கன்னிராசி காலப்புருஸனுக்கு ஆறாம் வீடு 150.01to180டிகிரி வரை உள்ளது. நிலராசி  உபயராசி. உத்ரம்2'3;4;பாதங்கள் அஸ்தம் நான்கு பாதங்கள் மிருகசீரிசம் முதல் இரண்டு பாதங்களை உள்ளடக்கியது
புதன் ஆட்சி உச்சம்  சுக்ரன் நீசம் இரு கன்னிப் பெண்கள் உருவம் கொண்டது
இவர்கள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள்.ஏன் எனில் காலப்புருஸனுக்கு
ஒன்று எட்டின் செவ்வாய் நான்கின் சந்திரன் அஞ்சின் சூரியன் நட்சத்திரங்களை உள் அடக்கியது
பெரும்பாலும் அடுத்தவர்க்காக உழைப்பதிலும் வல்லவர்கள் தன்காரியப்புலிகள். அடுத்தவர்க்கு ஆலோசனைகள் அடுத்தவரிடம் எப்படி காரியம் சாதிப்பது என்ற வழிமுறைகள் அறிந்தவர்கள் சிரிக்க சிந்திக்கப் பேசுவர் எடுத்தகாரியத்தை உடனே முடிப்பர் கணவருடன் வெளிநாட்டில் சிறிது காலம் வசிப்பர் தந்தையுடன் கருத்து வேறுபாடும் உண்டு கணவனிடம் காதலுமுண்டு கண்டிப்பும் உண்டு இவர்கள் வீடு அருகே கோயில் அர்ச்சகர்கள்  நிதி நிறுவனர் வீடு கோயில் கள் உண்டு. மசாலா உணவுப்பொருட்கள் விருப்பம் உடல் அலங்கார உடைகள் விருப்பம் பரதநாட்டியம் அறிவர்
கன்னி பெண்கள் எப்போதும் தங்களை அழகாகவும்  இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்ளவும் விரும்புவார்கள். 
அதில் அதிக கவனம் செலுத்துவார்கள். 
புதனுடை வீடு  என்பதால் சிரித்த முகத்தோடும் நகைச்சுவை  உணர்வுடன் பேசக் கூடியவர்களாக இருப்பர். கூர்மையான  அறிவு,  ஆழமான கருத்துக்களை உடையவர்கள்.
பெண்கள் விஷயத்தில் சபலம் உடையவர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் சிரித்து மயக்கி , சிந்தையை கெடுத்து பெண் சுகம் அனுபவித்து விடுவர். 
கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கும்  எண்ணம் இவர்களுக்கு  இருக்காது.
இரட்டை தன்மை.  புத்தக  அலமாரி.  கல்வி கூடங்கள். விளையாட்டு மைதானம். அறிஞர்கள் கூடுமிடம். சந்தேகப்படும் நிலை. பத்திர  அலுவலகம். ஊர் விட்டு  ஊர் பிழைப்பதற்காக செல்வது. ஊர், நிலங்கள், தோரணங்கள்.அடிவயிறு ஆஸ்பத்திரி.  இவைகள் எல்லாம் காரகத்துவங்கள்.
எதையும் ஆராயும் குணமும் புன்னகை பூக்கும் முகமும் கன்னிக்கு உண்டு.. 4ஆம் அதிபதியே பாதகாதிபதி யாக  வருவதால் திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் தாயாரால் ஒற்றுமை நிலைநாட்டுவது கடினம்.. பசுமை நிறைந்த தோட்டம், பூக்கள், மரம், செடி, கொடி, மூலிகைகள் மேல் ஆர்வம் இருக்கும்.. எதையும் குறிப்பு எடுத்து கொள்ள விரும்புவர். மேலும், எங்கு சென்றாலும் ஏதாவது செய்தித்தாள் அல்லது புத்தகம் இருக்குமா என்று தேடி கண்டுபிடித்து படிக்க துடிப்பார் கள்.
கன்னிக்கு 5 ம் வீடு சனி வீடாக இருப்பதால்,  அங்கு புத்திரக்காரகன் குரு நீசம் பெற்று நின்றால், ஜாதகருக்கு  புத்திரம் வழியில் திருப்தியற்ற சூழ்நிலை உருவாகும். 
அதேபோல அஷ்டமாதிபதி செவ்வாயாக இருப்பதால். ..செவ்வாய்  அஷ்டமத்தில் நிற்க ஜாதகருக்கு சகோதர வழியில் திருப்தியற்ற சூழ்நிலை உருவாகும்.
தருமசிந்தனை உடையவர் .மனசஞ்சலம் உடையவர்  நடுத்தமான உயரம் கொண்டவர்  நளினமான , அழகுடைய இளமையான தோற்றம் உடையவர். சிலருக்கு பெண்களின் சுபாவம் அதிகம் இருக்கும். கலை, இலக்கியம், ஜோதிடம், விஞ்ஞானம், கணிதம், மருத்துவம்,சொற்பொழிவு, பத்திரப்பதிவு, ஷேர் மார்க்கெட் போன்றதுறைகளில் ஈடுபாடு கொண்டவர்.
ஒரு கையில் அரிவாலும் மற்றொரு கையில் நெற்கதிர் கொண்ட பருவப் பெண். கன்னி ராசி. உபயராசி உழைக்க கூடியவர்கள். இளமையாக இருக்க கூடியவர்கள். ஆடை அலங்காரம் அணிகலன்கள் அதிகமாக விரும்பக் கூடியவர்கள். அன்பு இறக்ககுணம் வரவேற்க்கும் குணம் தன்மை.பயந்த சுபாவம்.நல்லது  நடப்பதற்க்கும் தீயதை விலக்கி வைப்பதற்கும் தயங்க மாட்டார்கள். உழைப்புக்குகேற்ற பலன் கிடைக்க நினைப்பவர்கள். ஒருவிஷயத்தில் பலன் ஆதாயம் இல்லாமல் வேலை செய்யமாட்டார்கள். காலபுருஷனுக்கு6வது ராசியாக வருவதால் அதிக கடன் வாங்க தயங்கமாட்டார்கள். அதிக எதிர்ப்புகளுடன் வாழக்கூடியவர்கள். பொறாமை குணம்  உள்ளவர்கள். வியாபார ராசி. வறண்ட ராசி. சந்தேகபேர்வழிகள். தாமதபுத்திரம் சொல்லும்ராசி.ஒரு குழந்தை இறந்ததை சொல்லும் ராசி. ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடைவெளி இருக்கும். ஊர்விட்டு ஊர்போய் பிழைப்பது கன்னி. காரகத்துவம் பால் பண்ணை நூல்நிலையம் .அறிஞர்கள் கூடும் இடம்.  அறிவை தேடுவது கன்னி.தானியக்கிடங்கு ரேசன்கடை.மண்டி. நஞ்சை புஞ்சை நிலங்கள்.பரதேச ஜீவனம்  உள்ளூரில் முன்னேற்றம் இருக்காது  படிப்பிற்க்காக  வெளியில் செல்லுதல். பால்பண்ணை நூலகம் அருகில் இருக்கும். ஜோதிடஅறிவுஇருக்கும் காதல்ராசி.பெரிய வியாபாரம் செய்வார். இடத்தில் தானியக்கிடங்கு இருக்கும்.வயிற்றுவலி முதுகு வலி வரும். அஸ்தம் நட்சத்திரம் காதல் திருமணம் உறவில்திருமணம் அல்லது முதல் திருமணம்பாதித்தவர்கள் உண்டு. தாமத குழந்தை. அஸ்தத்தில் ஒருகிரகம்  இருந்தால் பாதிப்பு அஸ்தத்தில் 3க்குடையவன் இருந்தால் சகோதரருக்கு இந்த பிரச்சனை. 9 க்குடையன் சூரியன் இருந்தால் தந்தைக்கு பாதிப்பு. 4க்குடையவன் சந்திரன் இருந்தால் தாயாருக்கு பிரச்சனை.இப்படியே அனைத்து கிரகத்துக்கும்சொல்லும் அஸ்தம் இருதார யோகத்தை சொல்லும் கல்விக்கு நல்லது. ஜவுளிவியாபாரம் நல்லது.வாழ்வில் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம். பலன் பாராமல் வாழக் கூடியவர்கள். கைரேகை ஜோதிடம் நல்லா இருக்கும். அஸ்தம் உத்திராடம் மிருகசீரிடம் இந்த மூன்று நட்சத்திரங்களும் புத்திரதோசத்தை உடையது. அஸ்தம் இது எருமை பத்திரக்கோழி இதில் ஒருகிரகம்  இருந்தால் ஒருபெண் கர்ப்பு தவறுவால். அஸ்தத்தில் 3ம்அதிபதி  கேது இணைவு இருந்தால் ஒருபெண்ணுக்கு இரண்டுதடவை மூக்கு குத்துவார்கள் காது குத்துவார்கள். கன்னி ராசி மூக்குத்தி ராசியாகும். சித்திரை நட்சத்திரம். சுகபோகம் குறைவு வீட்டின் அருகேகோவில் இருக்கும்.சொத்து பிரச்சனையை சொல்லும்.சித்திரை ஆணுக்கு நல்லதல்ல வட்டிதொழில்நல்லது. கட்டிடம்கட்டிவிற்பது. மாடலிங்.ஆடைதைத்து விற்பது. குடும்பம் அல்லது தொழில் இரண்டில் ஒன்றுதான் சிறப்பாக இருக்கும்இன்னொன்று கெட்டுவிடும். தந்தையை பிரிந்து வெளியூரில் வாழ்வார்கள் .இருப்பார்கள். 1க்குடையவரே 10 க்கு டையவர் புதன்சொந்த தொழில்செய்யும் எண்ணம்அதிகமாக இருக்கும்.தொழிலில் திருப்த்தி இருக்காது. ஜீவனகுறைவேஇல்லை சித்திரை .2 க்குடையவரே 9க்குடையவர் சுக்ரன் வருவதால் உறவில் திருமணம் திருமணத்திற்கு பின் வருமானம் சிறப்பு. யாருக்காவது உபதேசம் செய்துகொண்டே இருப்பார்கள்.வாக்கு பலம் இருக்கும். பொருளாதாரம் சிறப்பு. பேச்சால் தான் தொழில். வாக்கால் நல்ல வரவு. தந்தை வழியில் நல்ல ஆதாயம் கிடைக்கும். 3 க்குடையவரே 8க்குடையவர் செவ்வாய் திருமணத்திற்கு பின் உயர்வு.E.N.T.பிரச்சனை  உண்டு.விரலில்காயம் இருக்கும்.இவர்கள்L.I.C. பண்ணலாம் ஆனால் போடக்கூடாது.சீட்டு ஆகாது.சகோதரனால் ஒருஅவச்சொல் உண்டு. சகோதரன் இல்லை. இருந்தால் கருத்து வேறுபாடு வரும்.                                                                                                                             கன்னி ராசியின் தன்மைகள் : 
 உபய ராசி
ராசியின் அதிபதி : புதன்
நில ராசி
பெண் ராசி
மேற்கு ராசி
இரட்டை ராசி
கர்ம ராசி
ராசியின் இடம் : ஊர்
ராசியின் காலம் : மாலை
ராசியின் குணம் : அமைதி
ராசியின் செயல் : முடிவு
ராசியின் அதிபதி புதனுக்கு இதுவே உச்ச மூலதிரிகோண வீடாகும்
கன்னி ராசியின் காரத்துவங்கள் :
புத்திசாலித்தனம், கூர்மையான அறிவு, பெரிய வியாபார ஸ்தலம், படரும் கொடிகள், கல்விச் சாலை, சாம்பல் நிறம், இடுப்பு, பூந்தோட்டம், நகரம், கணக்கர், தணிக்கையாளர், பலவித வியாபாரம், ஆசிரியர், எழுத்தர், மளிகைக்கடை, தானிய சேமிப்புக் கிடங்கு.
கன்னி ராசி :
 ராசி சக்கரத்தில் ஆறாவது ராசி கன்னி. ஆளும் பாவம் கடன், நோய், எதிரி இவற்றைக் குறிக்கும். கன்னி ராசியின் சின்னம் கன்னிப்பெண் ஆகும். கன்னிப் பெண்களைக் காணும்போது ஆண்களுக்கு இயற்கையாகவே ஒரு வகையான ஈர்ப்பு ஏற்பட்டு பெண்களுக்காக எதை வேண்டுமானாலும் விற்றுச் செலவு செய்வதைக் கண்கூடாகக் காணலாம். பெண் மோகத்தால் கடன்பட்டு கஷ்டப்படுபவர்கள் உலகில் அதிகம்.
எனவே கடன், நோய், பகை ஆகியவற்றைக் குறிக்கும் ஆளும் பாவத்திற்கு கன்னிப்பெண் சின்னமாகத் தரப்பட்டிருக்கிறது.
சித்திரை.பெரும்பாலும் இவர்கள் வீட்டில் கடை குட்டி தான். 4க்குடையவரே7க்குடையவராக குரு வருவதால் கேந்திர ஆதிபத்திய தோசம்.தாய் அன்பு இல்லை.அல்லது பிறந்த வீட்டு சொத்து இல்லை பிரச்சனை சொத்து வாங்கினால் மனைவி அல்லது கணவன் பெயரில் வாங்கவேண்டும். இவர்கள் பெயரில் இருக்ககூடாது. அல்லது ஜாய்ண்ட்டு அக்கவுண்டு. நண்பர்களிடம் சொத்து வண்டி கொடுக்கக் கூடாது.கொடுத்தால் பிரச்சனை வரும். தாய்வழி உறவில் வரன் வரும்.40கீ.மீ. சுற்றளவில் அமையும். திருமணத்தின்போது மழை வரும். சொத்து இருந்தால் பிரச்சனை இருக்கும். 5க்குடையவரே 6க்குடையவர் 80%பெண்தன்மை இருக்கும்.20%ஆண்தன்மை இருக்கும்.(சனி) குலதெய்வத்தில் அதிக குழப்பம் இருக்கும்.படிக்கும்போதே  திருமணபேச்சு வரும்.படித்து முடித்வுடன் வேலை கிடைக்கும். குழந்தை தாமதம் அல்லதுமருத்துவ செலவு வரும். 6வயது வரை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். பூர்வீகசொத்தில் தடை ஏற்படும்.சித்தியின் மணவாழ்க்கை சரியாக இருக்காது. 1 க்குடையவரே10க்கு டையவர் அதனால் இவர் பிறந்தவுடன் வீட்டில் ஒருகர்மம் நடக்கும்.மற்றும் குடும்ப நபர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். மருத்துவத்திற்கு கைராசி.மார்க்கெட்டிங். இன்ஸ்டன் யூ பிஸ்னஸ் நல்லது.
அஸ்வினி சதயம் ரேவதி இந்த நட்சத்திரத்தில் போய் மருத்துவரை பார்த்து வைத்தியம் எடுத்துக்கொண்டால் நல்லது. கன்னி ராசி மரம். தென்னை வாழை துத்தி வெள்ளருக்கு பாக்கு மரம்.நெல்லிக் காய்.மருதாணி. கரும்பு.
கன்னியில் பிறந்தவர்கள் தன்வந்திரி பகவான் கூரத்தாழ்வார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தமிழ்வாணன் எழுத்தாளர் சுபா
ஆறாவது ராசி கன்னி. திறம் இரண்டு மூன்று மற்றும் நான்காம் பாதம் அஸ்தம் சித்திரை ஒன்று மற்றும் இரண்டாம் பாதங்கள். உத்திரம் நட்சத்திரம் எழுத்துக்கள் டே டோ ப பி   அஸ்தம் பு ஷ ண ட  சித்திரை பே போ ர ரி
கன்னி ராசிக்கு. நெய் பிடிக்கும். சேமியா கிச்சடி  பிடிக்கும். கார் மேல் மோகம் இருக்கும்.முதலில் சிரிப்பு பின்புதான் பேச்சு.சந்திரன் புதன் சாரத்திலோஅல்லது புதன் சந்திரன் சாரத்திலோ அல்லது லக்னம் லக்னாதிபதி சந்திரன் புதன் சாரத்தில் இருக்கும் பட்சாத்தில் ஜாதகர் பொலம்பி தள்ளி விடுவார்கள். எந்த குறையும் இருக்காது ஆனால். ஒரு குறையைபற்றி பேசி க்கொண்டே இருப்பார்கள். மனக்கவலையில்தான் இருப்பார்கள். புதன் இரட்டை
உணர்ச்சி வசப்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்தி மறைக்கும் புத்திசாலித்தனம் உடையவர்கள். மற்றவர் உணர்வை புரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்த மாட்டார்கள். சிந்திக்க வைக்கும் நகைச்சுவையை மட்டுமே ரசிப்பர். தனக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே மற்றவர்களிடம் வழியே சென்று பேசுவார்கள். தன் கருத்தை மற்றவர் ஏற்றுக் கொள்ளும்வரை விட மாட்டார். பிரச்சனைகளை எளிதில் தீர்த்து வைப்பார். சில நேரங்களில் வெறும் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருக்கும். தோற்றத்தை வைத்து கன்னி ராசி காரரை எடை போட முடியாது உதாரணம் மைக்கேல் ஜாக்சன் இந்தி நடிகர் அக்ஷய்குமார். குடும்ப வாழ்க்கையை விட வேலையில் அதிக நேரம் செலவழிக்ககூடியவர். இவர்கள் காரியத்தில் கண்ணாக இருப்பர். தன்னைப் பற்றியே அதிகம் சிந்திப்பார். திட்டமிட்டு வாழ்பவர்கள். அடுத்தவரை குறைகூறும் குணமுடையவர்.
கன்னி ராசிக்காரர்கள் பொருத்தவரை வீடு என்பது சாப்பிடவும் தூங்கவும் மட்டுமே. உத்திரம் 2,3,4பாதம்  கன்னி ராசிக்காரர்கள்  விதவிதமாய் ச் சுவைகளில் உணவை ரசித்து உண்பா் தாய் மாமன் உறவு சரியிருக்காது தாய்க்கு வரும் சொத்துக்களை தாய் மாமனே தடுப்பார்
காலத்துக்கு 10ம் இடம் தொழில். கன்னி லக்னத்திற்கு 5மிடமான புகழ். இவர்கள் தான் செய்யும் தொழிலில் பேர் புகழ் அடைவார்கள். குழந்தை பிறந்த பிறகு தொழில் மேன்மை இருக்கும். இவர்களுக்கு கூட்டுத் தொழில் சரியாக இருக்காது. இந்த இடத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய்🌟 உள்ளது. தொழிலில் மறைமுக எதிரிகள் இருப்பார்கள். கன்னி பூமிராசி. தன் சுய உழைப்பு மூலம் வீடு வாகனம் வாங்கும் அமைப்பு இருக்கும். சகோதர வழியில் பிரச்சினை சந்திப்பார்கள் காலத்துக்கு 8செவ்வாய் இங்கே. தொழிலில் சங்கடங்கள் இருக்கும்
கன்னி ராசிக்காரர்கள் கணவனாக இருந்தால் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அதிக பற்றும் பாசமும் கொண்டிருப்பார்கள் .  கன்னி ராசிக்காரர்கள் மனசஞ்சலம் உடையவர்களாகவும் சீல குணமுடையவர்களாகவும் தமிழ் சொந்தங்களிடம் பிரியமாக இருப்பார்கள். இவர்களுக்கு ஜோதிடம் மற்றும் நவீன கலைகள் கற்கும் ஆர்வமும் இருக்கும். இவர்கள் பட்டாடை அணிய விரும்புவார்கள். இவர்களுக்கு இனிமையான குரலும் பழகுவதற்கு இனிமையான வராகவும் இருப்பார்கள. ் இவர்கள் மனைவிக்கு பயந்தவர்களாகவும் சுறுசுறுப்பாகவும் எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பார்கள.  ் இவர்கள் தங்களிடம் இருக்கும் குறைகளை கண்டு அவைகளை நீக்கி விட முயற்சிப்பார்கள்.   இவர்கள் சுறுசுறுப்பான மற்றும் மூளை சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் பிரியத்துடன் செய்வார்கள் .  இவர்கள் எதையும் தாங்கும் பொறுமையுடன் இருப்பார்கள.  ் இவர்கள் தங்களின் வயதை மற்றவர்களுக்கு கூறமாட்டார்கள்.   குழந்தைகளுக்கு பொறுமை பெரிய மற்றும் எல்லாவற்றுக்கும் சரியான விளக்கத்தையும் கொடுத்து பழக்க வேண்டும்.   இவர்கள் பொதுவாக அமைதியாகவும் உணர்ச்சியுடனும் குற்றம் கண்டுபிடிப்பவர்களுக்கு ஆராய்ந்து பார்க்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள.் இவர்கள் இன்னொரு எதிர்மறையான குணாதிசயம் என்னவென்றால் சந்தேகம் கேலி செய்தல் மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இதனால் இவர்களுடைய உடல்நலம் பாதிக்கப்படும் .
கன்னி ராசி புதனுக்கு ஆட்சி வீடு உச்ச வீடு மூலதிரிகோண வீடு ஒருங்கே பெற்ற சிறப்பான ராசியாகும் உபய ராசி கன்னியில் பிறந்தவர்கள் பொதுவாக நளினமான நபர்களாகவும் எந்த சூழ்நிலைக்கும் அனுசரித்து செல்பவர்களாகவும் இருப்பார்கள் கன்னி ராசி புத்திர தோஷத்தை தரும் ராசி லக்னாதிபதியே பத்தாம் அதிபதி எனவே ஜீவனத்திற்கு குறை இருக்காது இவர்கள் கலை இலக்கியம் எழுத்து சார்ந்த பணிகளில் அல்லது அவை சார்ந்த விஷயங்களில் விருப்பம் இருக்கும் ஜோதிடப் புலமை உண்டு 3 எட்டுக்கு அதிபதி செவ்வாய் ஆவதால் சகோதர்கள் வர்க்கத்தில் அதிகமாக நினைப்பு இருக்காது நாலாம் வீடு தனுசு பண்ணைகள் தோட்டங்கள் விவசாய நிலங்கள் இவற்றில் ஜாதகருக்கு நாட்டம் அதிகம் இருக்கும் தாய் சற்று கண்டிப்பானவராக இருப்பார் குழந்தைகளால் இவர்களுக்கு சற்று திருப்தி குறைவு இருக்கும் ஐந்தாம் அதிபதி சனியே ஆறாம் அதிபதியாக வருவதால் கடன் வாங்க தயங்க மாட்டார்கள் பெண் நண்பர்கள் அதிகம் அதேபோல் பெண்களால் அவமானமும் ஏற்படும் மனைவி நன்கு படித்தவர் அல்லது ஆசிரியப் பணியில் இருப்பார் திருமணத்திற்கு பின் செல்வம் சேரும் இவருக்கு சொத்து சேர்ப்பது மனைவியாலும் தாயாராலும் இவருடைய சித்தப்பாவால் இவர் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் தந்தை வர்க்கத்தால் தொல்லைகள் வழக்குகள் வந்தாலும் இவர் அதை வெற்றிக்கொள்வார் வருமானங்கள் வசதிகள் இவரைத் தேடி வரும் இவர் தேடிச் செல்ல வேண்டியதில்லை கன்னியில் ஒரு பெண் பிறந்தாள் அதுவும் சித்திரை நட்சத்திரமாக இருந்தால் நிச்சயம் காண்போரை மற்றொரு முறை திரும்பிப் பார்க்க வைப்பார் வாதம் செய்வதில் வல்லவர்கள் சற்று பொறாமை கொண்டவர்களாக இருப்பார்கள் வழி காண்பிக்க மாட்டார்கள் பொதுவான உடல் அமைப்பாக இருக்கும் இவர்களுக்கு எந்த வியாதி வந்தாலும் விரைவில் குணமடையும் மனைவி வந்தவுடன் இவர் மதிப்பு உயரும் சொத்தும் உயரும் கணக்குப் பார்த்து செலவழிப்பார்
லக்னத்தில் சனி இருப்பின் இவர் பிறந்தவுடன் அல்லது ஒரு வருடத்துக்குள் வீட்டில் ஒரு கர்மம் நடந்திருக்கும் இவர்களுக்கு சிறியதாக ஏதேனும் ஓர் நோய் வந்தாலே அதை மிகவும் பெரிதுபடுத்தி கவலைப்படுவார்கள்
கன்னிக்குச் சுக்ரன் சனி சேர்ந்திருந்தாலோ பார்த்தாலோ
உடன் வேலை செய்பவரால் பிரச்னைகள் சந்திக்கநேரும் கணவன் பாவத்துக்கு  விரைய பாவமாக ஆறின் சனி கணவன் சுகஸ்தானத்துக்கு ஒன்பதாம் பாவகமாக வருவதால் கணவர் வீட்டுக்குச் சுபச்செலவுகள்  செயவர்
கன்னி லக்னம்
1:சாந்தமானவர் 
2:உண்மையானவர் 
3:இளமையில் அறிவும் நினைவாற்றலும்  உடையவர் 
4:கலையார்வம் 
5கைத்தொழில் ஆர்வம் 
6:பெண்களுடன் இணைந்து செயல்படுவார்கள் 
7:சமசார்ப்பு 
8:கல்வியாளர் 
9:பார்த்தவுடன் செய்திகளை விளக்கும் தன்மை உடையவர் 
10:ராஜதந்திரி 
11:சிக்கனம் 
12:கொடுக்கல், வாங்கல் தன்மை உடையவர் 
13:நுண்கலை பிரியம் 
14:இசையில் ஆர்வம் 
15:பிரசித்தி பெற்றவர் 
16:செல்வாக்குடையவர்
17:சிலருக்கு இளம் வயதில் வழுக்கை 
18:உயரமானவர் 
19:விரைவாக நடக்கும் இயல்புடையவர்
20:கருமையான கண்கள் மற்றும் ரோமம் உடையவர்
21:புருவங்கள்  வளைந்தும் அடர்ந்த ரோமங்களை கொண்டிருப்பார்கள் 
22:மெலிந்த உடலினை கொண்டிருப்பார்கள் 
23:குரல்மெலிந்து கீச்சுக்குரலாகவும் இருக்கும் 
24:இவர்கள் கண்கள்  கண்ணியமானவர் என்று கூறும்
25:வெளிநாட்டில் பிறந்த கன்னி லக்னத்தார் நீல நிற கண்களை உடையவர்(2ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் )
26:எப்பொழுதும் சஞ்சல புத்தியுண்டு
27:மாறுதலை விரும்புதல் 
28:அடிக்கடி குடியிருப்புகளை மாற்றுவதில் விருப்பம்
29:கடமையுணர்வு அதிகம்
30:வியாபார சம்பந்தமான உள்ளுணர்வு 
31:சுறுசுறுப்பு 
32:செயல்பாடுகளில் வேகம்
33:மூக்கு நேராக இருக்கும் 
34:அபார அறிவாற்றல்
35:சிந்தனையாளர் 
36:ஆராய்ச்சி மனம் 
37:எதையும் விரைவாக புரிந்து கொள்வார்கள் 
38:திறமையாகப் பேசும் ஆற்றல்  
39:எழுத்தற்றல்
40:தொழில் மற்றும் வியாபாரகளில் நூதனம் மற்றும் சாமர்த்தியம் பெற்றிருத்தல் 
41:இரண்டு, ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் மற்றும் லக்கன,பத்தாம் அதிபதி புதன் வருவதால் இந்த கன்னி லக்கனர் பெரும்பாலும் செல்வ செழிப்பில் அபாரமாக இருப்பர் 
42:வெளியூரில் சென்று தொழில் செய்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் 
43:எழுத்தாளர் 
44:கவிஞர் 
45:பாடகர் 
46:டைப்பிஸ்ட் 
47:ஸ்டென்னோ 
48:விவசாயம் 
49:ஆடிட்டர் 
50:ஆய்வாளர்
51:வருமானதுறை அதிகாரிகள் 
52:பரிசோதகர் 
53: 2,6,10 அதிபதி  கன்னியில் அமர்ந்நு சூரியனின் சுப பார்வை பெற்றால் மருத்துவராக வாய்ப்பு உள்ளது 
54:சுகாதாரத்துறை அதிகாரிகள் 
55:ஆசிரியர்கள் 
56:பொறியாளர் 
57:கணக்கு தணிக்கைத்துறை 
58:2,6,10 அதிபதி கன்னியில் அமர்ந்து செவ்வாயின் சுப பார்வை பெற்றால் சொந்த  மருத்துவமனை  வைக்கலாம் 
59:அறிவியல் கருவிகள் விற்பனை 
60:வீட்டு உபயோகபொருட்கள் வியாபாரம் 61:2,6,10 அதிபதி கன்னியில் அமர்ந்து  சந்திரன் சுப பார்வை கிடைத்தால்  கப்பல் தொகுதி பணி
62:கடற்படையில் பணி 
63:கணக்கு பிரிவில் வேலை
64:பெட்ரோல் உற்பத்தி பணி
65:பாதரஸம் போன்ற அமில பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பணி
66:ஜவுளி துறை 
67:இங்க்
68:இங்க் ஸ்டேண்டு
69:பேனாஉற்பத்தி
70:செவ்வாய் நற்பார்வைகிடைத்தால் அச்சக பதிப்பு ஆசிரியர் 
71:தொழிற்சாலை எழுத்தர்
72:ராணுவ இலாக்கா வேலை
73:அறுவைச் சிகிச்சையாளர்
74:எஃகு உற்பத்தி
75:உரம் உற்பத்தி 
76:விவசாய கருவியுற்பத்தி 
77:செவ்வாயின் அசுப பார்வை பெற்றால்  உடன் இருப்பவர் பிளாக் மெயில் செய்து துன்பபடுத்துவர்
78:புதனின் நற்பார்வைகிடைத்தால் கணக்கு ஆசிரியர் 
79:தரகர்
80:வக்கீல் 
81:கணக்குகளை பராமரிப்பவர்
82:மருத்துவர்
83:அனேக புத்தகங்களின் ஆசிரியர் 
84:செய்தி சேகரிப்பு 
85:பத்திரிக்கை ஆசிரியர் 
86:பதிவாளர் 
87:மொழிபெயர்பாளர்
88:திட்டம் திட்டுவதில் வல்லவர்கள் 
89:குருவின் நற்பார்வைகிடைத்தால்  பேராசிரியர் 
90:மதம்
91:சட்டம்
92:ஆயுள் பாதுகாப்பீட்டு கழகம்
93:இலக்கியம்
94:அறிவியல் 
95:புத்தி கூர்மை 
96:முதலீடு தொழில்
97:பங்கு சந்தை 
98:சமய அறநிலையத்துறை 
99:நீதிமன்றம் 
100:வங்கிகள்
101:தூதரக பணி
102:சுக்கிரனின் சுபபார்வை பெற்றால் நல்ல நடிகர்
103:வண்ணம் தீட்டுபவர்
104:சங்கீத துறையில் இருப்பவர்
105:அழகு சாதனப் பொருள் விற்பனை 
106:மகளிர் ஆடை தைய்ப்பவர்
107:மிட்டாய் கடை
108:உணவுக்கடை
109:தங்கும் விடுதி 
110:வாசனை பொருட்கள் விற்பனை
111:சனிபகவானின் நற்பார்வைகிடைத்தால்  புள்ளி விவரங்கள் துறை
112:பௌதிகத்துறை
113:வேகத்தை போதிக்கும் பாட பிரிவு
114:சுரங்கப் பொருட்கள் ஏற்றுமதி 
115:செவ்வாய் பார்வை பெற்றால் ரேகை பிரிவு
116:மேலும் கன்னி லக்னத்தினர் மின்துறை
117:தேர்தல் ஆணையம் 
118:சத்துணவு 
119:நிதியமைச்சர் 
120:வருமானதுறை அமைச்சர் 
121:மக்கள் தொகை கணக்கெடுப்பு
122:விமான பயணத்தில் பணி
123:தேயிலை உற்பத்தி 
124:கப்பல் வியாபார ஏற்றுமதி,இறக்குமதி 
125:நோய்கள் ஜீரண  சக்தி குறைவு 
126:குடல் பாதிப்பு 
127:சீதபேதி 
128:டைபாய்டு 
129:பித்தபைக்கல்
130:நரம்பு நோய் 
131:காய்ச்சல் 
132:அர்த்தமற்ற மனகவலை
133:மனகுழப்பம்
134:சிறுசிறு விபத்துகள் 
135:கன்னி ராசிகுரிய இடங்களும், பொருட்களும் தோட்டங்கள்
136:உணவு விடுதிகள் 
137:களஞ்சியங்கள் 
138:தங்குமிடம்
139:நஞ்சை,புஞ்சை நிலம்
140:புத்தக அலமாரி 
141:காய்கறி வைக்கும் இடம்
142:முதலுதவி பெட்டி 
143:பால் பண்ணை 
144:வைத்திய பெட்டி
145:படிக்கும் அறைகள்
146:பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் வைக்கும்  அறை
147:கன்னி ராசி குறிக்கும் நாடுகள் துருக்கி
148:க்ரோஷியா
149:மெசாபீடாமியர்
150:பாபிலோன்
151:ஆஸ்திரியா
152:திபெத்திற்கும் யூப்ரடீஸ்ஸிக்கும் மத்தியில் உள்ள இடம்
156:கிரீஸ்
157:தெஸ்ஸாலி
158:ஸ்வீட்சர்லாந்து
159:கிழசைலீஷியர்
160:பிரேசில்
161:வரிஜ்னியா
162:மேற்கு இந்தியத்தீவு
163:கன்னிராசி குறிக்கும் நகரங்கள் ஜெருசலம் 
164:பாரிஸ்
165:படூவா
166:ரீடிங்
167:லயோன்ஸ்
168:பாஸ்டன்
169:லாஸ் ஏஞ்சல்ஸ் 
170:நார்விச்
171:செல்டன்ஹாம்
172:பாக்தாத் 
173:தொட்மோர்டக்
174:காரிநத்
175:பிரிஸ்டிஸ்
கால புருச தத்வ படி புதன் 3.6க் குடையவர் கன்னி உபயம் ராசி புதன் ஆட்சி வீடு மூலத்திரிகோணம் அதுவே சூரியன் சமம் சந்திரன் நட்பு செவ்வாய் பகை குரு பகை சுக்கிரன் நீச்சம் சனி நட்பு ராகு நட்பு கேது நட்பு இதில் சுக்கிரன் நீச்சம்  நட்சத்திரம் சித்திரை, சுக்கிரன் கன்னியில் இருந்தால் மாமனார் வீட்டு  பகுதியில் அல்லது அதன் வீதியில்  மருமகன் வீடு மாறி இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் சூரியன் நட்சத்திரம் உத்திரம் எருது  2.3.4பாதம்,சந்திரன்  நட்சத்திரம் ஹஸ்தம் பெண் எருமை 1.2.3.4பாதம்,செவ்வாய் நட்சத்திரம் சித்திரை ஆண் சிங்கம் 1.2பாதம்  கையில் விளக்கு ஏந்திய கன்னி பெண் உருவம் கன்னியில் சூரியன் புதன் இருந்தால் ஜோதிடர் அல்லது ஜோதிடத்தை தெரிந்து வைத்து இருப்பார்கள்
கன்னி ராசி மேய்ச்சல் பூமி பள்ளியறை பள்ளிக்கூடம் மருத்துவமனை மருத்துவப் பொருள்கள் உள்ள இடம் ஆகியவற்றை குறிக்கும். வெண்மை நிறம் கொண்டது பெண் உருவத்தை கொண்டது. கன்னியின் அதிபதி புதன் பெரும்பாலும் சூரியனுக்கு முன்னும் பின்னும் சஞ்சாரம் செய்யும். புதன் பகவானை காலியிடம் காதல் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பேசுவார்கள்
கன்னி ராசி  வேறு பெயர்கள். ஹரி. மலைமா. சீயம். புலி கடுவன் மாது தையல் சேடிப்பெண் மற்றும் என
இதில் பிறந்தவர்கள் சாஸ்திரம் சிற்பம் தேவாலயம் நுட்பமான திறமைகள் இருக்கும்.
பிறந்தவர்களுக்கு சுகஸ்தான அதிபதி குரு. தனா பாக்கிய காரனான சுக்கிரன் கூடி லக்னத்துக்கு 4. நாளில் அதாவது தனுசில் இருந்தால் இவளுடைய திசையில் விசேஷ யோகம் வரும்.
கன்னியில் பிறந்த ஜாதகர்கள் 9-க்குடைய சுக்கிரன் லாபாதிபதி சந்திரன் இணைந்து ஏழில் இருந்தால் ஏழுக்கு உடையவன் பதினொன்றில் இருந்தால் வாழ்க்கையில் சுகபோகமாக இருப்பார்
(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). * கன்னி (VIRGO) இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும்கூட. இதன் அதிபதி புதன். புதனுக்கு இது உச்ச வீடாகவும் மற்றும் மூலத் திரிகோண வீடாகவும் ஆகிறது. இந்த ராசிக்கு ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசிக்கு உரிய சின்னம் F. புதனுக்கு சுக்கிரன் நண்பனாக இருந்தாலும், இந்த ராசியில்தான் சுக்கிரன் நீச்சமாகிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள். சனி இருப்பின், அது நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தையும், உள் உறுப்புகளில் குடலையும் குறிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள், பணம் சேமிக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் சேமிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
மிதுன ராசியைப் போலவே கன்னி ராசிக்கும் புதனே அதிபதி ஆகிறார். ஆனால், மிதுன ராசியினர் எதிலும் பட்டும் படாமலும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். கன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.
kanni
புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள்.
பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள். உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.
11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார் கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.

astrology
உங்கள் வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும், நீங்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும். ஏனெனில், உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள். புதனுக்கு வித்யாபலத்தையும் ஞான பலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள். அகிலத்தையே அசைக்கும் ஈசனான இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் சித்தத்தில் நிறுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
கன்னி:
கன்னி மகனை கைவிடேல் என்ற பழமொழிக்கு உட்பட்ட இவர்கள் மற்றவர்களின் பாராட்டுதல்களைக் காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஏனென்றால் அமைதி இவர்கள் முகத்தில் இருக்கும். ஆக்ரோஷம் இவர்கள் மனதில் இடம் பிடிக்கும். ஒருவரைப் பார்த்தால், பார்த்த உடனேயே இவர்கள் இப்படித்தான் என்று கணித்து விடுவார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் புத்திசாலித்தனத்திற்கும் வாழ்வில் நடுப்பங்கில் புகழ் கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும். கன்னியர்களை தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் போது கவனமாகப் பொருத்தம் பார்த்து செய்தால் புகழோடும், பொருளோடும் வாழ இயலும்.
கன்னி கால புருஷனின் ஆறாவது வீடு இந்த வீட்டின் அதிபதி புதன் பகவான் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆகும் உபய ராசி தன்மை கொண்டதாகவும் தீர்கமான செயலை கொண்ட  தத்துவத்தையும்  குறிக்கிறது பயிர் வகைகளில் செடியாகவும் ஜீவனுள்ள ராசியாகவும் மூலத்தையும் மக்கள் வாழும் பகுதியையும் இயல்பான நடையையும் நிறத்தில் கருப்பும் அதேநேரம் வெளிர் மஞ்சள் நிறத்தையும் குறிக்கிறது பெண் ராசியாகவும் உள்ளது கன்னி ராசியின் குண நலன்கள் பொறுமையோடு கூடிய ஆர்வமும் உழைப்பும் உயர்வும் எதற்காகவும் யாருக்காகவும் மாறாத தன்மையும்  இளகிய மனமும் வளைந்து கொடுக்காத தன்மையும்  சுயநலத்துடன் கூடிய பொது நல நோக்கத்துடன் செயல்பட்டு காரியசித்தி அடைவதும் தயக்கம்  இல்லாத செயல்பாடும் அண்டினோரை ஆதரிப்பதும்  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவதும் புரியாததை  அறிந்து தெரிந்து  பிறகு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதும்  அனைத்தும்  அறிந்து தெளிந்த பின்பு மற்றவர்களுக்கு விளக்கும் தன்மையும் கடமை உணர்வும் காரியசித்தி ஊக்கமான  சோம்பல் இல்லாமல்  எந்த சூழ்நிலையையும் தன்னை மாற்றிக் கொள்ளாத நிலையில் வேகமான விவேகத்துடன் கூடிய செயலையும் நிதானத்துடன் கூடிய பழக்கவழக்கமும் நேர்மையை பின்பற்றும் போக்கும் ஒழுக்கம் உயர்ந்த குணமும் தர்ம குணமும்  உயர்ந்தவர்கள் இடத்தில் நட்பும்  பொருள்மீது ஆசை யும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத தன்மையும் பழக்கத்திற்கு நட்பும் நட்புக்கு மரியாதை கொடுக்கும் அமைப்பும்  பணத்தை பாதுகாப்பதும் பலமுறை யோசித்து முடிவெடுக்கும் தன்மை தன்  முடிவுக்கு தானே கட்டுப்படுதலும் எப்போதும் எச்சரிக்கையுடன் பழகுவதும்  செயல்படுவதும் தன் மீது கலங்கம் இல்லா வாழ்க்கைக்கு பாடுபடுவதும் பு ஒழுக்கத்தை பழக்கவழக்கத்தில்  சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்வை விரும்புவதும்  புதியவைகளை அனுபவத்தின் மூலம் தெரிய வைக்கும் போக்கு நேசிக்கும் தன்மை பழிவாங்கும் தன்மை தாய் தந்தையை நேசிக்கும் அமைப்பு  மரியாதையுடன் வாழ்வதும் செல்வத்தில் விருப்பமும் நாட்டம்  பேச்சு வாதத்திற்கும் சூழ்ச்சியை முறியடிக்கும் அனுபவம்  தாய் தந்தையரை தெய்வமாக வணங்கும் அமைப்பு தனக்கு பின்வரும் சந்ததியினருக்கு தன்னால் முடிந்ததை  சேர்த்து வைத்தல் வாழும் காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்து புகழை நிலை நாட்டுவதும் இயல்பான குணமாக அமையும்                                             கன்னி லக்கினத்தில் பிறந்தவர்
1. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய சதயம், பூரட்டாதி, ஆயில்யம், பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.
2. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும் விலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும், பத்திரங்கள் வாங்கவும், அவற்றைதமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
3. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய, வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து விண்ணப்பம் செய்ய, அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
4. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, பரணி, பூரம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
5. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள்,மந்திரங்கள் படிக்க தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல, காதல் விசயங்களை ஆரம்பிக்க நோயிலிருந்து விடுபட மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற, சங்கீதம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும் சீரியல் எடுக்க ஆரம்பம் செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை செல்வம் கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி மருத்து சிகிச்சைகள் செய்ய, திருவோணம், ரோகிணி, அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வர மேன்மையான பலன்கள் உண்டாகும்.
6. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
7. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க,
திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண்/மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த திருவோணம், அவிட்டம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

8. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி போட ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் அசுவனி, பரணி, கார்த்திகை.
9. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும், உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் தொடங்க,தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
10. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும் தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவிலியிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும்

Friday, 15 January 2021

மும்பை தாதா

 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் கண்ணதாசன்(வயது 52). குடும்ப வறுமையின் காரணமாக கண்ணதாசனின் 11 வயதில், தாயார் பூங்காவனம் அம்மாள் தனது உறவினர்களுடன் அவரை வேலைக்காக மும்பை அனுப்பி வைத்துள்ளார்.மும்பை தாராவி அருகே வசித்து வந்த இவர், அங்குள்ள உணவகம் ஒன்றில் தொடர்ந்து 6 வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைத்து கவரிங் நகைகள் மற்றும் பொருட்கள் விற்றுவந்தார், நாளடைவில் அதே தொழிலைச் சொந்தமாகச் செய்யத் தொடங்கினர்.அந்த நேரத்தில் அப்பகுதியில் ரௌடிகள் பலர் மாமூல் கேட்டு அங்குள்ள கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதேபோன்று இவர் சம்பாதிக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கும் செயலில் அந்த ரௌடிகள் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பணம் கேட்டு மிரட்டும் ரௌடிகளை தாக்கியுள்ளார். அதிலிருந்து இந்த ரௌடிகளால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்கிறது.

இதனால் பொது மக்கள், வியாபாரிகளுக்காக ரௌடிகளால் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்ய தொடங்குகிறார். நாளடைவில் இவரது நட்பு வட்டாரம் பெரிதாகவே, அப்பகுதியில் வசிக்கும் வியாபாரிகள் மற்றும் மக்களின் நலனுக்காக அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து அதையே வேலையாக செய்ய ஆரம்பித்தார்.இதனால் அப்பகுதியில் முக்கிய நபராக பார்க்கப்பட்டு வந்த இவர் மீது, மும்பை காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வந்தன.நாளடைவில் ஒரு கொலை வழக்கில் கைதானார். 1988ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் இவருக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியதால், மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் பிறகு நாசிக் மத்திய சிறை, கோல்ஹாபூர் மத்திய சிறை, ரத்னகிரி சிறப்பு சிறை, புணே மத்திய சிறை என மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சிறைகளில் கண்ணதாசன் அடைக்கப்பட்டிருந்தார்."குறிப்பாக, சிறையில் நான் அடங்காத காரணத்தினால் என்னை மகாராஷ்டிரா மாநிலத்தில், அடங்காத கைதிகளைக் கட்டுப்படுத்தும் சிறைச்சாலையாக இருந்த ரத்னகிரி சிறப்பு சிறைச்சாலைக்கு மாற்றினர்.நான் சரியாக ஒத்துழைக்காமல் இருந்த காரணத்தினால், அப்போது என்னைப் போன்றவர்களைக் கட்டுப்படுத்த சிறையில் கடுமையாக தாக்குவார்கள்.

அந்த காலகட்டத்தில், டெல்லி திஹார் சிறைச்சாலையின் சிறைத்துறை தலைமை இயக்குநராக கிரண்பேடி இருந்தார். அப்போது அவர் திஹார் சிறைவாசிகளுக்கு யோகா, தியானம் போன்றவற்றைக் கைதிகளின் நலன் கருதி பயிற்சி கொடுக்கும் முயற்சியைச் செய்யத் தொடங்கினார்.அந்த செய்தி நாடு முழுவதும் உள்ள செய்தி நாளேடுகள் மூலம் வெளியே தெரியவந்தது. அதன் பிறகு வந்த நாட்களில், நான் இருந்த ரத்னகிரி சிறப்புச் சிறையிலும் கைதிகளுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி கற்றுக்கொடுக்கத் தொடங்கினர்.அதையடுத்து என் நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கொஞ்சம் மனம் திருந்திய காரணத்தினால், ரத்னகிரி சிறையிலிருந்து புனே மத்திய சிறைக்கு மாற்றினர். இப்படியே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளைக் கடந்து விட்டேன்.இதனிடையே, இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேறு மாநிலத்தைச் சேர்த்த சிறைவாசிகள், தாய் சிறை என்று சொல்லப்படும் சொந்த மாநில சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி, 10 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்த என்னை, தமிழகத்தில் உள்ள கடலூர் மத்திய சிறைக்கு மாற்றினர்," என்கிறார் கண்ணதாசன்.இதையடுத்து கண்ணதாசன் கடலூர் சிறையில் கற்றுத் தரும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். இதனால் சிறைத்துறைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்ற இவர், புதிய கைதிகளுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்பெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். பிறகு அவருக்கு கடலூர் சிறையில் குற்றக் காவலர் பொறுப்பு வழங்கப்பட்டது.

"இப்படியே கடலூர் சிறையில் 11 ஆண்டுகள் சென்ற பிறகு, தன்னை விடுதலைக்குப் பரிந்துரைக்க அப்போதைய மாவட்ட ஆட்சியர், சிறைத்துறைத் தலைவர், சிறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாளன்று எனக்கு விடுதலையென்று அறிவிப்பு வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் உட்பட 21 ஆண்டுகள் வெளி உலகம் பார்க்காமல் தொடர்ந்து சிறையிலேயே இருந்தேன். இதையடுத்து எனது விடுதலைக்குக் குறித்து கேள்விப்படும் போது, எனக்கு ஒன்றும் புரியவில்லை.நான் மும்பை சிறையில் அடைக்கப்பட்ட போது, நான் உயிருடன் இல்லை என்று நினைத்து கவலையிலேயே எனது பெற்றோர் உயிரிழந்து விட்டனர். நான் உட்பட என்னுடன் பிறந்த 13 சகோதர, சகோதரிகள் என்னைக் கண்டு கொள்ளவும் இல்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படி வெளியே சென்று வாழ்வது என்று தடுமாற்றமானேன்," என்று வேதனையுடன் கண்ணதாசன் தெரிவித்தார்.

"பின்னர் கடலூர் சிறையிலிருந்து விடுதலையானதும் எனது உடன் பிறந்தவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று எண்ணி தனியாக வாழத் தொடங்கினேன். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா வேலை செய்யத் தொடங்கியதும், செருப்பு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.பிறகு கம்பளி ஆடைகள் விற்கத் தொடங்கினேன். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையில் செய்யும் வியாபாரங்கள் கை கொடுக்கவில்லை. நானும் மனம் தளராமல் தொடர்ந்து பல வேலைகளை நேர்மையாகச் செய்து வந்தேன். அதன் பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளர் வேலை கிடைத்தது.இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்கையில், குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது. அந்த நேரத்தில் நான் திருமணத்திற்குப் பெண் தேடியபொழுது, கொலை குற்றம் செய்து 21 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை பெற்ற எனக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க பயந்து யாரும் முன்வரவில்லை.அதன் பிறகு சமயபுரத்தில் திருமணமாகி கணவரை இழந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணை அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு இன்று வரை இருவரும் நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறோம்," என்கிறார் கண்ணதாசன்.

திருமணத்திற்குப் பிறகு கண்ணதாசன் அவரது முன்னோர்கள் செய்து வந்த மூலிகை டீ தொழிலைக் கையில் எடுத்தார். டீ, சுக்கு காப்பி, மிளகு பால், பாதம் பால், தூதுவளை, ஆவாரம்பூ, முடக்கத்தான் மூலிகை சூப்பு மற்றும் டீ வகைகளைத் தயாரிக்கும் அனுபவம் கண்ணதாசனுக்கு இருந்ததால், அதைத் தனது மனைவி சங்கீதாவிற்குக் கற்றுக்கொடுத்தார்.

தற்போது இவரது மனைவி தயார் செய்து கொடுக்கும் இந்த மூலிகை டீ அனைத்தையும், விருத்தாசலம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகங்கள், ஆட்டோ, கார், பேருந்து நிலையங்கள் எனத் தினமும் காலை மற்றும் பிற்பகல் இரு வேளைகளில் விற்பனை செய்து வருகிறார்.எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் எந்த கஷ்டங்களும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கண்ணதாசனின் மனைவி சங்கீதா கண்ணதாசன் கூறுகிறார்."எனது கணவர் வியாபாரம் மூலம் தினம் சம்பாதிக்கும் பணத்தில், ரூபாய் 200க்கு வாழைப்பழங்கள் வாங்கி சென்று அருகே இருக்கும் குரங்குகளுக்குக் கொடுப்பார். இதுபோன்று வெளியிலும், வீட்டிலும் இருக்கும் பிராணிகளுக்கு உணவளித்துப் பராமரிப்பது எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்ற மனக் குறை நீங்குகிறது," என்கிறார் சங்கீதா கண்ணதாசன்.எனது சிறை வாழ்க்கை மிக கடுமையாக இருந்தது, அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன். தற்போது இப்படி ஒரு நல்ல நிலையில் நான் இருப்பது எனக்குக் கிடைத்த மறுபிறவியாகக் கருதுகிறேன் என்கிறார் கண்ணதாசன்."எனினும் இன்று வரை எனது மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே தான் இருக்கிறது. நான் செய்த குற்றச் சம்பவங்களை நினைக்கும்போது, அது ஒரு ஆராத வடுவாக எனக்குள் இருக்கிறது. நான் என்ன தான் மனம் திருந்தி நல்லது செய்தாலும் என்னைப் பார்ப்பவர்கள் என்னைத் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். நிறைய பாவங்கள் செய்து, இப்படி வாழ்ந்தால் எல்லாம் சரியாகி விடுமா என்று பலர் என்னிடம் நேரடியாகக் கேட்டிருக்கின்றனர். அந்த நேரங்களில் எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும்," என கவலையுடன் கூறுகிறார் அவர்.

"எனது வாழ்க்கை இப்போது இருக்கக்கூடிய அனைத்து இளைய சமூகத்திற்கும் பாடமாக இருக்க வேண்டும். குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர் பலரும் பொருளாதார நெருக்கடியில் ஒவ்வொரு பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றனர்.இந்த நேரத்தில் என்னைப் போன்று குற்றம் செய்துவிட்டால், அவர்களுடைய நிலை என்ன ஆகும் என்று கண்ணெதிரே பார்த்திருக்கிறேன். சிறு வயதில் எதையும் யோசித்துப் பார்க்காமல் தவறு செய்து விடுவோம். ஆனால் சிறைக்குச் சென்ற பிறகு அந்த நான்கு சுவரிற்குள் என்ன நடந்தாலும் வெளி உலகிற்குத் தெரியாது.ஆகவே அனைத்து இளைஞர்களும் குடும்ப சூழ்நிலையறிந்து எந்த தவறான செயல்களில் ஈடுபடாமல் பெற்றோர் சொற்படி நடக்கவேண்டும் என இரு கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். எந்த வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள், செய்யும் வேலையைப் பெருமையாகப் பாருங்கள்," என்று கூறுகிறார் மூலிகை டீ வியாபாரி கண்ணதாசன்.

Wednesday, 6 January 2021

நிவாரணம் கிடைக்குமா?

நிவாரணம் கிடைக்குமா?

தூக்கத்தை துளைத்து
துன்பத்தை துறந்து
தூவானத்தை நம்பி
துதித்து பயிரிட்டு என்ன பயன்!

பத்து ரூபா செலவு செஞ்சி
எட்டு ரூபா கிடைச்சாக் கூட
கணக்கு பார்க்காம உழைச்சி
கிடைச்ச பயன் 
அரை வயிறாவது நிரம்பும்.

புரவி கிரவின்னு வந்து
சூறாவளி முகாந்திரம் போட்டாலும்
நிரம்பிய அரை வயிறும் காணாம போகும்,

தோல் சுருங்கிய நெஞ்சங்கள்
பயிரை கையில் ஏந்தி
விவசாய களத்தில் நின்றனர்.
காப்பீடு செய்தும் புண்ணியமில்லை,
நிவாரணமாவது கொடுங்களேன்!
வாடிய பயிர்களுடன்
போராட்ட களத்தையும் காண்கின்றனர்.

சாலை விழிப்புணர்வு

சாலை பயணத்தில்
நம் சகலமும் பயணிக்கிறது,
நொடியில் இடி விழுந்தால்
பயணம் பங்கமாகும்!

வாகனத்தில் புறப்படும் போது
இல்லத்தரசியின் நெஞ்சம் படபடக்கும்,
வீடு வந்து சேரும் வரை
பிபி எகிறி, ஹார்ட் அட்டாக் வரை
வந்து போகும்.

ஹெல்மெட் அணியா மண்டையை
எமனின் பாசக் கயிறு எளிதில் ஈர்க்கும்,
சீட் பெல்ட் போடாத உடலை
சித்ரகுப்தனின் டைரி கூறு  போட்டு விற்கும்.

சூதும் வாதும் வாழ்க்கைக்கு உதவும்
செல்போன் பேசி வாகனம் ஓட்டினால்
பிரச்சினைகள் உன்னை கவ்வும்.

நீ சிக்னல் கொடுத்தால் காதலி
கவனிக்கும் போது இனிக்கும்.
சிக்னலே உனக்கு சிக்னல் கொடுத்தால்,
சிக்கலில் வாழ்க்கை கசக்கும்.

காப்பீடு உன்னை காக்கும்,
உன் குடும்பத்தையும் காக்கும்,
உன் வாகனத்தை காக்கும்,
எதிரியையும் காக்கும்.

மோட்டாரில் பயணம்,
எப்பொழுதும் எதுவும் நடக்கும்,
கவனம் சிதறினால் மரணமும் நடக்கும்,
அப்பாவியின் குடும்பமும் சிதையும்.

விபத்து என்பது ஒரு சாபமல்ல,
உனக்கு நீயே தரும் பாவம்,
உமது கவன சிதறலால் நடக்கும் கொடுமை,
உன் மடமைக்கு கிடைத்த பரிசு.

ஒரு கையில் ஸ்டியரிங்கு,
மற்றொரு கையில் செல்போனு,
உனக்கு இருக்கிறது விரைவில் ஆப்பு,
எதிரே நிற்கிறது எமனின் ஜீப்பு.

வீதியில் கவனத்துடன் போனால் உல்லாசம்,
போதையில் போனால் கைலாசம்,
கூலா போனால் குடும்பம் உன் வசம்,
டென்ஷனில் போனால் எல்லாம் நாசம்.

சாலை விதிகள் உன்னை வாழ வைக்கும்,
நீ மீறி விட்டால் சவக் குழிக்குள் தள்ளும்.
சட்டமும் திட்டமும் உன்னை காக்கும்,
மீறும் போது உன்னை வீழ்த்தும்.

குடி உனக்கு மகிழ்ச்சியை  கொடுக்கலாம்,
போதையில் வாகனம் ஓட்டினால்,
உன் சமுகத்தையே குடிக்கலாம்,

விபத்தில் உயிர் போனால்
குடும்பம் நிர்கதியாகும்.
உயிர் தப்பினால்
குடும்பம் பின்னோக்கி சுழலும்.

நன்றாக இருந்தால்
நாலு காசும் வேண்டாம்,
பத்தில் ஒன்றாக வாழலாம்.
விபத்தில் சிக்கினால்
நாலு காசும் நாசமாகும்,
நலமும் விரையமாகும்.







இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

இனிய புத்தாண்டே வா!
2020 இறக்கும் போது
என் தீவினைகள் அழிகின்றன!
2021 பிறக்கும் போது என் நல்விணைகள்
பிறக்கின்றதாகவே நம்புகின்றேன்!

எனது ராசியோ என்னவோ
ஒவ்வொரு வருடமும் புதிய நட்புகள்
பிறக்கின்றன,
சில வருடங்களில் நட்பில் பிளவுகள் நடக்கின்றன,

அதனால் வெறுப்புகளை
உமிழ்ந்ததில்லை நான்,
அப்படி உமிழ்ந்தால் நாம் அன்னாந்து படுத்துக் கொண்டு
உமிழ்ந்தால் நம்மீதே எச்சில் படுமல்லவா,
அதனால் கட்டுப்படுத்தி கொள்கிறேன்,

ஆனால் என் மீது உண்மையான நட்பு பாசம்
கொண்டவர்களை
என் புரிதல் இன்மையால்
இழந்திருக்கிறேன்,
என்னை நேசித்தவர்கள்
என்னை மன்னிக்கவும்.

சில உறவுகள் நம்மை
புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்,
காரியம் ஆக
காலை பிடிக்கவும் அவர்கள்
மறுத்ததில்லை,
காரியம் ஆனதும் கழட்டி விடவும்
அவர்கள் தயங்கியதில்லை,
(புரிந்தவர்களுக்கு புரியும்)

தயவு செய்து உறவை கூறி, சமுகத்தை
கூறி ஆதாயம் தேட முயற்ச்சிக்காதீர்கள்.
அவ்வாறு நீங்கள் நடந்தால் தான்
மற்றவர்களாலும் நடக்க முடியும்.

ஒரு சிலருக்கு நான் ஆதரவாக
 நடப்பதாக (நான் தந்தை ஸ்தானத்தில் நினைக்கும்) சில விஷமிகள் பிரச்சாரம் செய்யலாம்.
எனக்கு விதிக்கப்பட்ட விதிகளின்படியே நான் செயல்படுகிறேன்.
2021 லும் அப்படியேத் தான் நடப்பேன்.
அதில் விதிகள் மாறினால்
நானும் மாறித்தானே ஆக வேண்டும்.

அன்பிற்கும், பாசத்திற்கும், உறவுக்கும்
பாலமாக இருக்க நினைத்ததன் பலன்
இன்று நான்
சிலரின் சூழ்ச்சி, தந்திரத்தால்
பலருக்கு வேண்டாதவனாகியிருக்கலாம்.
என்னை புறம் பேசி மகிழ்ந்திருக்கலாம், .
அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை,
நான் என்றும் பொதுவானவனே!

செய்தியாளரான பின்பு
பல நல்ல உள்ளங்களை சந்தித்துள்ளேன்.
சில பல நட்புகளை சம்பாதித்தேன்,

சில சிக்கல்கள், பல புகழ்ச்சிகள்,
பல இகழ்ச்சிகள்,
சில பல மாறுதல்கள்,
சிலரை சமாளிக்க வேண்டி
என் இயல்பு தன்மையை இழந்தும்
பலனில்லை,

சிலர் சமுக உணர்வுடன் செயல்படு என்றனர்,
நான் செயல்பட்டும் பலனில்லை,
ஆனால் அவ்வாறு கூறியவர்கள்
மாறி விடுகின்றனர்.

சிலர் நண்பர்களை கைவிடாதே என்றனர்,
அவர்களை தலையில் தூக்கி வைத்த பலன்,
அந்த நண்பர்களே இன்னும் சமுகத்தை
காட்டி நட்பை இகழ்வடைய செய்கின்றனர்!

ஒரு சிலரை உயிராக நினைத்து 
பழகியும் பலனில்லை,
காலாவதியாகிவிடுகின்றனர்.
அதனால் யாரிடமும் 
நெருங்கி பழக ஒரு பயம்!

கடந்த 2019 ம்ஆண்டு கவிஞராய்
உதயமானேன்,
2020 ம் ஆண்டில்
எழுத்தாளராய் ஆக ஆசை,
ஏனோ நிறைவேறவில்லை.

ஒரு சிலரை பிடித்து போய்
சேவை புரிந்தும் பயனில்லை,
ஒரு நபர், நான் தான் உன்னை வளர்த்து விடுகின்றேன் என்கின்றார்.
( #யூரியா, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, மர்லி மாவு போட்டு வளர்த்தவர் #அவர்தான்)
இன்று அவர் வளர்ந்த உயரம்
மங்கி வருகிறது, 
தலைக்கணம் தலையை காணாமல் செய்யும்
பதவி வந்தால் பணிவும் உடன் வர வேண்டும்.
இல்லையேல் காணாமல் போக வேண்டும்.

ஒரு சிலரை நான் உயர்த்த வேண்டும்
என நினைத்தால்,
அவர்கள் மற்றொரு நபரை
வளர்க்க முற்படுகின்றனர்.


விவரம் தெரிந்த 30 வருடங்களில்
அனுபவங்கள் சில பல,
ஆனால் என்னுடன் பழுகும் நட்புகளை
மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை,,

ஒவ்வொரு நட்பும் ஒரு விதம்,
ஒரு நட்பு எனக்கு பிடித்தவருடன் மட்டுமே
பேச வேண்டும் என்கிறது,
மற்றொரு நட்பு எனக்கு பிடிக்காதவர்களுடன் பேசினால்
எனக்கு எதிராய் சதி செய்கிறது.

எனக்கு எதிராய்,
என்னை காலி செய்யும் நோக்குடன்
அவதூறு கடிதம் எழுதியவர்களோ,
இன்று நெருங்கி தான் பழகுகின்றனர்.
என்ன செய்ய,
நட்பை மதிக்க வேண்டி 
நடந்ததை மறந்து பழக வேண்டிய நிலை.

அனைவருக்கும் நல்லவனாக இருக்க விரும்பினேன்,
நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாகவே
நடிப்பது!
இந்த வருடம் முதல்
எண் இயல்பு என்னவோ அதன்படி
நடிக்க போகிறேன்!

#வாழ்க்கையே_ஒரு_நாடக -மேடை_அதில்_நான்_ஒரு_கலைஞன்.

யாரோ கூறியது!

(பின் குறிப்பு : இது கவிதை இல்லீங்கோ, எனது மனக் குமுறல், உடனே வரிந்து கட்டிக்கிட்டு இது உரைநடையாக உள்ளது என மட்டும் பதிவை போட்ராதீங்க, ஏன்னா ஒரு பிரபல எழுத்தாளர் என்னையே பாலோ பன்றார்.)








விவசாயம் விளையாட்டல்ல

விவசாயம்
விளையாட்டு
அல்ல,
வினையாகும்,
விலையாகும்,
வில்லாகும்,
விபரமாகும்,
விகாரமாக்கும்,
விதியாக மட்டும்
விளையாடாதே!
விண்ணிற்கு
விலையாகிடுவாய்

பட்டியார்

#பட்டியார் (பட்டி.சு.செங்குட்டுவன்) நினைவாஞ்சலி நிகழ்ச்சி

கிருக்கல்களை கவிதை என்றார்,
இலக்கிய உலகிற்கு வரவேற்றார்,
தாய் பாலூட்டி வளர்த்தாள்,
பட்டியார் இலக்கியத்தை ஊட்டி வளர்த்தார்,

கவியுலகிற்கு
அறிமுகப்படுத்திய தாய் அவர்,
இதெல்லாம் கவிதையா? என்றே
எழுத்தாளர்கள்
முடக்கி வைத்தனர்,
இதுதான்யா கவிதை என
முளை விட வைத்தார்,
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் படைப்பாய்,
எழுதி கொண்டே இரு,
என ஆருடம் கூறினார்,

புலிகளின் காலம் படைத்தார்,
காட்டுப் பூனைகளிடம் சிறைப்பட்டார்,
திராவிடம் பேசினார்,
கருத்துக்கள் பதிவதில்,
தீயாய் வெகுண்டெழுந்தார்,
மனதில் பட்டதை சரவெடியாய் வெடித்தார்,
எழுத்துலகில் பசுமரத்தாணியாய் பதிந்தார்,

தமிழ் இலக்கிய உலகில்
உம்மை ஒதுக்கிடவும் முடியாது,
முக்கிய எழுத்தாளர்கள் சிகரத்தை அடைந்தாலும்
முக்காத எழுத்தாளராய் உம்மை நெஞ்சில்
சுமக்கின்றனர் பலர்,

வர வேண்டும், வர வேண்டும்,
இளைஞர்கள் முன் வரவேண்டும்,
விவசாயத்தை காக்க வேண்டும்,
இலக்கியம் படைக்க வேண்டும்,
கவி எழுதி குவிக்க வேண்டும்
இது தானய்யா உமது எண்ணம்,

நீவிர் போட்ட விதையாய் நாங்கள்,
உமது எண்ணத்தை நிறைவேற்றவே நாங்கள்,
உமக்கு எங்களின் அஞ்சலிகள்,
நீவிர் மறையவில்லை,
மணிமுக்தாறு இலக்கிய வட்டமாய்
நாங்கள் முளைத்துவிட்டோம்,

தழைத்தெழுந்து
கவிஞர்களை ஊக்கப்படுத்துவோம்,
வளர்த்தெடுப்போம், 
எங்களது உறுதியை, உமக்கு அஞ்சலியாய் மலர் தூவி காணிக்கையாக்குகிறோம்.
#இல #வீரபாண்டியன்

*கவிஞர் பட்டி சு.செங்குட்டுவனார் முதலாமாண்டு  நினைவேந்தல் கூட்டம்*

கவிஞர்  பட்டி சு.செங்குட்டுவன் அவர்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி கூட்டம்  (11-12-2020) விருத்தாசலம் பெரியார் நகர் சிவலட்சுமி அரங்கில் நடைபெற்றது. 

மணிமுத்தாறு இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பில்,  கவிஞர் இரத்தின.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் ஆ.மலர்தாசன், கவிஞர் சி.சுந்தரபாண்டியன், ஏ.கே.அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் சு.அகிலன் முன்னிலை வகித்தார். கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். 

எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தமிழக உழவர் முன்னணி நிர்வாகி க.முருகன், செநதமிழ் மரபுவழி வேளாண் நடுவம் கண்ணதாசன், 
பத்திரிகையாளர் ஆழி வீரமணி, கவிஞர் சிலம்புசெல்வி, கவிஞர்  பூவனூர் கோ.அரங்கநாதன், கவிஞர் இல.வீரபாண்டியன், ஆசியர் முருகன்குடி பழனிவேல், தமிழிளைஞர் கூட்டமைப்பு லலித்குமார், செய்தியாளர் பொன்.செல்வசுப்ரமணியன்  ஆகியோர் பட்டியாரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகள் நடத்துவது எனவும்,
இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 
பட்டி சு.செங்குட்டுவனார்  பெயரில் நினைவு விருது வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 கவிஞர் இராம.சீனிவாசன் நன்றி கூறினார்.

Monday, 4 January 2021

பரிவு

உணவு வேண்டாம்
என்ற உடன்
முகம் மாறுகிறது அன்புக்கு!

என்ன சாப்பிட்டானோ,
என்னத்த சாப்பிட்டானோ என்ற
பரிவு அவளுக்கு!

Saturday, 2 January 2021

தீபாவளி அது ஒரு வலி

தீபாவளி அது ஒரு வலி
எப்பொழுது பட்டாசு கிடைக்கும் என
முதல் நாள் இரவு வரை காத்திருந்த வலி,
மற்றவர் புத்தாடையைக் கண்டு எங்கி,
தீபாவளி அன்று காலை எழுந்து பார்த்ததும்
பறந்திடும் வலி, 
பட்டாசை கண்டதும் மலர்ந்திடும் தீப ஒளி!
பல வருடங்கள் அனுபவ அலையில்,
இன்று தீபாவளி வந்தால்,
வந்தது தெரியாமல் பட்டாசு ஒளிகள் மறைந்தே போகிறது.

ஆட்டை அறுத்து கூறு போட்டு,
விற்கும் தாத்தாவிற்கு உதவியாக
கணக்கர் வேலை பார்க்க வேண்டும்,
இடையில் ஆயாவுக்கு கொத்தமல்லி, கருவேப்பிலை வாங்கி வந்து தர வேண்டும்.
ஆட்டுக்கறியை வாங்கி செல்லும்
சித்தப்பு, பெரிப்பா, மாமா, தாத்தா, அண்ணன் மார்களின் பின்னே சென்று பணத்தை வசுலிக்கும் வசூல் மேலாளர் வேலை பார்க்க வேண்டும்.

இடையில் மற்றவர் வெடிக்கும் வெடியை வெறிக்க பார்க்க வேண்டும்,
ஆயா தலைக்கு வைத்த எண்ணெய்யைய்
ஊற வைத்து குளிக்க வேண்டும்.
ஆசையாய் புது சட்டையும், கைலியும் கட்டி கொண்டு, நமுந்து போகாமல்
அடுப்பனலில் வைத்த வெடியை எடுத்து
வெடிக்கும் போது,
ஏதோ அந்த நாள் இனிதே தொடங்கும்.

முதல் நாள் இரவில் தொடங்கி,
மறுநாள் இரவு முடிய,
எங்கே தீர்ந்துவிடுமே என்று,
மற்றவர் வெடிப்பதை வெறிக்க பார்க்க முடியாமல்,
சரவெடியை பிரித்து ஒன்றன் பின் ஒன்றாக வெடித்த காலங்களின் தழும்புகள் மட்டும் மறைய மறுக்கிறது.
டபுள் ஷாட், டிரிபிள் ஷாட், சவன் ஷாட்டை
கண்டறிந்ததே நாங்கள் தானே.
பின் எப்படி நினைவுகள் மறையும்.

வெடித்த வெடியின் தீப்பொறிகள்
புது சட்டையில் பட்டு ஓட்டை விழுந்து,
தீபாவளி ட்ரெஸ்சுக்கான அடையாளம் விழும்.
இடையில் கறி விற்ற காசில்
புத்துணர்வு பானம் அருந்திய
தாத்தாவும், ஆயாவும் போடும் சண்டையில
தீப்பொறிகளும், வார்த்தை பொறிகளும்
பட்டாசு ஒலியை தோற்கடிக்கும்.

 தீபாவளி வருடந்தோறும் வருகிறது.
அனுபவங்கள் மாறியது.
முற்காலம் தாத்தா, ஆயா, மாமாவுடன்,
சில காலம் தங்கச்சியுடன்,
தற்காலம் மனைவியுடன்,
வலிகள் மரித்துவிட்டது.
ஏனோ தழும்புகள் மறைய மறுக்கிறது.





வருக வருக வருகவே

வருக வருக வருகவே
என் தாய், தந்தையர் வருகவே
என்னை ஆசிர்வதிக்க வருகவே
என்னை வாழ்த்திடவே வருகவே

வருக வருக வருகவே
என் குருமார்கள் வருகவே,
என் ஆசான்களே வருகவே
வந்தனம் தந்தனம் தந்திடவே
வருக வருக வருகவே

வருக வருக வருகவே
நான் வணங்கும் தெய்வம் வருகவே,
நல் அருள் புரிய வருகவே,
சங்கடங்கள் தீர்க்க வருகவே,

வருக வருக வருகவே
என் உறவுகளும் வருகவே
என் நண்பர்களே வருகவே
நல்வாழ்த்து வழங்க வருகவே

வருக வருக வருகவே
என்னை ஆதரிக்கும்
என் குடும்ப உறவுகள் வருகவே,
உள்ளத்தை குளிர வைக்க வருகவே!

தோழர்களே தோழிகளே,
அண்ணன்களே தம்பிகளே,
உறவுக்கார உள்ளங்களே
வருக வருக வருகவே.

எங்கள் வீட்டு விழாவை
சிறப்பிக்க வருகவே,
நல் வாழ்த்து மழையை பொழிந்திட
வருக வருக வருகவே,
எங்கள் மனம் குளிர வாழ்த்திட
வருக வருக வருகவே!



இல்லறத்தின் அருமை

பல வருடங்கள் பட்டினி
கிடந்தவன் நான்,
சில வருடங்கள் மணவாழ்க்கையில்
விருமாண்டி ஆனேன்,
ஏனோ ஒரு சில நாட்களின்
தனிமை தான் படுத்துகிறது.
இல்லறத்தின் அருமை புரிகிறது,
அதனாலே வெறுமாண்டி ஆனேன்.

மனக் குமுறல்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

இனிய புத்தாண்டே வா!
2020 இறக்கும் போது
என் தீவினைகள் அழிகின்றன!
2021 பிறக்கும் போது என் நல்விணைகள்
பிறக்கின்றதாகவே நம்புகின்றேன்!

எனது ராசியோ என்னவோ
ஒவ்வொரு வருடமும் புதிய நட்புகள்
பிறக்கின்றன,
சில வருடங்களில் நட்பில் பிளவுகள் நடக்கின்றன,

அதனால் வெறுப்புகளை
உமிழ்ந்ததில்லை நான்,
அப்படி உமிழ்ந்தால் நாம் அன்னாந்து படுத்துக் கொண்டு
உமிழ்ந்தால் நம்மீதே எச்சில் படுமல்லவா,
அதனால் கட்டுப்படுத்தி கொள்கிறேன்,

ஆனால் என் மீது உண்மையான நட்பு பாசம்
கொண்டவர்களை
என் புரிதல் இன்மையால்
இழந்திருக்கிறேன்,
என்னை நேசித்தவர்கள்
என்னை மன்னிக்கவும்.

சில உறவுகள் நம்மை
புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்,
காரியம் ஆக
காலை பிடிக்கவும் அவர்கள்
மறுத்ததில்லை,
காரியம் ஆனதும் கழட்டி விடவும்
அவர்கள் தயங்கியதில்லை,
(புரிந்தவர்களுக்கு புரியும்)

தயவு செய்து உறவை கூறி, சமுகத்தை
கூறி ஆதாயம் தேட முயற்ச்சிக்காதீர்கள்.
அவ்வாறு நீங்கள் நடந்தால் தான்
மற்றவர்களாலும் நடக்க முடியும்.

ஒரு சிலருக்கு நான் ஆதரவாக
 நடப்பதாக (நான் தந்தை ஸ்தானத்தில் நினைக்கும்) சில விஷமிகள் பிரச்சாரம் செய்யலாம்.
எனக்கு விதிக்கப்பட்ட விதிகளின்படியே நான் செயல்படுகிறேன்.
2021 லும் அப்படியேத் தான் நடப்பேன்.
அதில் விதிகள் மாறினால்
நானும் மாறித்தானே ஆக வேண்டும்.

அன்பிற்கும், பாசத்திற்கும், உறவுக்கும்
பாலமாக இருக்க நினைத்ததன் பலன்
இன்று நான்
சிலரின் சூழ்ச்சி, தந்திரத்தால்
பலருக்கு வேண்டாதவனாகியிருக்கலாம்.
என்னை புறம் பேசி மகிழ்ந்திருக்கலாம், .
அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை,
நான் என்றும் பொதுவானவனே!

செய்தியாளரான பின்பு
பல நல்ல உள்ளங்களை சந்தித்துள்ளேன்.
சில பல நட்புகளை சம்பாதித்தேன்,

சில சிக்கல்கள், பல புகழ்ச்சிகள்,
பல இகழ்ச்சிகள்,
சில பல மாறுதல்கள்,
சிலரை சமாளிக்க வேண்டி
என் இயல்பு தன்மையை இழந்தும்
பலனில்லை,

சிலர் சமுக உணர்வுடன் செயல்படு என்றனர்,
நான் செயல்பட்டும் பலனில்லை,
ஆனால் அவ்வாறு கூறியவர்கள்
மாறி விடுகின்றனர்.

சிலர் நண்பர்களை கைவிடாதே என்றனர்,
அவர்களை தலையில் தூக்கி வைத்த பலன்,
அந்த நண்பர்களே இன்னும் சமுகத்தை
காட்டி நட்பை இகழ்வடைய செய்கின்றனர்!

ஒரு சிலரை உயிராக நினைத்து 
பழகியும் பலனில்லை,
காலாவதியாகிவிடுகின்றனர்.
அதனால் யாரிடமும் 
நெருங்கி பழக ஒரு பயம்!

கடந்த 2019 ம்ஆண்டு கவிஞராய்
உதயமானேன்,
2020 ம் ஆண்டில்
எழுத்தாளராய் ஆக ஆசை,
ஏனோ நிறைவேறவில்லை.

ஒரு சிலரை பிடித்து போய்
சேவை புரிந்தும் பயனில்லை,
ஒரு நபர், நான் தான் உன்னை வளர்த்து விடுகின்றேன் என்கின்றார்.
( #யூரியா, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, மர்லி மாவு போட்டு வளர்த்தவர் #அவர்தான்)
இன்று அவர் வளர்ந்த உயரம்
மங்கி வருகிறது, 
தலைக்கணம் தலையை காணாமல் செய்யும்
பதவி வந்தால் பணிவும் உடன் வர வேண்டும்.
இல்லையேல் காணாமல் போக வேண்டும்.

ஒரு சிலரை நான் உயர்த்த வேண்டும்
என நினைத்தால்,
அவர்கள் மற்றொரு நபரை
வளர்க்க முற்படுகின்றனர்.


விவரம் தெரிந்த 30 வருடங்களில்
அனுபவங்கள் சில பல,
ஆனால் என்னுடன் பழுகும் நட்புகளை
மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை,,

ஒவ்வொரு நட்பும் ஒரு விதம்,
ஒரு நட்பு எனக்கு பிடித்தவருடன் மட்டுமே
பேச வேண்டும் என்கிறது,
மற்றொரு நட்பு எனக்கு பிடிக்காதவர்களுடன் பேசினால்
எனக்கு எதிராய் சதி செய்கிறது.

எனக்கு எதிராய்,
என்னை காலி செய்யும் நோக்குடன்
அவதூறு கடிதம் எழுதியவர்களோ,
இன்று நெருங்கி தான் பழகுகின்றனர்.
என்ன செய்ய,
நட்பை மதிக்க வேண்டி 
நடந்ததை மறந்து பழக வேண்டிய நிலை.

அனைவருக்கும் நல்லவனாக இருக்க விரும்பினேன்,
நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாகவே
நடிப்பது!
இந்த வருடம் முதல்
எண் இயல்பு என்னவோ அதன்படி
நடிக்க போகிறேன்!

#வாழ்க்கையே_ஒரு_நாடக -மேடை_அதில்_நான்_ஒரு_கலைஞன்.

யாரோ கூறியது!

(பின் குறிப்பு : இது கவிதை இல்லீங்கோ, எனது மனக் குமுறல், உடனே வரிந்து கட்டிக்கிட்டு இது உரைநடையாக உள்ளது என மட்டும் பதிவை போட்ராதீங்க, ஏன்னா ஒரு பிரபல எழுத்தாளர் என்னையே பாலோ பன்றார்.)








2021 ன்றே வா

இனிய 2021 ன்றே வா, வா
உன்னை வரவேற்க நான் இருக்கின்றேன்,
என்னை வரவேற்க என்
இல்லதாங்காள் எங்கே, எங்கே

என் இல்லத்தில் என்னை
வரவேற்பாள் என காத்திருக்கின்றேன்,
நீயும் ஒன்று ஒன்றாக கூடி
என் வயதை கூட்டுகின்றாய்,

ஆனால் என் இல்லத்தில்
விளக்கேற்ற அவளை ஒவ்வொரு முறை கூப்பிட்டும், அவள் வராமல்
முதிர்கன்னியாகிவிடுவேனோ,

இரண்டாயிரத்தி பதின்மங்கள்
 (2011 - 2019) என்னை
ஏமாற்றியிருக்கலாம்,
2021 றே, நீ என்னை ஏமாற்ற வேண்டாம்.

உன்னை நான் எப்படி வரவேற்றேனோ,
அப்படியே நீ மறைவதற்குள்
என்னை வரவேற்க என் கவிக்கு
அருள் புரிய வேண்டும்.

நீ 366 நாட்களில் மறையலாம்,
மீண்டும் புதிதாக பிறக்கலாம்,
வாழலாம், சாதனைகள் புரியலாம்,
வரலாறு படைக்கலாம்,

ஆனால் எனக்காக பிறந்தவள் அவள்
நீ பிறந்த இந்த வருடத்தில்
நான் சேரனும் அவளுடன்,
என் வாழ்வில் நானும் வரலாறு படைக்கனும்,

எங்களை சேர வைக்காமல் 
நீ வாழவும் வேண்டாம்,
மீண்டும் பிறக்கவும் வேண்டாம்
என என்னை சபிக்க வைத்து விடாதே!

உன் அக்காளுக்கு (2020) விடை கொடுத்தேன்,
உன்னை (2021) வரவேற்கின்றேன்,
அருள் புரிவாய் என நம்புகின்றேன்!

காட்டுப் பரூர் ஆதிகேசவ பெருமாள் வரலாறு

இன்றைய கதை


காட்டுப்பரூர் ஆதிகேசவப் பெருமாள்


அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும்.


பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. ‘என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன்’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி.


‘கடவுளே... இனி நீ விட்ட வழி’ என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. ‘கடவுளே... கடவுளே’ என முனகியபடி கிடந்தார். வேதனையால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அப்போது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பயணி இவரது வேதனையை பார்த்து மனம் வருந்தினார். எழுப்பி விவரம் கேட்டார்.


கதறியழுதபடி தனது வேதனையை சொன்னார் முதியவர். கண்மூடி யோசித்த அவர், ‘‘இது பிறவிப் பிணி. இதை அந்த கேசவனால்தான் தீர்க்க முடியும். காட்டுப்பரூர் செல். அங்கு ஒரு வாரகாலம் தங்கி, பெருமாளை வழிபடு. நிச்சயம் உன் பிணி தீரும்’’ என்றார். கடவுளே நேரில் வந்து சொன்னதாகக் கருதி, தனது கிராமத்திலிருந்து காட்டுப்பரூர் புறப்பட்டார், முதியவர். அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனது துணிமணிகளை வைத்து விட்டு, நாள்தோறும் திருக்கோயில் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டார். ஏழு நாட்கள் கழிந்தன. வயிற்று வலி குறையவில்லை; அதிகரித்தது.


 எட்டாவது நாள். பொழுது விடிந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு காணாது ஓயப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு எழுந்தார் முதியவர். வழக்கம் போல குளத்தில் நீராடினார். ராஜகோபுரம் எதிரே நின்றார். கண்மூடி ஆதிகேசவனை மனத்தில் கண்டார். அவனிடம் உரிமையோடு பேசத் தொடங்கினார். ‘‘ஐயனே... வயிற்று வலியோடு நான் படும்பாடு சொல்லிமாளாது. என் நோய் தீர்ப்பாய் என்ற நம்பிக்கையோடு உன் திருக்கோயிலை ஒரு வாரகாலமாய் வலம் வந்தேன். பலனில்லை. என் பக்தியில் நீ ஏதோ குறை காண்கிறாய். சரி, இதோ என் காணிக்கையை ஏற்றுக்கொள்’’ என்று மனம் குமைந்து சொன்னார்.


பிறகு தனது நாக்கை அறுத்து எடுத்து ஒரு வெற்றிலையின் மீது வைத்துவிட்டு, வாயில் ரத்தம் வழிய கோயிலை வலம் வரத் தொடங்கினார். கருணைக் கடலான கேசவன் கண் திறந்து பார்த்தான். தனது அருட் பார்வையால் முதியவரின் பிணியை அகற்றினான். கோயிலை வலம் வந்து முடித்த போது வெற்றிலையில் வைத்திருந்த நாக்கு காணாமல் போயிருந்தது. முதியவரின் வெட்டுப்பட்ட நாக்கும் முழுமையாக வளர்ந்திருந்தது. உயிரே போகும்படி வலித்த வயிற்று வலியும் முற்றிலுமாக நீங்கியிருந்தது. ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று வாய்விட்டு கதறினார். ஆனந்தத்தில் வாய் குழறியது.


இச்சம்பவத்தை வாய் பிளந்து, வியப்போடு பார்த்த ஊரும் அவரோடு சேர்ந்து கோவிந்தனின் புகழ் பாடியது.இந்த சம்பவம் நடந்து சுமார் 300

ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இதற்கு  சாட்சியாக இந்த முதியவர் நன்றியோடு இந்தக் கோயிலுக்குச் செய்து தந்த காளிங்க  நர்த்தன கோபாலன் உற்சவர் சிலை இன்றும் இருக்கிறது. வீர பெருமா நல்லூர் பெரியவர் செய்த சிலை இது என்று, இந்த சம்பவத்தோடு மேலும் பல தகவல்களை அந்தக் கோயிலில் சொல்லக் கேட்கலாம்.


இந்தக் கோயில் உருவான வரலாறு சுவையானது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி காடாக இருந்தது. இங்கு ரெட்டியார் சமூகத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் கோனார்கள் வயல் வேலை செய்தபடி ஆவினங்களை பராமரித்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை விவசாயப் பணியாக வாய்க்கால் வெட்டியபோது,  மண்வெட்டி பட்டு வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அங்கிருந்தோர் எல்லாம் அஞ்சி நிற்க, வாய்க்கால் வெட்டியவர் மீது அருள் வந்து, இவ்விடத்தில் சென்ன கேசவப் பெருமாள் என்னும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாகவும், அவருக்கு கோயில் கட்டி வழிபடுமாறும்

 கூறினார். அதன்படி அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது வெட்டுப்பட்ட கல் ஒன்று கிடைத்தது. அதையே மூலவராகக் கொண்டு கோயில் கட்டப்பட்டது. மூலவர் முடியில் வெட்டுப்பட்ட காய வடுவை இன்றும் தரிசிக்கலாம்.


அதன் பிறகு கால ஓட்டத்தில் பல பெரியவர்கள், மகான்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கி வழிபட்டுள்ளார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேமண்ணா என்னும் யோகியும் கூட இந்தக் கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடி, குளத்தின் தென் திசையில் பெருமாளின் திருப்பாதம் அமைத்து, யந்திர ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். தினசரி இந்த பாதத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டுத்தான் பெருமாளுக்கு இதர பூஜைகள் நடைபெறும். 


இக்கோயில் பற்றி பதிகம் பாடியுள்ள வேமண்ணா ‘ஆதித்த வாரம் பத்து பசுந்துளபம் நெய்யுண்டால் பறக்கும் பல நோய்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் பலர் தங்களது நோய்கள் தீர இங்கு நெய் துளசி பெற்று பக்தியோடு உண்டு குணமடைகிறார்களாம். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடு

கிறார்கள். வாருங்கள், கோயிலை வலம் வருவோம்.


கோயிலுக்கு வடபுறம் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில்தான் ஆண்டு தோறும் வைகாசிப் பெருவிழாவின் 10 நாள் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். குளத்திற்கு மேற்கு புறத்தில் இருந்த வசந்த மண்டபம் சிதைந்து கிடப்பதையும் காண முடிகிறது. நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடி உப்பு, வெல்லம், மிளகு, காசு ஆகியவை செலுத்துகிறார்கள். உப்பு, வெல்லம் கரைவதைப் போல நோயும் கரையும் என்பது நம்பிக்கை. சொறி, சிரங்கு, மரு போன்ற சரும நோய் தீர வேண்டிக்கொண்டு மிளகு, காசு போடுகிறார்கள்.


இந்தத் திருக்குளத்தில் நீராடிய பிறகு யோகி வேமண்ணா பிரதிஷ்டை செய்த பெருமாள் பாதத்தை தரிசிக்கலாம். அடுத்து, பிரமாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் த்வஜ ஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து கருடாழ்வார் தரிசனம். அவர் சுவாமியைப் பார்த்தபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதற்கடுத்து கருங்கற்களால் கட்டப்பட்ட 36 கால் சபா மண்டபம். மண்டபத்தின் கல் தூண்களில் தசாவதாரக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வலப்புறத்தில் அனுமன், கருடன், சக்கரம், அன்னம், குதிரை, ஆதிசேஷன், யானை, பல்லக்கு முதலிய வாகனங்களின் அணிவகுப்பைக் காணலாம்.


அடுத்து விநாயகரையும், ஜயன்-விஜயன் என்ற துவாரக பாலகர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் அழகு வரிசை.  தேவி-தேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், ராதா-ருக்மணி சமேத வேணுகோபாலன், வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற்ற முதியவர் தமது கிராமத்தவரின் உதவியோடு செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன், சக்கரத்தாழ்வார், அனுமன், திருமங்கையாழ்வார் ஆகிய உற்சவ விக்ரகங்களை கண்டு வணங்கலாம்.


அடுத்து அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கர்ப்ப கிரகம். சுயம்புவாய் தோன்றிய ஆதிகேசவப் பெருமாளை நெய்தீப ஒளியில் காண, மெய் சிலிர்க்கிறது. கிழக்கு பார்த்த வண்ணம் இக்கோயிலில் அமைந்து, பிறவி நோய் தீர்க்கும் பெருமாள் உடல் பிணியும் நீக்கி அருள்வதை எண்ணி கரம் குவித்துப் பணிய, உடலும் உள்ளமும் பலமடைகின்றன.


இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள். நாராயணின் நாமத்தை கணீர் குரலில் பாடி, தீபம் காட்டி, தீர்த்தமும், துளசியும் தந்து சடாரியை தலையில் வைக்கும் போது மனம் குளிர்கிறது. ஒரு பேரமைதி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.அடுத்து தெற்கு பக்க வாசல் வழியே வந்து, வேதவல்லி நாச்சியாரை தரிசிக்கலாம். தாயார் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் அழகிய திருமுகம் காண உள்ளம் உருகும். திருமண வரம் வேண்டி அன்னையைத் தொழுதால், வேண்டியவரின் இல்லத்தில் கெட்டிமேளம் விரைவில் ஒலிக்கிறதாம்.


பிராகாரத்தில், மடப்பள்ளி இருக்கிறது. இடும்பன், அனுமன் கோயில்கள் தனித் தனியே உள்ளன. கோயிலின் நான்கு புறமும் வாசல் உண்டு. வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே அழகிய, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர் நிற்கிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதம், வளர்பிறை சனிக்கிழமை கொடியேற்றி, ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவம்.


அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளி மெல்ல அசைந்தபடி வீதி வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

கோயிலுக்கு வெளியே வடக்கு புறத்தில் முடி காணிக்கை செய்ய தனி மண்டபம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அங்கு போக முடியாவிட்டால் இங்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வணங்குகிறார்கள். பெரும்பாலும் பெருமாள் கோயிலில் சனிக் கிழமைதான் விசேஷம். ஆனால், இத்திருக் கோயில் பெருமாள் ஞாயிற்றுக் கிழமையன்று சுயம்புவாகத் தோன்றியதால் இங்கு ஞாயிறு அன்றுதான் விசேஷம். அன்று காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.


 உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில், மங்கலம் பேட்டையிலிருந்து மேற்கே 4வது கிலோ மீட்டரில் உள்ள சிறிய கிராமமான காட்டுப்பரூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தீராத நோய்கள் தீர, பிணி தீர்க்கும் ஆதிகேசவப் பெருமாளையும், திருமண வரம் அருளும் வேதவல்லி நாச்சியாரையும் வணங்கி ஆரோக்கியமான, வளமான வாழ்வைப் பெறுவோம்.