விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவன்னியன். வயது 40. விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு நரசிம்மன், வயது 14 என்ற மகன் உள்ளான். இவர் பெரியவடவாடி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் படுசுட்டியாக விளங்கும் இந்த மாணவன் தற்போது மினி நவீன ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். தனக்கு கிடைத்த எளிய பொருட்களான தர்மாகோல், ஐஸ் குச்சி, பேட்டரிகள், வயர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு மினி ஏடிஎம் இயந்திரம் வடிவமைத்துள்ளார். ஒரு சின்ன மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருப்பது போலவே Oவி இருந்து 9வரை எண்கள் உள்ளன. பணத்தை உள்ளே வைத்துவிட்டு ரகசிய எண் குறியீடு பதிவு செய்தால் அந்த இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பணம் வெளியே வந்துவிடுகிறது. மேலும் இதே போல ஏடிஎம் எந்திரத்தில் கூட இல்லாத வசதியான சில்லரை காசுகள் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரகசிய எண்ணை குறியீடு செய்து தொகையை பதிவு செய்தவுடன் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களும் வெளியே வந்துவிடுகிறது. இந்த மாணவன் தான் கண்டுபிடித்த இந்த டெமோ இயந்திரத்தை தன்னுடைய பள்ளியில் கொண்டு சென்று இயக்கி காட்டியுள்ளான். அப்போது இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த அவரது ஆசிரியர்களும், சக மாணவர்களும் ராஜசிம்மனை பாராட்டினர். மேலும் இது குறித்து அறிந்த அவருடைய சொந்த ஊர் மக்களும் இந்த இயந்திரத்தையும், அவர் இயந்திரத்தை செயல்படுத்தும் விதத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அவரது தந்தை ராஜவன்னியன் கூறும்போது என்னுடைய மகன் ராஜசிம்மன் சிறுவயதிலிருந்து விளையாடுவதிலும் ஆர்வமாக இருப்பான். மேலும் விளையாட்டு பொருட்கள் நிறைய வாங்கி அதிலுள்ள பொருட்களை பிரித்து விட்டு மீண்டும் பொருத்தி அதனை இயக்குவான். அடிக்கடி ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும் என கூறி வந்தான். அதுபோலவே இந்த இயந்திரத்தையும் அவன் கண்டுபிடித்துள்ளான். அவனது ஆர்வத்தை அறிந்து கொண்ட என் மனைவி பழனியம்மாள் இந்த ஏடிஎம் எந்திரம் உருவாக என் மகனை ஊக்குவித்துள்ளார் எனக் கூறினார். இந்த கண்டுபிடிப்பு குறித்து மாணவன் ராஜசிம்மன் கூறும்போது தற்போது மினி ஏடிஎம் இயந்திரம் பரிசோதனை முயற்சிக்காக இயக்கி காட்டியுள்ளேன். இந்த இயந்திரத்தில் சில்லரை காசுகள் வரும் வசதி உள்ளது. தற்போது உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இந்த வசதி கிடையாத. இந்த இயந்திரத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். மேலும் நிலநடுக்கம் புயல் சூறாவளி மழை வெள்ளம் போன்ற ஆபத்து காலத்தில் உதவும் ரோபோவை அடுத்ததாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஏரோநாட்டிக்கல் படிப்பு படிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும். எனக் கூறினான். இது போன்ற மாணவர்களை தமிழகஅரசு கண்டறிந்து அவர்களுக்கென்று சிறப்பான பயிற்சி அளித்து அவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும், என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment