கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரனூர் கிராமத்தை சேர்ந்த ராசவன்னியன் மகன்கள் ராஜசிம்மன், நீதிராஜன். பன்னிரண்டாம், ஆறாம் வகுப்பு படிக்கும் இம்மாணவனர்கள் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் அறிவிக்கப்பட்ட, ஊரடங்கால், ஆன்லைன் மூலம் நடக்கும் வகுப்பு முடிந்த பின்பு, மீதமுள்ள நேரத்தை வீணாக செலவழிக்காமல், மரம், பிளாஸ்டிக் பொருட்கள், மினி மோட்டார் கொண்டு 360 டிகிரி சூழலும் திறன் கொண்ட மினி டிராக்டரை தயாரித்துள்ளார். கடைகளில் விற்கப்படும், ரிமோட் மூலம் இயங்கும் விளையாட்டு பொம்மைகள் முன்னும் பின்னும் நகரும் தன்மை கொண்டதாக மட்டும் உள்ளதாகவும், தற்போது குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட மினி டிராக்டர், ப்ளூடூத் வழியாக செல்போன் மூலம் இயங்கக் கூடிய தன்மை கொண்டதாக கிராமத்து மாணவன் தெரிவிக்கிறார். இம்மினி டிராக்டரில் செல்போன், லேப்டாப் பேட்டரிகள், ஒவ்வொரு சக்கரத்திற்கும் சிறியரக மோட்டார்கள், LED விளக்குகள், மரம் மற்றும் நாற்றங்காலுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக மாணவன் தெரிவிக்கிறார். மேலும் மினி டிராக்டர் 360 டிகிரி சுற்றுவதற்கும், 30 மீட்டர் தூரம் வரை செல்வதற்கும், கட்டளைகள் இடுவதற்கும், Codeing மூலம் மினி டிராக்டரில் program பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் மினி டிராக்டர் தயாரித்த பின்பு, அதன் மூலம் பயன்பெறும் வகையில், வீடுகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கும், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கும், தரைகளில் துடைப்பதற்கும், மரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலால் கொண்டு தனித்தனியாக பல்வேறு இயந்திரங்களையும் கண்டுபிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில் பலூன் மற்றும் மரத்தை கொண்டு வயல்வெளியில் உள்ள, களைகளை அகற்றுவதற்காக மருந்து தெளிக்கும் தெளிப்பான் இயந்திரத்தையும் தயாரித்துள்ளார். இதனால் ஆட்கள் செலவு, நேரக் குறைவு, உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாணவன் தெரிவிக்கிறார். தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் ஆன்லைன், ஆஃப்லைன் மூலம் பப்ஜி, ஃப்ரீ பையர் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு நேரத்தை, வீணாக கழித்து வரும் சூழ்நிலையில், கிராமத்து பகுதியை சேர்ந்த மாணவன் ராஜசிம்மன், ஆன்லைன் வகுப்பை தவிர்த்து மீதமுள்ள நேரத்தை, வீணாக செலவழிக்காமல், தன்னால் முடிந்தவரை மினி டிராக்டர் தயாரித்து, அதன்மூலம் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வரும் இம்மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து, வெகுவாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
No comments:
Post a Comment