Friday, 5 October 2018

குடமெடுத்து நடக்கையில (கிராமியம்)

குடமெடுத்து நீ நடக்க குலுங்குதடி என் மனசு

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குடமெடுத்து நீ நடக்க குலுங்குதடி என் மனசு,
பருவ மேடுகளோ, என் உயிரை வாட்டுதடி,
கெண்டை காலுரெண்டும், கண் சிமிட்டி அழைக்குதடி,
வாழைத்தொடைகள் சிணுங்கையில, பைத்தியமாக்குதடி,
கொடியிடைகள் ஆடும் போது, மனமும் இங்கே தவிக்குதடி,
சேலை மடிப்பு விலகையில, தொப்புள் அழகு தூக்குதடி,
கண்டாங்கி சேலையில, கத்தரிப்பூவாக கண்ண பறிக்குதடி,
கழுத்தோரம் படரும் முடி கூட, மலர் போல தூவுதடி,
காதோரம் தொங்கும் பொன்னகையும்,
உன் புண்ணைகையிடம் தோற்க்குதடி,
கிளி போல உன் பேச்சு, என்னை மயக்கித்தான் போட்டதடி,
பசியாலே துடித் துடிச்சேன்,
உன் கல கலப்பு சிரிப்புத்தானே, என் நெஞ்சிலே நிறைஞ்சுதடி,
பசி கூட மறுத்ததடி,
மது கூட வேண்டாமடி, மாதுவே உன் போதை மட்டும் போதுமடி,
ஆத்தாடி நீ ஆற்றங்கரையோரம் வந்திடடி, அள்ளி அணைத்திட
அத்தான் நான் காத்திருக்கேன்,
கொஞ்சி நீ விளையாண்டிட விரைந்தும் அங்கே வந்திடடி.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அன்புடன் வீரா,

No comments:

Post a Comment