Friday, 5 October 2018

வயலோர வசந்தம் (கிராமியம்)

வயலோர வசந்தம்
- - - - -----------------------
வந்தாரங்குடியான் வாழ்ந்த ஊரு
ஊருக்குள்ள நானும் பாரு,
ஊரு முழுக்க குயிலு கூவும்,
உன்னை  சுற்றி மணமும் வீசும்.
அம்மிக்கல்லு உருளும் போது
அம்மணி அழகை பார்த்தால் போதும்,
மாமன் மனசும் தவிச்சு போகும்!
கலப்பையெடுத்து செல்லையில
மச்சினி நீயும் முன்னே போக
மாமன் நானும் தவிக்கிறேண்டி,
நீ நடவு நட போகையில,
வயலோர வசந்தமாக
படுக்கை விருச்சி காத்திருக்கேன்,
நீ களையறிக்க போகையில
மாமன் கலையிழந்து போறேனடி,
புல்வெளியில படுத்திருக்கேன்,
மச்சான் மனச பச்சையாக்க,
வருவாய் என தவமிருக்கேன்!

- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா

No comments:

Post a Comment