Friday, 5 October 2018

நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்

நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உயிரற்ற உடலானேன், உயிரானாய்,
உறவுகள் கைவிட்டது, உறவானாய்,
அனாதை என்றெண்ணினேன், அம்மாவாய் மாறினாய்,
உரைத்ததை கூறும் போது தோழியானாய்,
உள்ளதை கூறினேன், உண்மையானாய்,
உடல் நோயால் இளைத்தேன், ஆறுதலானாய்,
உயிரே என நினைத்தேன், காதலானாய்,
உள்ளமே என்றேன், மனைவியானாய்,
பாகுபாடு பார்த்தேன், பாசத்தை மட்டுமே காட்டினாய்,
படப்படத்தேன், பக்குவப்படுத்தினாய்,
உணர்ச்சி வசப்பட்டேன், உணர்வானாய்,
பாசத்தை கொட்டினேன், குழந்தையானாய்,
அன்பை கொடுத்தேன், உயிர் வரங்களைக் கொடுத்தாய்,
இதயத்தை பகிர்ந்தேன், நிரந்தரமாய் குடியேறினாய்,
ரத்தம் சிந்தினேன், கண்ணீர் வடித்தாய்,
உதிரம் கொடுத்தேன், தாயானாய்,
என்றும் நிலையாய், என்னுள் நீ நிலைத்திருக்க
என் நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அன்புடன் வீரா

No comments:

Post a Comment