Sunday, 7 October 2018

இனிக்கும் நினைவுகள்

இனிக்கும் நினைவுகள்,
------------------------------------------------
இன்ப துன்பங்களை கடந்தோம்,
அசைப்போட்டுப் பார்க்கிறோம்,
வந்த வழியை திருப்பிப்பார்க்கையில்
எத்தனை எத்தனை சுகம்

மழலையில் தத்தி தவழ்ந்து வர
தாய் உச்சி முகரும் வேலையில்,
ஒன்றும் அறியாத பருவத்தில்

நம்முடனே அமர்ந்து, பழகி, இன்றுவரை தொடரும்
மிகப்பெரிய பந்தம் நண்பனின் நட்பு,
ஆங்கிலப்பாடத்தில் சந்தேகம் கேட்க தோழியை தேடிய காலங்கள்,
கணக்கு ஆசிரியரை கண்டு ஒளிந்த நேரங்கள்
கண் முன் வந்து செல்ல,

தங்கையிடம் சண்டைபோட்டு, அம்மாவிடம் அடம் பிடித்து,
அப்பாவிடம் பயந்து, தாத்தா பாட்டியிடம் செல்லம் கொஞ்சி,
அத்தையின் அதட்டலில், சித்தியின் மடியில் தஞ்சமடைந்து,
அண்ணனின் கைப்பிடித்து கனவு கண்ட இளமை பருவங்கள்,
இனிக்கும் நினைவுகளாகி போனது,
கடந்த காலங்கள் தான் திரும்பி வருமோ?

****அன்புடன் வீரா*****
*****************************************************

No comments:

Post a Comment