Wednesday, 9 May 2018

உறவாய் வா உறவே

உறவாய் வா உறவே
- - - - - - - - - - - - - - - - - - - -
உறவாய் வா உறவே
உயிராய் உனை காப்பேன்
உண்மையாய் உனை நேசிப்பேன்
உறவில் கலந்த உயிராய் சுவாசிப்பேன்

நெஞ்சில் கூடுகட்டி
தாயாய் தாலாட்டுவேன்
ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி
தோழனாய் சோறூட்டுவேன்

இதயத்தில் உன் மனதை சிறை வைத்து
விரைவில் மணம் முடிப்பேன்
உன் மூன்று முடிச்சியில்
என் உயிரை குடிவைக்க,
உள்ளத்தில் குடியேற உறவாய் வா ,
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருதை வீரா




No comments:

Post a Comment