விடியலுண்டு விழித்திடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இரவு முடிந்தால் பகலும் பிறக்கும்
சூரியன் உதித்தால் சந்திரன் மறையும்
கடலும் இருந்தால் கரையும் இருக்கும்
மலையும் இருந்தால் மழையும் சுரக்கும்
உரிமைகள் பறிக்கப்பட்டால்
உணர்வுகளை அடக்கி விடு
பறித்து விட ஒருவன் உண்டென்றால்
கொடுப்பவன் ஒருவன் இருந்திடுவான்
விதிகள் மீறப்பட்டால்
விடியல் அருகில் உண்டு
வீணாய் விவாதம் வேண்டாம்
விடியும் போது வெற்றிப் பிறக்கும்
சட்டங்கள் பொய்யாகலாம்
எதிரிகள் தப்பித்து விடலாம்
உறவுகள் கைவிடலாம்
விடியலுண்டு விழித்திடு
கைவிடு உறக்கத்தை
ஆழ்ந்து சிந்தித்திடு
கனவுகளை கலைக்காதே
வெற்றிகள் கூடி வரும்
கைவிட்ட உறவுகளும் தேடி வரும்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
அன்புடன்
விருதை வீரா
No comments:
Post a Comment