கொலை தொடர்புக்கு அப்பால்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பெண் ஒரு மோகப் பொருளா//
கண்களுக்கு காட்சிப் பொருளா//
ஆண் வர்க்கத்தின் காமப் பொருளா//
என்னப் பாவம் செய்தாள்//
எத்தனை கண்களுக்குத்தான் //
அவள் விருந்தாவாள், //
காணும் போது ரத்தம் கொதிக்கிறது, //
அவள் நாணும் போது நெஞ்சம் வெடிக்கிறது //
பெண் பச்சைக் குழந்தையாகினும் //
காமப்பசிக்கு இரையாகிறது //
அந்த இறை கண்டும் காணாமலும்//
சிலையாக நிற்கிறது//
ஆடை எப்பொழுது ஒதுங்கும் //
என அற்ப சுகம் தேடும் மானிடா //
உன் தாயிடம் கேள்//
பெண்மையின் வலிகள் தெரியும் //
உன் மனைவியிடம் கேள்//
பெண்ணின் பெருமைகள் புரியும் //
புரிந்தும் திருந்தாத மானிட விலங்கே //
உன்னை கருணை கொலை செய்ய வேண்டுகிறேன்//
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருதை வீரா
Wednesday, 9 May 2018
மோக கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment