Wednesday, 9 May 2018

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு
___________________
ரௌத்திரம் பழகு
காம வெறியர்களை ஓட விடு
நாட்டின் மாணிக்கம் என்பதை மறவாதே
என்றும் பெண்ணென்று மண்டியிடாதே
அரிவாளை சுழற்று
அறிவால் அடக்கு
காமுகர்களை களையெடு
பெண்ணின் பெருமையை உணர்ந்திடு
மற்றவர்க்கும் உணர்த்திடு
குடும்பத்தின் விளக்காய் மாறிடு
புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்த்திடு
கணவன் முன் மாதவியாய்
சேவைகள் செய்திடு
களங்கமே வந்தாலும்
கண்ணகியாய் வாழ்ந்திடு
- - - - - - - - - - - - -
அன்புடன்
விருதை வீரா

No comments:

Post a Comment