Wednesday, 2 January 2019

மதிப்பிற்குரிய பெண்மை

மதிப்பிற்குரிய பெண்மை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தேவியாக தஞ்சமடைந்தவள்,
துணைவியாக ஆணுடன் இணைந்தவள்,
தாயாக கருவை சுமந்தவள்,
தியாகத்தையே கொள்கை என கொண்டவள்.

பெண் அவள் காட்சிபொருளா?
காமத்திற்காக படைக்கப்பட்டவளா?
ஆணுக்கு சேவை புரியும் இயந்திரமா?
இல்லை, இல்லை
அவள் ஒரு இறைவி.

அன்பை காட்டும் போதும்,
பாசத்தை ஊட்டும் போதும்,
உச்சி முகரும் போதும்,
அரவணைக்கும் போதும்,
ஆனந்தத்தை அளிக்கும் போதும்,
வெற்றியின் ஊன்றுகோல் ஆகிவிடுகிறாள்,

சிவனுக்கு ஒரு சக்தி போல
ஆணுக்கு அவள் பெண்ணாகிறாள்,
அவள் தியாகமே உலகத்தின் இயக்கம்.
நாம் தரும் மரியாதையே
பெண்மைக்கான உரிய பரிசு,

காலச்சக்கரம் சுழலும் போதும்,
ஆண்வர்க்கம் அதிகாரம் கொண்ட போதும்,
அமைதியாய் குடும்ப அதிகாரம் நடத்தினாள்,
இன்று நாட்டை ஆளும் அதிகாரத்தையும் பெற்றுவிட்டாள்,

பெண் அவள் அடிமைத்தனத்தை தகர்த்தெறிவோம்,
மதிப்பிற்குரிய பெண்மையே போற்றுவோம்!
=====
அன்புடன் வீரா

No comments:

Post a Comment