Wednesday, 2 January 2019

விவசாயி நம் உயிர் நாடி

விவசாயி நம் உயிர் நாடி
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
மண்ணைப் பிளந்து,
வேரூன்றி
சூரிய ஒளியை நாடி,
தண்டு முன்னேறி
தண்ணீரின்றி வாடி,
நோய் தாக்கி,
பூச்சி தாக்கி,
பல போராட்டங்களை நடத்தி,
இறுதியில் பூப்பெய்து
தன் சந்ததியை
பூமியில் விதைக்கும்,
விந்தையை செய்யும் தாவரத்தை படைப்பவன் எவனோ ?
அவனே விவசாயி!

கணிப்பொறியால் சாதனை கள் பல படைக்கலாம்,
விதையை படைக்க முடியாது.
விஞ்ஞானத்தால் வித்தைகள் பல செய்யலாம்,
சோறு போட முடியாது.
முகநூலால் முகங்களை மட்டுமே அளவிடலாம்,
முகம் மலர
உணவு படைத்திட முடியாது,
முடியாது என்பதை
முடியும் என்பவனே விவசாயி!

கடவுளால் உயிர்களைப் படைக்க முடியும்,
அந்த உயிருக்கும்
உணவு படைக்கும்
நம் உயிர் நாடி விவசாயி,
இவ்வுலகம் எதை இழந்தாலும்
விவசாயி இருக்கும் வரை
தப்பிப்பிழைக்கும்,
விவசாயத்தை காப்போம்
விவசாயியை போற்றுவோம்!
----- ..... ---------
அன்புடன் வீரா

No comments:

Post a Comment