Thursday, 21 May 2020

கடன் வசூலாகும் மந்திரம்

எடுத்துக்காட்டாக அந்த நபரின் பெயர் ‘ராஜா’ என்றால்,
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
‘ராஜா’ ஆகர்ஷய ஆகர்ஷய!

காலையில் சூரியன் உதயமாகும் போது 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்து விட்டு, சூரிய நமஸ்காரம் செய்த பின்பு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அதற்கு முன்பு ஒரு கைப்பிடி அளவு உப்பைக் உங்கள் உள்ளங்கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய பகவானை மனதார நினைத்து கொண்டு, உப்பை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பி சாமி கும்பிடுவது போல், வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது அஞ்சலி முத்திரை. இதே முத்திரையோடு, கையில் உப்புடம் பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான மந்திரம் இதோ!

108 முறை இந்த மந்திரத்தை குறிப்பிட்ட அந்த நபரின் பெயரோடு உச்சரித்து, உங்களுடைய பூஜையின் இறுதியில் கடன் தொகை முழுவதும் கூடியவிரைவில் வசூலாக வேண்டும் என்று சூரிய பகவானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக உங்களை ஏமாற்றிய அந்த நபரே மனம் மாரி, கடன் தொகையை கொஞ்சம் கொஞ்சமாகவாவது உங்களுக்கு திருப்பி தந்து விடுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
உங்கள் வீட்டில் இடவசதி இருந்தால் சூரிய பகவானை பார்த்துக்கொண்டே மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இடவசதி இல்லாதவர்கள் ஒரு முறை சூரிய பகவானைப் பார்த்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, அதன் பின்பு பூஜை அறைக்கு வந்து 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது தவறு ஒன்றுமில்லை. மந்திரத்தை உச்சரித்து முடித்து விட்டு, இறுதியாக உங்கள் கையில் இருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள். இது மிகவும் முக்கியமான குறிப்பு. கண்டிப்பாக கையில் உப்பை வைத்து கொண்டு இந்த மந்திரத்தைச் சொன்னால் மட்டுமே பலன். அந்த உப்பை இறுதியாக தண்ணீரில் மட்டுமே கறைக்க வேண்டும்.

நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன். பலவருடங்களாக வராத கடனுக்கு 108 நாள் பரிகாரம் செய்து, கடனை திரும்ப பெற முடியுமென்றால் இந்த மந்திரத்தை உச்சரிப்பது எந்த ஒரு தவறும் இல்லையே! நம்பிக்கை உள்ளவர்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment