கொரோனாவே உமக்கு எம் மக்க எமன் என்பதை மறவாதே
கொரோனா நீ கொன்னுட வந்தீன்னா,
ஆரத்தி எடுத்து வரவேற்க்குது எம் மக்க,
கட்டுப்பாடு கவனிப்பாரன்றி கிடக்குது,
144 ஏதோ ஒரு எண்ணுன்னு
நெனைக்குது,
அதனால நீ வீரச்சின்னு நெனைக்கலாம்.
கொத்து கொத்தா உயிர் போறது தெரியாம,
வெறிச்சோடும் சாலையில,
வெறிக்க வெறிக்க சுத்துது எம் மக்க,
படுபாவியா வந்து நீ
எங்க பாவத்த எடுக்குற,
அதனால நீ எமகாதகன்னு நினைக்கலாம்,
வூட்டுல அடங்கி கெடன்னு சொன்னா,
எம் மக்க ஏத்தம் எறக்கமா பாக்குது,
டீவி பெட்டியில நாடகத்துல மயங்குது,
விளம்பரம் போடுற நேரத்துல
சேதி சேனல்ல மாத்துனா தானே
கொரோனாவே உன் வீரியம் தெரியும்,
அதனால நீ மாயாவின்னு நெனைக்கலாம்.
பாவம் என் மக்க,
அடுத்த சேனல்ல நாடகத்த பாக்குது,
கை கழுவ சொன்னா,
முறைச்சி முறைச்சி பாக்குது,
வந்தது சுனாமின்னு தெரியாம,
உன் பக்கத்துலயே சுத்துது,
அதனால நீ
ஆகாய சூரன்னு நெனைக்கலாம்.
நான் பொறந்தும் பாக்கல ஊரடங்கு உத்தரவ,
நீ பாக்க வச்சி,
நாடி நரம்ப நடுங்க வச்ச,
இப்ப உயிரெல்லாம் போக வெச்ச,
அதனால நீ மாய மந்திரமுன்னு நெனைக்கலாம்,
கட்டுப்பாடு தான் உன்ன துரத்துமுன்னு,
கவர்மன்டு கூப்பாடு போடுது,
அது தெரியாம எம் மக்க
கூட்டத்தோட சேருது,
அதனால நீ உன்ன ஹீரோன்னு நெனைக்கலாம்,
முட்டிப் போட வெச்சாலும்,
நாற்காலியாய் நின்னாலும்,
நா சவக்குழிக்குத் தான் போவேன்னு ,
போலிசுகிட்ட எம் மக்க தாறு மாறா பேசுது,
அதனால நீ பெரிய பிஸ்தான்னு நெனைக்கலாம்,
மெடிக்கலுக்கு போறேன்,
பால் வாங்க வந்தேன்,
சாக்கு போக்கு சொல்லி,
ஊர் சுத்தும் எம் மக்க,
அடங்காம, ஆறடி நெலத்துக்கு
ஆசையோட சுத்துது.
அதனால நீ அந்த கடவுளே நாந்தான்னு
நாதாரியாய் நெனைக்கலாம்.
உயிர கொடுத்து டாக்டருங்க
கொரொனாவே உன்ன விரட்ட
நெருப்பா சுத்துறாங்க,
குடும்பத்த காக்க வச்சி
போலீசு நாள் கணக்கா,
பிளாட்பாரத்த வீடாக்கி,
கட்டுப்படுத்த பாக்குறாங்க,
அதனால நீ உன்ன நாசுக்கா நினைக்கலாம்.
பத்திரிக்ககாரங்க,
ஊதியமின்றி கொரானாவே
உன்ன படம் பிடிச்சி காட்டுராங்க,
லைவ்வுன்னு பேட்டி கண்டு போடுறாங்க,
பக்கம் பக்கமா
உன் சேதியா செதுக்குறாங்க,
அதனால நீ வரலாறாகலாம் என நெனைக்கலாம்.
ஆபிசருங்க அடம்பிடுச்சி
மக்கள கட்டுப்படுத்த,
அலைஞ்சி திரியிராங்க,
எம் மக்க அத வேடிக்க பாக்க கூடுறாங்க,
அதனால நீ மின்னல்னு நெனைக்கலாம்,
ஊரடங்கை லீவுன்னு நெனைச்சி
கூட்டம் கூடி கும்மாளம் அடித்து,
உன்ன வெல குடுத்து வாங்குறாங்க,
எம் மக்களுக்கு
பாடத்த கத்து குடுத்துட்டு தான் அடங்குவன்னு
அதிகாரம் பன்னாத,
அதனால நீ உலக அதிபருன்னு நெனைக்காத,
நீ வந்த இடம் சரியில்ல,
அம்மையை வெரட்டி,
போலியோவை ஒழிச்சி,
உலகத்துக்கு நாங்க பாடம் எடுத்த
கத உனக்கு தெரியாதா,
நீ எத்தன வெர்சனா வந்தாலும்,
எம் மக்க நெனச்சா,
ஊரடங்கை மதிச்சா,
உன் தடம் கூட மிஞ்சாது,
சென்று விடு,
எத்தன உருவமா வந்தாலும்,
உமக்கு எமன் எம் மக்க
என்பதை மறவாதே!
- - - - - - - - - - - - - - - - - -
கொரோனாவை விரட்டுவோம்,
கட்டுப்பாடாய் இருப்போம்,
ஊரடங்கை மதிப்போம்,
கொத்து கொத்தாய் சாவதை தடுப்போம்,
#வீரா
No comments:
Post a Comment