Tuesday, 2 July 2019

உடைத்தெடுத்த முத்து

உடைத்தெடுத்த முத்து
________________________
பஞ்சத்தைப் போக்கிய முத்து,
பாமரனின் வயிற்றை நிரப்பிய மாணிக்கம்,
உடைத்தெடுத்த நெல்லின் உமியும்
பசுவிற்கு தீவனமாய் ஆனது!

இன்றதனை காண்பதே அரிதானது,
கல் உடைத்தும்,
மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தும்,
கானல் நீர்தான் மிச்சமானது!

பசுமை கானகம் காய்ந்து கருவாடாய் ஆனது,
ஏரி, குளம் வற்றி
வாய் பிளந்து மழை நீரை தேடுகிறது,
இதில் எங்கே பயிரிடுவது,
அதனால்தான் என்னவோ
நெகிழி அரிசியாய் உருமாறுகிறது!
அரசு வேடிக்கை பார்க்கிறது!
- - - - - - - - - - - - -
வீரா

No comments:

Post a Comment