Saturday, 23 June 2018

தெருக்கூத்து

முடப்புளியில் நடந்த #தெருக்கூத்தினை கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அழிந்து வரும் கலை ஒரு சில கலைஞர்களின் அர்ப்பணிப்பினால் உயிர்ப்புடன் உள்ளது,
#தெருக்கூத்து = #பாட்டாளிகளின் #பொழுதுபோக்கு
- - - - - - - - - - - - - - - - - -
#தெருக்கூத்துக்கு ஒரு கவிதை

உழைத்து உழைத்து
களைத்துப் போனான் உழவன்
உண்ட களைப்பு உறங்க அழைக்க,
தெருவில் தெருக்கூத்து
பொண்டு, பிள்ளைகளுடன்
ஆற்று மணலில் அமர்ந்து
ஆற அமர
ஹார்மோனிய பெட்டி அசைவின் இசையுடன்
சிஞ்சான் சத்தம் காதை பிளக்க
பப்பூன் அறிமுகத்துடன்
தொடங்கியது தெருக்கூத்து,
சின்னஞ் சிறுசுகள் பாயில் உறங்க
கிழங் கட்டைகள் அந்த கால ரசனையோடு
பல் போன வாயை திறந்தப்படி
வெத்தலை பாக்கை மென்னு துப்பியப்படி
ரசிப்பதும் அழகுதான்,
சினிமாவை மிஞ்சும்
சாகச காட்சிகள்
மின் ஒளிகளில்
கலைஞர்களின் மேக்கப்பும் அழகுதான்
இருட்டில் அமர்ந்து ரசிக்கும்
மக்களின் இருள் சூழ்ந்த
முகமும் அழகுதான்,
கிராபிக்ஸ் இல்லை
தொழில்நுட்பமும் இல்லை
காட்சிகளை கண் முன் கொண்டு வரும்
கலைஞர்களின் திறமையும் அழகுதான்,
தெருக்கூத்து நாடகமானது,
நாடகத்தில் இருந்து சினிமா பிறந்தது
சினிமா உலகத்தை ஆளுது,
என்னமோ
தெருக்கூத்து தான் பாட்டாளிகளின்
மனதை ஆளுது.

No comments:

Post a Comment