Sunday, 5 March 2017

தொட்டாச் சிணுங்கிகள்

தொட்டாச்சிணுங்கிகள்
-----------------------------------
உன்னை கரம் பிடிக்க ஆசை கொண்டேன்
என் வரவை அறிந்தே
சிங்காரியாய் சிரிக்கும் மலராய் பூத்தாய்
சிங்கம் போல நான் வந்தேன்
தொட்டாச்சிணுங்கியாய்
முகத்தை மூடிக் கொண்டாய்

மூடி மறைத்திட வேண்டாமடி
நானே உனக்கு மாலையிடுவேனடி
தேடி நான் விளையாண்டேனடி
நீ வெட்கப்படும் அழகை ரசிப்பேனடி
உனை தீண்டி மகிழ்கின்றேனடி
காணாமலே கவலையும்
நான் கொண்டேனடி

கவிதை ஒன்று எழுதினேன்
பாட்டாய் பாடினேன்
நான் தொட்டவுடன் ஏன் சுருங்கினாயோ
ஆசையோ அச்சமோ
விளங்கவில்லை எனக்கடி
என் மூச்சுக்காற்றில்
சொக்கிக் கிடப்பதேனடி

உயிராய் இருப்பதை அறிந்தே
இம்சை செய்கிறாய் மயிலே
பறவைகள் சிறகை அடித்தால் பறந்து விடும்
நீ  உறங்கிக் கொள்கிறாய்
உயிரையும் உன்னுடன் பிணைத்துக் கொள்கிறாய்
நீ எழும் வரை காத்திருப்பேனடி
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment